ஏழாம் அமர்வு – தொடர் 04

(நபிமார்களை விடவும் அலீ சிறந்தவரா? என்ற வாதத்தின் தொடர்…) மேலே கூறிய வசனத்தின்படி, ஹஸரத் அலீ (அலை) அவர்கள், விசேட நுபுவ்வத் மற்றும் வஹி அருளப்படல் ஆகிய குறிப்பான அம்சங்களைத் தவிர ஏனைய எல்லா சிறப்பம்சங்களிலும் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களோடு ஒன்றுபடுகிறார் என்பதை நிரூபித்துக் காட்டியபோது, அந்நேரத்தில், சிறப்பம்சங்கள், அந்தஸ்துகள், விசேடத்துவங்கள் ஆகிய எல்லாவற்றிலும் ஹஸரத் அலீ ஏனைய ஸஹாபா பெருமக்கள் மற்றும் உம்மத்தினர் ஆகியோரைவிடவும் சிறந்தவராக இருக்கிறார் என்பதையும் […]

ஏழாம் அமர்வு – தொடர் 04 Read More »

கறை படியா வரலாற்றைக் குறித்து ஐயமும், தெளிவும்

ஷீஆ இஸ்லாமிய நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துவதோடு, இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இஸ்லாமிய எழுச்சிப் போராட்டத்தை அர்த்தமற்றதாக மாற்றும் வகையில் இமாம் ஹுஸைன் மற்றும் கர்பலா சம்பவம் தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களையும், தெளிவுகளையும் இங்கே நாம் தருகிறோம். கேள்வி 01: இமாம் ஹுஸைன் (அலை) ‘இல்முல்கைப்’ எனும் மறைவான ஞானத்தைக் கொண்டிருந்தார் என்றால், நிச்சயமாக தான் ஷஹீதாகுவதை அறிந்திருப்பார். இந்நிலையில், அவர் கர்பலாவுக்குச் சென்று, மரணித்திருந்தால், அது தற்கொலை இல்லையா?. அவ்வாறே, அவர் இல்முல்கைப்பைப்

கறை படியா வரலாற்றைக் குறித்து ஐயமும், தெளிவும் Read More »

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும்

Disastrous ISIS and Takfirism நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1   ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் சாதித்திருப்பது என்ன? அனைத்துக்கும் முதலாக, அரச-சமூக மட்டத்தில் இஸ்லாமிய முன்மாதிரியை செயல்படுத்த வேண்டுமென உழைக்கும் முஸ்லிம்களுக்கு ISIS போன்ற தக்ஃபீரி குழுக்கள் மிகப்பெரிய பின்னடைவையும் நெருக்கடியையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான்

நாசகார ISISம் – தக்ஃபீரிசமும் Read More »

அல் குர்ஆனும் முதல் சிங்கள மொழிபெயர்ப்பும்

இலங்கை நீண்ட வரலாற்றுத் தொடரைக்கொண்ட ஒரு நாடு. 1972 ம் ஆண்டுக்கு முன் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. பிரதான ஆட்சி மொழியாக தமிழ் சிங்களம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆங்கிலமும் உண்டு. பல சமயங்களை உள்ளடக்கி சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர்,  இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆபிரிக்கர், வேடுவர் ஆகியோரின் தாயகமே இலங்கை. பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்ட இந் நாடு ஈழம் என்று தமிழர்களாலும் இலங்காபுரி என்று

அல் குர்ஆனும் முதல் சிங்கள மொழிபெயர்ப்பும் Read More »

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01

நூலின் முன்னுரை மானுட சமூகத்தின் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர் பற்றிய குறிப்புகள் பல்வேறு சமய நூற்களில் காணப்பட்ட போதிலும், அது குறித்த விளிப்புணர்வு அச்சமயங்களைப் பின்பற்றுவோரிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது. இஸ்லாமிய சன்மார்க் கத்திலும் கூட இது, ஷீஆ-சுன்னி கிரந்தங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுன்னி சமூகத்தில் இரண்டாம் நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் இது உள்ளடக்கப் பட்டுள்ளது. ஆனால், ஷீஆ சமூகத்தில் அவ்வாறல்ல, இது ஷீஆக்களாகிய எமது முதல்நிலை நம்பிக்கைசார்ந்த விடயங்களுள் ‘இமாமத்’ பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டதாகும். ‘இமாமத்’

மீட்பாளரின் வருகைக்கான நிபந்தனைகளும், அடையாளங்களும் (நூல்) 01 Read More »

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு

ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் பாகிருல் நிம்ர் அவர்கள், 2007ம் ஆண்டு கோடையில் சவூதி அரேபியாவின் அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களுக்கும் இடையேயான தொடர்பை சீர்செய்து, மேம்படுத்துவதற்கான திட்டமாக, மேலோட்டமான ஒரு அரசியல் வரைபைத் தொடங்கியிருந்தார். ஆயதுல்லாஹ் ஷேய்க் நிம்ர் அவர்கள் இத்திட்டத்தை ‘தாராளம் மற்றும் சுயகௌரத்திற்கான மனு’ எனும் பெயரில், சவூதி அரேபியாவின் சுஊத் குல அரசாங்கத்திடம் முன்வைத்தார். அதனையடுத்து, அது உருவாக வழிவகுக்கக் கூடிய முனைப்பும், அணுகுமுறையும் கொண்டதான தனது செயற்திட்டத்தை, ஜும்ஆ பிரசங்கம் ஒன்றில் விளக்கிய

தாராளம் மற்றும் சுயகௌரவத்திற்கான மனு Read More »

நமது அரசியல் சிந்தனை – 01

அபூ முதஹ்ஹரி 2008ம் ஆண்டு ஒரு விடயமாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, மெய்யியல் இளமானிக் கற்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த ‘அரசியல் மெய்யியல்’ பாடத்திற்கான கையேடு எனக்குக் கிடைத்தது. அதில் அரசியல் மெய்யியல் வரலாறு குறித்து பேசப்பட்டிருந்தது. அரசியல் மெய்யியல் துறைக்கு இஸ்லாமிய அறிஞர்களின் பங்களிப்பை விளக்கியவிதம் சற்று அழுத்தமாக அமைந்திருந்தது. மேலும், அரசியல் மெய்யியலுக்குப் பங்காற்றிய உலக அறிஞர்களின் தொடரில் ‘இப்னு கல்தூன்’ சுட்டிக்காட்டப்பட்டிருந்தார். அதிலிருந்து, சுமார் ஆறு வருடங்கள் கழித்து (2014ஆம் ஆண்டு) இஸ்லாமிய

நமது அரசியல் சிந்தனை – 01 Read More »

Scroll to Top
Scroll to Top