ஒரு கிறிஸ்தவ அறிஞரின் பார்வையில் இமாம் அலியின் பண்புகள்

Attributes of Imam Ali from the Perspective of a Christian Scholar

ஹிஜ்ரி 40 , ரமலான் பிறை 19 அன்று பஜ்ர் நேரத்தில் இமாம் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தொழுதுகொண்டு இருக்கையில் அப்துர்ரஹ்மான் இப்னு முல்ஜிம் (லானதுல்லாஹ்) என்ற காரிஜி ஒருவனால் விஷம் கலந்த வாளால் தலையில் வெட்டப்பட்டு ரமலான் பிறை 21 ல் ஷஹீத் ஆனார்கள்

By George Jordac

மூலம்: ஜார்ஜ் ஜோர்டாக்

இந்த கட்டுரை இமாம் அலி பற்றி ஜார்ஜ் ஜோர்டாக் எழுதிய “மனித நீதியின் குரல்” என்ற முழு புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. எனவே, இது இமாம் அலியின் சில குணங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த சுருக்கமான கட்டுரையில் அவை அனைத்தையும் பட்டியலிட முடியாது.

மனிதர்களின் தனிப்பட்ட குணங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையது மற்றும் அவை ஒவ்வொன்றும் மற்றவர்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், மனிதர்களின் மற்றும் குறிப்பாக சிறந்த ஆளுமைகளின் இயல்பு மற்றும் பழக்கவழக்கங்களை முழுமையாக விளக்குவது மிகவும் கடினம்.

ஒவ்வொரு குணமும் மற்றொரு குணத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு பழக்கமும் மற்றொரு பழக்கத்திற்குக் காரணமாகும் மற்றும் மூன்றில் ஒன்றின் விளைவு, அல்லது இரண்டின் விளைவு மற்றொன்றின் விளைவாகும்.

எனவே, அலியின் தனிப்பட்ட குணங்களில் சிலவற்றை வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, அவற்றை ஒரே ஆளுமைக்குள் ஒப்பிட்டுப் பார்த்து, இந்த அறிவார்ந்த பகுப்பாய்வின் மூலம் சில முடிவுகளை எடுக்க நான் முயற்சிக்கிறேன்.

இறையச்சம் மற்றும் தன்னடக்கம்

அலி தனது பக்தி மற்றும் தன்னடக்கத்திற்காக நன்கு அறியப்பட்டவர். அவர் மிகவும் இறையச்சம் கொண்டவராக இருந்ததால், அவர் தனது சொந்த நலனுக்காகவும், தனது சொந்த மக்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பல விஷயங்களைச் செய்தார்.

அலியின் இறையச்சம், தங்கள் ஆன்மாவின் பலவீனத்தின் காரணமாக வழிபாட்டில் ஈடுபடும் மற்ற பக்திமான்களினது போல் சூழ்நிலைகளின் விளைவோ அல்லது வாழ்க்கையின் இடர்பாடுகளில் இருந்து தப்பித்து, மக்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவோ, அல்லது மக்கள் மூதாதையர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஒரு விதியாக மதிக்கிறார்கள் என்பதால் ஏற்பட்டதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், அவர்களின் மூதாதையரின் வாழ்க்கையினை பின்பற்றிய நிகழ்வுகளின் விளைவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன,

உண்மை என்னவென்றால், இமாம் அலியின் இறையச்சம் ஒரு உறுதியான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் படைப்பின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பரஸ்பர பிணைப்புடன் இணைக்கப்பட்டதாக மற்றும் விண்ணையும் மண்ணையும் ஒன்றோடொன்று பிணைப்பதாய் இருந்தது.

அவரது வழிபாடானது உண்மையில் மனித வாழ்க்கை மற்றும் செழிப்புக்காக ஒரு தொடர்ச்சியான முயற்சியாகவும், கேளிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இருந்தது. அவர் தீமை மற்றும் துன்மார்க்கத்தின் அனைத்து அம்சங்களையும் எதிர்த்துப் போராடினார். ஒருபுறம் அவர் நயவஞ்சகம் மற்றும் சுயநலத்திற்கு எதிராகவும், மறுபுறம் கேவலமான செயகள், இழிநிலை, இயலாமை மற்றும் அந்த நாட்களில் மக்களிடம் இருந்த ஏனைய தீய குணங்கள் அனைத்துக்கும் எதிராகவும் போராடினார்.

