ரமழானும், சுய முன்னேற்றமும்

 

அருள்மிகு ரமழான் மாதமானது, சுய-முன்னேற்றத்திற்கு சிறந்ததோர் வாய்ப்பாகும். உண்மையில் நாம் ஒரு மூலப்பொருள் போன்றவர்கள். நாம் நம்மீது கவனம் செலுத்தி செயற்பட்டால், இம் மூலப்பொருளை மிகச்சிறந்த வடிவங்களுக்கு மாற்றியமைக்க முடியும். அவ்வாறு செய்தால், நாம் நமது வாழ்க்கையில் மிகவும் அவசியமான காரியமொன்றை நிறைவேற்றியோராக ஆகிவிடுவோம். இதுவே வாழ்க்கையின் இலக்காகும்.

அறிவுரீதியாகவும், செயற்பாட்டுரீதியாகவும் தங்களின்மீது கவனம் செலுத்தி செயற்படாதோருக்கு கைசேதம்தான். இவர்கள், இப்பூலோகத்திற்கு வந்திருந்த அதேநிலையிலே, ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாளில் ஏற்படுகின்ற தோல்விகள், சிதைவுகள், அழிவுகள், சீர்கேடுகள் மற்றும் குழப்பங்கள் என்பவற்றோடு மீண்டும் இவ்வுலகை விட்டும் சென்றுவிடுகிறார்கள். (எவ்வித வெற்றிகளோ, முன்னேற்றங்களோ, சிறப்புகளோ அவர்களின் வாழ்க்கையில் கிடையாது.)

அருள்மிகு ரமழான் மாதம், மிகச்சிறப்பானது. சுய-முன்னேற்றத்திற்குரிய இப்படியான சாத்தியத்தை இம்மாதத்திலே நாம் அடைந்துகொள்ளும் வகையில்தான் அல்லாஹு தஆலா இவ்வாய்ப்பை எனக்கும், உங்களுக்கும் அருளியிருக்கிறான். அவ்வாறே, இம்மாதத்தின் நேரங்களும் மிகவும் அருள் நிறைந்தவை. அல்லாஹு தஆலா, இயற்கையாகவே இம்மாதத்தினுடைய நேரங்களையும் தருணங்களையும் இவ்வாறு ஆக்கியிருக்கிறான் என்றவகையில் இது மிகவும் பெறுமதிமிக்கதே.

-இமாம் செய்யித் அலீ காமினீ-

Scroll to Top
Scroll to Top