பொதுவானவை

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம்

பாடசாலையில் வாசிக்க முடியாத ஒரு மாணவன் எழுத முடியாதவனாக இருப்பான். வாசிப்புத் திறணை ஆரம்பத்திலிருந்து விருத்தி செய்ய வேண்டும். ஆரம்பப் பருவத்தில் வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளை பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். பாடங்களை கற்க முடியாமை, பரீட்சைக்கு விடையளிக்க முடியாமை, கல்வியில் பின்தங்குதல், மனவெழுச்சிப் பிரச்சினைககள் போன்றன ஏற்பட்டு பாடசாலைக் கல்வியில் அப்பிள்ளைக்கு வெறுப்பு ஏற்படும். இதனால் பாடசாலையிலிருந்து இடைவிலகக் கூடிய பாதிப்பு ஏற்படும். எனவே வாசிப்பை கட்டாயப்படுத்த வேண்டிய தேவை பெற்றோருக்குண்டு உலகம் […]

கல்வியில் மாணவர்கள் உயர்வதற்கு வாசிப்புப் பழக்கமே அத்திவாரம் Read More »

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா?

இஸ்லாமியர்களின் கலாசாரத்திலும் ஆன்மீகத்திலும் நாற்பது எனும் எண்ணிக்கை தனித்துவம் பெற்றதாகக் கணிக்கப்படுகிறது. ஆன்மீக ரீதியில் உயரிய அந்தஸ்துகளை அடைந்து கொள்வதற்காக நாற்பது நாட்களை ஒதுக்கி வழிபாடுகளில் ஈடுபடுவது ஆன்மீக செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெற்றதோர் அம்சமாகும். அவ்வாறே 40 நபிமொழிகளை மனனம் செய்வது, 40 வயதில் அறிவு பக்குவம் அடைவது, 40 விசுவாசிகளுக்காக பிரார்த்திப்பது, 40 இரவுகள் விழித்திருப்பது போன்ற பல வழக்காறுகளை நாம் சமுதாயத்தில் காண்கிறோம். இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் முஹர்ரம்

‘அர்பயீன்’ – ஒரு சம்பவமா அல்லது கலாசாரத்தின் வெளிப்பாடா? Read More »

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம்

Introduction to Shia Islamic Sects (Brief History, Shia in the World and Shia in Sri Lanka)   ஷீஆ இயக்கத்தின் தோற்றம் (ஷீஆ சிந்தனை ஒரு இயக்கமாக உருவெடுத்தல்) இஸ்லாம் மார்க்கத்தில் சமூக மற்றும் அரசியல் காரணமாக ஏற்பட்ட பிளவின் அடிப்படையில் முதலாவதாக தோன்றிய பிரிவுகள் 1. சுன்னி 2. ஷீஆ 3. கவாரிஜ் ஆகிய மூன்றுமாகும். இது கி.பி 657 இல் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ‘சிஃப்பீன்’ எனும் யுத்தத்தை

ஷீஆ இஸ்லாமியப் பிரிவு – ஒரு சுருக்கமான அறிமுகம் Read More »

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது

Message to the Palestinian nation for their victory over the Zionist regime (இஸ்லாமிய புரட்சியின் தலைவரான இமாம் கமேனி 2021 மே 21 அன்று விடுத்த செய்தியின் முழு வடிவம் பின்வருமாறு: ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய தேசத்திற்கு எதிரான 12 நாள் போரில் ஹமாஸ் வெற்றி பெற்ற சந்தர்ப்பத்தில் இந்த சித்தி விடுக்கப்படுகிறது.) அளவற்ற வற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால். சக்திவாய்ந்த, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனத்திற்கு எனது வாழ்த்துக்கள். தைரியமாகவும் வைராக்கியத்துடனும்

பாலஸ்தீனர்களின் ஒருங்கிணைந்த எழுச்சிக்கு முன் சியோனிஸம் சக்தியற்றது Read More »

உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம்

Omar Khayyam a Persian polymath, philosopher, and great poet   பாரசீக கவிதை இலக்கியத்திற்கு அளப்பரிய பங்களிப்புகளை நல்கியுள்ள உமர் கய்யாமின் படைப்புகள் உலக இலக்கியத்துறைக்கு அதிகம் பங்காற்றியுள்ளன. இவரது கவிதைகள் 70 இற்கும் மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் உலகப் புகழ்பெற்ற கவிஞராக விளங்குகின்ற அதேவேளை பதினோராம் நூற்றாண்டின் கணிதவியலாளராகவும் வானியலாளராகவும் பாரசீகத்தில் திகழ்ந்துள்ளார். அவர் கவிதை இலக்கியத்திற்கும், கணிதவியல் மற்றும் வானியல் துறைகளுக்கும் அளித்துள்ள பங்களிப்புகள் இன்றும் உயிரோட்டம் மிக்கவையாகவே

உலகம் போற்றும் கவிதைகளின் சொந்தக்காரர் உமர் கய்யாம் Read More »

சர்வதேசச் சட்டம் | International Law

சர்வதேசச் சட்டம் சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். பழங்குடி மக்கள் தமது குடியிருப்புப் பகுதிகள், நீர்த்தேக்கங்கள், வேட்டையாடும் பகுதிகள், யுத்தம், கலப்புத் திருமணம் போன்றவற்றிற்குப் புரிந்துணர்வினடிப்படையிலான நடைமுறைகளைத் தமக்கிடையில் ஏற்படுத்தியிருந்தனர். கிரேக்க அரசுகளில் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் மக்களின் உயர்நடத்தையாக இருந்தது.

சர்வதேசச் சட்டம் | International Law Read More »

மனித உரிமைகள் தினம் | Human Rights Day

மனித உரிமைகள் தினம் – December 10     மனித உரிமைகள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிந்து இருந்தாலும் இன்றைய உலகில் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலே அவற்றை அனுபவித்து வருகின்றனர். இன்னும் சிலர் தனக்கான உரிமைகளைப் பற்றி தெரியாமலேயே அடிமைகளாக வாழ்கின்றனர். அந்த வகையில், மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.

மனித உரிமைகள் தினம் | Human Rights Day Read More »

Scroll to Top
Scroll to Top