அலியின் கூற்றுப்படி, இறையச்சத்தின் சாராம்சம் என்னவென்றால் உண்மை மற்றும் நீதிக்காக ஒருவரின் உயிரை தியாகம் செய்ய துணிவதாகும். அவர் இவ்வாறு கூறினார்: “உங்கள் நம்பிக்கை உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், பொய் உங்களுக்கு ஆதாயத்தைத் தந்தாலும், பொய்யை விட சத்தியத்தை நீங்கள் விரும்பக்கூடிய அளவில் உங்கள் இறையச்சம் இருக்க வேண்டும்”.

அவருடைய இறையச்சம் எவ்வாறு இருந்ததென்றால், அவர் ஏனையோருக்கு போதித்த அதே வகையிலேயே இருந்தது. இந்த உண்மையின் காரணமாக அவர் தியாகி ஆனார், மேலும் உயிருள்ளவர்களுக்கு “தியாகி” என்ற பட்டத்தை வழங்க முடிந்தால், அவர் உயிருடன் இருந்தபோதும் உண்மை மற்றும் நேர்மையின் பாதையில் ஒரு தியாகி என்று கூறலாம்.

இமாம் அலியின் வணக்கம்

இமாமின் இறையச்சத்தை ஒருவர் கவனமாகப் ஆராய்ந்தால், அரசியலிலும் சரி, ஆட்சி செலுத்தியத்திலும் சரி வணக்க வழிபாடுகளில் அவர் உறுதியாகக் கடைப்பிடித்த ஒரு சிறப்பான வழிமுறை அவற்றில் இருந்ததை அவர் அறிந்துகொள்வார். எல்லாம் வல்ல இறைவனின் முன் நின்றபோது, ஒரு கவிஞன் இயற்கையின் அழகில் தொலைந்து போவது போல, அவரது முழு கவனமும் தியானத்தில் இருக்க செய்தார்.

அலியின் பின்வரும் கருத்து, இறைவனை வழிபடுபவர்களுக்கும், இறையச்சத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் மிகவும் சிறந்த அறிவுறுத்தலாக இருக்கிறது: “ஒரு பிரிவினர் இறைவனின் ஆசியை பெறுவதற்காக வழிபடுகிறார்கள், இது வணிகர்களின் வழிபாடு, மற்றொரு குழு அவரது பயத்தின் காரணமாக இறைவனை வணங்குகிறது. இது அடிமைகளின் வழிபாடு. மூன்றாவது குழு அவரை நன்றியுடன் வணங்குகிறது. இது சுதந்திர மனிதனின் வழிபாடு”

ஏனைய நபர்களைப் போலல்லாமல், இமாமின் வழிபாடு பயத்தின் காரணமாக இருக்கவில்லை, மேலும் அது சொர்க்கத்தைப் பெறுவதற்கான எதிர்பார்ப்புடன் செய்யப்படும் வணிகரின் வழிபாடு போன்றதும் அல்ல. மறுபுறம், பெரிய மனிதர்கள் எல்லாம் வல்ல இறைவன் முன் நிற்கும்போது, அவர்கள் தங்களை சாந்தமாகவும், அவருடைய மோசமான அடிமையாக இருப்பதாக கருதிக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருப்பதைக் காண்கிறார்கள். இந்த வழிபாட்டின் அடிப்படை காரணம், மனசாட்சி மற்றும் ஆன்மீக பரிபூரணம்.

அலி வழங்கிய அதே நிலைப்பாட்டை வணக்க வழிபாட்டிற்கு ஒப்புக்கொள்பவர் நிச்சயமாக வாழ்க்கையை அலி எவ்வாறு பார்த்தார்களோ அதே வழியில் பார்ப்பார். அத்தகைய நபர் உலக ஆதாயங்களுக்காகவும் நிலையற்ற இன்பங்களுக்காகவும் வாழ்க்கையைத் தேட மாட்டார். மறுபுறம், அவர் உயர்ந்த ஒழுக்கத்தை அடைவதற்கும் தனது இயல்புக்கு இணங்கக்கூடிய முடிவுகளை அடைவதற்கும் அதை நாடுகிறார். இந்த காரணத்திற்காகவே அலி உலகில் இறையச்சத்தைத் தேர்ந்தெடுத்தார், புகழையும் பகட்டையும் நாடவில்லை. அவர் தனது செயல்கள், வார்த்தைகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றின் விஷயத்தில் எப்படி உண்மையாக இருந்தாரோ, அதே போல் இறையச்சம் என்ற விஷயத்திலும் அவர் உண்மையாக இருந்தார்.

