இமாம் ஹுஸைன்

‘ஆஷூரா தினம்’

ஏன் நாம் துக்கம் அனுஷ்டிக்கிறோம் ! ஆஷூரா தினம் ‘ஹிஜ்ரி வருடம்’ என்று அழைக்கப்படுகின்ற இஸ்லாமிய வருடக்கணிப்பீடு முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் அறபு தேசத்தின் மக்கா நகரிலிருந்து மதீனா நகருக்கு புலம்பெயர்ந்து சென்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்குகிறது. அவ்வருடத்தின் முதலாவது மாதம் முஹர்ரம் என்றழைக்கப்படும். இம்மாதத்தின் பத்தாவது நாள், ‘ஆஷூரா’ ஆகும். என்றாலும், ஷீஆ முஸ்லிம்கள் இந்த நாளை முக்கியத்துவப்படுத்தி ‘ஆஷூரா தினம்’ என்ற பெயரில் அத்தினத்தை ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு முக்கியமான […]

‘ஆஷூரா தினம்’ Read More »

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா?

உண்மையை ஏற்றுக்கொள்வோம் இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? நச்சுப்பிரசாரம் முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்த குடும்பத்தினருடன் பரம்பரை பரம்பரையாக பகைமை பாராட்டிவரும் உமையாச் சண்டாளர்களின் எச்சசொச்சங்களான வஹ்ஹாபியர்கள் அப்பரிசுத்த குடும்பத்தினருக்கு எதிராக மீண்டுமொரு கர்பலாப்போரை ஆரம்பித்து விடுவார்கள். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா எழுச்சிப் போராட்டத்தை அக்கால கலீபாவுக்கு எதிரான கிளர்ச்சியென்றும், கலகம் என்றும் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்குவதற்காக ஹுஸைனால் மேற்கொள்ளப்பட்ட குழப்பமென்றும் நச்சுப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஹுஸைன்

இமாம் ஹுஸைனைக் கொன்றவர்கள் ஷீஆக்களா? Read More »

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும்

அஷ்-ஷேய்க் அஜ்மீர் முஸ்தஃபவீ இறைவன், உலகின் முதல் மனிதர் ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் நோக்கில், தனது வானவர்களோடு உரையாடுகிறான். தான் பூமியில் தனது பிரதிநிதியைப் படைக்கப்போவதாக மலக்குகளிடம் கூறிய தருணத்தில், மலக்குகள் இறைவனைப் பார்த்து ‘இரத்தம் ஓட்டக்கூடியவர்களையா படைக்கப்போகிறாய்!’ என ஆச்சரியத்தோடு கேட்டனர். அப்போது, இறைவன் ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறிவிட்டு, முதல் மனிதரான ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கிறான். (பகரா:30) மனிதப் படைப்பின் முதல் கட்டமாக இறைவனுக்கும், அவனது

கர்பலாப் புரட்சியும் மானுடத்துவத்தின் அடிப்படைகளும் Read More »

உரமான உதிரங்கள்

கர்பலாக்களத்தில் உயிர்நீத்த இறைத்தூதரின் உறவுகள் உஸ்தாத் மர்ஸுக் 1.இமாம் ஹுஸைன் பின் அலீ (அலை) இமாம் அலீ (அலை) அவர்களுக்கும், ஹஸரத் பாத்திமா (அலை) அவர்களுக்கும் ஹிஜ்ரி நான்காம் வருடத்தில் ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாளில் ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தைக்கு, அதன் பாட்டனார் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘ஹுஸைன்’ என்று பெயரிட்டார்கள். மேலும், செய்யிதுஷ் ஷுஹதா, அபூஅப்தில்லாஹ் என்ற சிறப்புப் பேரையும் கொண்டவராக இமாம் ஹுஸைன் (அலை) திகழ்ந்தார். இறைத்தூதரின் மிகவும் பிரியத்திற்குரியவராக இமாம்

உரமான உதிரங்கள் Read More »

இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள்

எம்.அஜ்மீர் விலங்கினத்தைச் சேர்ந்தவனாக இருக்கும் மனிதன், தான் கொண்டிருக்கும் பகுத்தறிவு எனும் விஷேடத்துவத்தின் மூலமாக ஏனைய விலங்குகளிலிருந்து தனித்துவத்தைப் பெறுகிறான். பகுத்தறிவு, சமூகவிலங்குகளைப் போன்று, தனியன்கள் பல ஒன்றாக இணைந்து, கூட்டாக வாழ்வதிலே மனிதனுக்கு வழிகாட்டுகிறது. தனித்துவாழும் ஏனைய விலங்குகளைப் போன்று, சமூகப் பிரவேசமின்றி வாழ்வதற்கு மனிதனால் முடியாது என்பதை, அதுவே எமக்கு உணர்த்துகிறது. சமூகவிலங்காக இருக்கும் ஒரு மனிதன், பிறமனிதர்களோடு ஒட்டிவாழும் போதே, அவர்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டு, நல்லுறவுகள் வளர்கின்றன. தனியன், குடும்பம்,

இமாம் ஹுஸைனின் சமூக மேம்பாட்டுச் சிந்தனைகள் Read More »

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா நடைபவனி

அஷ்-ஷேய்க் ஜே.அஷரப் அலீ சுவனத்தின் வாரிசான இமாம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், தூய சன்மார்க்கம் எனும் ரோஜாவை மலரச் செய்வதற்கு, தமது பிள்ளைகள், நண்பர்கள் என பலரது ஒத்துழைப்போடு, கர்பலாப் பயணத்தில் காற்தடம் பதித்திருந்தார். கர்பலாவில் தனக்கும், தன்னோடிருக்கும் எவருக்கும் மனித உரிமைச் சட்டங்கள் அறவே நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்பதாக நபிமார்களாலும், வலிமார்களாலும் குறிப்பிடப்பட்ட முன்னறிவிப்பைத் தெளிவாக அவர் விளங்கியிருந்தார். இதன் தொடரிலே, ஹரம் ஷரீஃபின் தூய்மையை அறியாதோர் உமையாக்கள் என்பதால், அபயமளிக்கப்பட்ட இப்புனிதத் தலத்தின் எல்லைக்குள்

இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் கர்பலா நடைபவனி Read More »

மூன்றாம் ஒளியின் பிறந்த நாள் வாழ்த்து

  ஷஃபான் 03ம் நாளை முன்னிட்டு… மனித விடுதலை பெற்றநாள் இது நண்பர்களை இனம் கண்ட நாள் இது உண்மையான கொண்டாட்டம் பெற்றநாள் இது கருணையான ஷஃபான் மாதம் இது மஃசூம்களின் இதயம் மகிழ்ச்சியில் மூழ்கிய நாள் இது ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாள் இது உணர்வுகள் உணர்ச்சி பெற்ற நாள் இது கண்ணியம் தலைதூக்கிய நாள் இது தன் கருணையை இறைவன் வழங்கிய நாள் இது மேகங்கள் குடையாய் மாறிய நாள் இது நிலவுகள் ஒளியை

மூன்றாம் ஒளியின் பிறந்த நாள் வாழ்த்து Read More »

Scroll to Top
Scroll to Top