ரமழானும், ஆன்மீகப் பயிற்சியும்

 

நோன்பு இருத்தலின் நோக்கமே, ‘தக்வா’ எனும் இறைபக்தியை உருவாக்கிக்கொள்வதாகும். அதுவே, அருள்மிகு ரமழான் மாதத்தில் எமது மிகப்பெரும் அடைவுகளில் ஒன்றாக இருக்கிறது. இம்மாதத்தின் அருளால், எமது நடத்தையில், எமது பேச்சில், எமது சிந்தனை-உணர்வுகளில் ‘தக்வா’ எனும் இறைபக்தியை, அப்பாரிய சுய-கட்டுப்பாட்டை அமுல்படுத்தவும், அதன்மூலம் மானுட சம்பூரணத்துவத்தோடு எம்மை ஒருங்கிணைக்கவும் நம்மால் முடியும்.

அல்லாஹு தஆலா, ‘தர்பிய்யா’ எனும் நெறிப்படுத்தலின்பால் தேவையுடையவனாக மனிதனைப் படைத்துள்ளான். மனிதனை புறவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது. அவனை அகவயமாகவும் நெறிப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஆத்மீக விடயங்களிலே இந்நெறிப்படுத்தலானது, முதலாவது அவனது சிந்தனையையும், சிந்தனைத் திறனையும் நெறிப்படுத்துவதாகும். இவ்வகை நெறிப்படுத்தலே, ‘தஃலீம்’ எனும் கற்பித்தலாக இருக்கிறது.

இரண்டாவது, ஆத்மாவையும், ஆத்ம திறன்களையும், கோபம்-காமம் போன்ற உணர்வுகளையும் நெறிப்படுத்துவதாகும். இவ்வகை நெறிப்படுத்தலே, ‘தஸ்கிய்யா’ எனும் ஆத்மாவை பரிசுத்தப்படுத்தலாகும்.

-இமாம் செய்யித் அலீ காமினீ-

Scroll to Top
Scroll to Top