ஆடம்பர வாழ்க்கையில் அக்கறையற்றவர்

அவர் ஆட்சியின் மீதும், பிறரால் மிகவும் விரும்பப்படும் பிற விஷயங்களிலும் எப்படி அக்கறையற்றவராய் இருந்தாரோ, அவ்வாறே இவ்வுலக இன்பங்களிலும் அவர் விருப்பம் கொண்டிருக்கவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு குடிசையில் வசித்து வந்தார், அதுவே அவரது அரச அலுவலகமாகவும் இருந்தது. அவரது ஆட்சி அரச வடிவில் இல்லாமல் கலிபா ஆட்சி முறையில் இருந்தது. அவரது உணவு மிகவும் சாதாரணமானதாக இருந்தது; தனது மனைவியால் அரைத்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பார்லி ரொட்டியை சாப்பிட்டார். நிச்சயமாக அவரது ஆளுநர்களும் அதிகாரிகளும் சிரியா, எகிப்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் ஆடம்பர பொருட்களை பயன்படுத்தினர். பெரும்பாலும் தன் மனைவிக்கு மா அரைக்கும் சிரமத்தை கொடுக்காமல், இந்த வேலையை தானே செய்து வந்தார். அவர் விசுவாசிகளின் தளபதியாக இருந்த போதிலும், முழங்காலால் அழுத்தி உடைக்கக்கூடிய அளவுக்கு கடினமான மற்றும் உலர்ந்த ரொட்டியை அவர் சாப்பிட்டார். மிகவும் குளிராக இருந்தபோது, ​​அந்த குளிர் பருவத்திற்கான ஆடைகள் எதுவும் அவரிடம் இல்லை, மெல்லிய கோடை ஆடைகளுடன் திருப்தி அடைந்தார்.

நீதி தவறாமை

அந்தாராவின் மகன் ஹாரூன் தனது தந்தையை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறுகிறார்: “குர்னாக் அரண்மனைக்கு குளிர்காலத்தில் நான் அலியின் முன்னிலையில் சென்றேன், அவர் பழைய ஆடை அணிந்து குளிரில் நடுங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டேன். நான் அவரிடம் : ஓ விசுவாசிகளின் தளபதி அவர்களே! இறைவன் உங்களுக்கு பொதுக் கருவூலத்திலும் ஒரு பங்கை நிர்ணயித்துள்ளான், அவ்வாறிருக்க நீங்கள் ஏன் இந்த நிலையில் வாழ்கிறீர்கள்” என்று கேட்க. அவர் இவ்வாறு பதிலளித்தார்: “உங்கள் (அதாவது பொது) சொத்தில் எதையும் நான் எடுக்க மாட்டேன் என்று நான் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன். நான் அணிந்திருக்கும் இந்த மேலங்கி மதீனாவில் இருந்து வரும்போது கொண்டு வந்த ஆடைதான்”, என்றார்கள்.

அவர் இப்னு முல்ஜிமின் கைகளால் வெட்டப்படும் வரை அவர் தனது சிறிய வீட்டில் நாட்களைக் கழித்தார். அவர் கலீஃபாவாக இருந்தாலும், அவரைப் போல எளிமையாகவும் இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களில் எவரையும் நான் அறியவில்லை.

உண்மையில் உலக சுகபோகங்களில் அவருக்கு இருந்த அக்கறையின்மை அவரது வீரத்துடன் தொடர்புடையது. இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் அது சரியான பார்வை அல்ல. உண்மையில், அவரது வீரம் என்பது அவரது ஆன்மாவின் மகத்துவத்தை உள்ளடக்கிய, பெரிய இலக்கை அடைவதற்கான முயற்சிகளையும், தனது சொந்த நலன் பற்றி கவலைப்படாமல் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் உதவுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆதரவற்ற மற்றும் வறிய மக்கள் பலர் வசிக்கும் ஒரு நகரத்தில் வாழும் போது வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிக்க அவர் தயாராக இல்லை என்பதே உண்மை.

