மூலாதாரம்

துன்பத்தின் வாயில்

துன்பத்தின் வாயில் இமாம் சாதிக் (அலை) அவர்கள் அருளினார்கள்: எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படாமலும், அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருக்கிறதோ, அந்த வீட்டில் மூன்று விடயங்கள் உருவாகிவிடுகின்றன: 1) அவரின் சௌபாக்கியம் (பரகத்) குறைந்துவிடுகிறது. 2) வானவர்கள் அந்த வீட்டை விட்டும் விலகிச் சென்றுவிடுகிறார்கள். 3) அவ்வீட்டினுள்ளே ஷைத்தான் நுழைந்து விடுகிறான். (இதன் மூலம் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும், வேற்றுமைகளையும் ஷைத்தான் உருவாக்கிவிடுகிறான்). (அல் காபீ, பாகம் 2, பாகம் 499, ஹதீஸ் இலக்கம் 01)

துன்பத்தின் வாயில் Read More »

இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல்

  இமாம் பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஸஃதுல் கைர் என்பவருக்கு மடலொன்றை பின்வருமாறு எழுதியனுப்பினார். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். உம்மை தக்வா எனும் இறையச்சத்தைக் கொண்டு உபதேசிக்கின்றேன். அழிவிலிருந்து ஈடேற்றமும், இறைவன் பக்கம் மீளக்கூடிய வழியும் அதிலே இருக்கிறது.’ (அல்-காபி, பாகம் 8, பக்கம் 52) ஆன்மீகத் தலைவர் இமாம் காமினியின் விளக்கவுரை: ஸஃத் இப்னு அப்துல் மலிக் என்பவர், ‘ஸஃதுல் கைர்’ என்று பிரபல்யமானவர். பரிசுத்த இமாம்களின் ஐந்தாவது இமாமாகிய இமாம் பாக்கிர் (அலை) அவர்கள்

இமாம் பாக்கிர் அவர்களிடமிருந்து ஒரு ஆத்மீக மடல் Read More »

யார் வறியவர்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தனது தோழர்களிடம் ‘யார் மிகவும் வறியவர்?’ என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள் ‘ பண வசதியற்ற, தனது அன்றாட தேவையினை பூர்த்தி செய்ய முடியாதவர்’ என பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள் ‘ நீங்கள் கூறுபவர் உண்மையில் வறியவர் அல்ல. உண்மையில் வறியவர் யாரெனில் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் பிற மனிதர்களின் உரிமைகளை தன்னுடைய கழுத்தில் சுமந்தவாறு காணப்படுபவராவார். இவர் யாரெனில், பிற மனிதர்களுக்கு அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்தவர்; பிறருடைய

யார் வறியவர்? Read More »

ஞாபக சக்தியை அதிகரியுங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விடயங்கள் மறதியினைப் போக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது. அவைகளாவன, 1. திருக்குர்ஆனை ஓதுதல். 2. பல் துலக்கல். 3.நோன்பு நோற்றல். (மீஸானுல் ஹிக்மா : பாகம் 1, பக்கம் 646) தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

ஞாபக சக்தியை அதிகரியுங்கள் Read More »

மூன்று கண்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அலியே! நாளை மறுமையில் அனைத்து கண்களுமே அழுதவாறு காணப்படும்; ஆனால், மூன்று கண்களைத் தவிர. அவையாவன, 1. இறைபாதையில் கண் விழித்த கண்கள். 2. இறைவன் தடுத்தவற்றைப் பார்க்காமல் தவிர்ந்து கொண்ட கண்கள். 3. இறையச்சத்தினால் அழுத கண்கள். (துஹ்புல் உகூல்: பக்கம் 8 ) தொடர்புகளுக்கு: info@peace.lk Facebook Twitter Google-plus Instagram Dribbble Youtube

மூன்று கண்கள் Read More »

Scroll to Top
Scroll to Top