அலி தனக்காக ஒரு கல்லின் மீது கல்லையோ அல்லது ஒரு செங்கல் மீது ஒரு செங்கலை வைக்கவில்லை என்றும், மேலும் ஒரு நாணலுடன் ஒரு நாணலை இணைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் நாணலால் செய்யப்பட்ட ஒரு வீட்டைக் கூட தனக்காகக் கட்டவில்லை. அவருக்கு வெள்ளை மாளிகை கட்டப்பட்டிருந்தாலும், ஏழை மக்கள் குடியிருக்கும் மரக் குடிசைகளை விட சிறந்த வீட்டில் வசிக்க அவர் விரும்பாததால் அவர் அதை தனது வாசஸ்தலமாக அமைத்துக் கொள்ளவில்லை. அலி தனது வாழ்க்கையை வழிநடத்திய விதம் அவரது நன்கு அறியப்பட்ட கருத்தில் பிரதிபலிக்கிறது: “மக்கள் என்னை விசுவாசிகளின் தளபதி என்று அழைப்பதில் நான் திருப்தியடைந்து அவர்களின் வாழ்க்கை துயரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாமா?”

அலியின் கலிபா ஆட்சியின் போது இஸ்பஹானில் இருந்து சில அன்பளிப்புகள் கிடைக்கப்பெற்றன. அதை அவர் ஏழு பகுதிகளாகப் பிரித்தார். அதில் ஒரு ரொட்டியும் இருந்தது, அதையும் ஏழு துண்டுகளாக உடைத்தார்.

பரந்த மனப்பான்மை மற்றும் மன்னிக்கும் தன்மை

எல்லா விடயத்திலும் அலியின் ஆளுமை பிரதிபலித்தது மற்றும் அதற்குத் தேவையான ஒவ்வொரு குணத்தையும் அது உள்ளடக்கி இருந்தது. பரந்த மனப்பான்மை மற்றும் மன்னிப்பு ஆகியவை ஆளுமையின் அவசியமான பண்புகளாகும், மேலும் அவை இமாமின் இயல்பில் வேரூன்றி இருந்தன. இதனடிப்படையில் அவர் எந்த நபருக்கும் தீங்கு விளைவித்ததில்லை, அவருக்குத் தீங்கு விளைவிப்பதைப் பற்றிய எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. மேலும் அவரைக் கொல்ல விரும்புவதாகத் தெரிந்த ஒருவரை கூட அவர் ஒடுக்கவில்லை.

மன்னிப்பு மற்றும் ஒத்துழைத்தல் விஷயத்தில் வரலாற்றில் அவருக்கு இணையானவர்கள் இருக்க இல்லை, மேலும் அவரது இந்த குணங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் எண்ணற்ற சம்பவங்கள் உள்ளன. ஒரு போரின் போது அவர் தனது வீரர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கியதாக பதியப்பட்டுள்ளது: ஓடிப்போகும் எதிரியைக் கொல்லாதே. உதவியற்ற மற்றும் காயமடைந்த ஒருவருக்கு உதவியை நிறுத்த வேண்டாம். யாரையும் நிர்வாணமாக்க வேண்டாம். யாருடைய சொத்தையும் வலுக்கட்டாயமாகப் பறிக்காதீர்கள்.”

ஒட்டகப் போரின் முடிவில் அலி கொல்லப்பட்ட எதிரிகளுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார் மற்றும் அவர்களின் மன்னிப்புக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். வீழ்ந்த எதிரிகள் மீது அவர் கட்டுப்பாட்டைப் பெற்றபோதும், அவர் அவர்களை மன்னித்தார், அவர்களுடன் அன்பாக நடந்து கொண்டார், மேலும் அவர் அவர்களைத் தண்டிக்கத் தடை விதித்தார், ஆனால் அவர் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் நிலையில் இருந்தார், என்றாலும் அலி அவர்களுக்கு கருணை காட்டினார். தாம் விடுவிக்கப்படுவோம் என்று கைதானவர்களும் நம்பியிருக்கவில்லை.

http://echoofislam.itfjournals.com/article_5.html

Scroll to Top
Scroll to Top