பாலஸ்தீன இளைஞர்கள், எதிர்காலத்திற்கான முன்னோடிகள்

Zionist army forced to turn offensive array to defensive one

சர்வதேச குத்ஸ் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை 29/04/2022 அன்று இஸ்லாமிய புரட்சியின் தலைவர் ஆயதுல்லா செயத் அலி கமேனி அவர்கள் ஆற்றிய விசேட உரை:

அகிலங்கள் அனைத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது, மேலும் மனிதகுலத்தின் எஜமானரும், மாண்புமிகு மனிதருமான, இஸ்லாத்தின் தூதர், முஹம்மது அல்-முஸ்தபா (ஸல்), மற்றும் அவர் தேர்ந்தெடுத்த மாசற்ற சந்ததியின் மீதும் அவர்களின் உத்தம தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மீதும் அமைதியும் வாழ்த்துக்களும் உண்டாவதாக.

உலகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இஸ்லாமிய உலக இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பாலஸ்தீனத்தின் தைரியமான, ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும், பாலஸ்தீன மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

மீண்டும் ஒரு குத்ஸ் தினம் வந்துள்ளது. புனித குத்ஸ் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது. உண்மையில், அபகரிப்பு, கிரிமினல் சியோனிச ஆட்சி குத்ஸ் மீது ஆதிக்கம் செலுத்தும் வரை, ஆண்டின் அனைத்து நாட்களும் குத்ஸ் தினமாக கருதப்பட வேண்டும்.

புனித குத்ஸ் பாலஸ்தீனத்தின் இதயம், மற்றும் நதி முதல் கடல் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பிரதேசங்களும் பாலஸ்தீனத்தின் பகுதியாகும். அடக்குமுறையாளர்களுக்கு எதிராக முன்னுதாரணத் துணிச்சலுடன் எழுந்து நிற்கிறோம் என்பதை பாலஸ்தீன தேசம் ஒவ்வொரு நாளும் உணர்த்தி வருகிறது. பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் சுய தியாகச் செயல்பாடுகளால் பாலஸ்தீனத்தின் தற்காப்புக் கவசமாகச் செயல்பட்டு வருகின்றனர் மேலும் அவர்கள் எதிர்காலத்திற்கான முன்னோடிகளாகவும் உள்ளனர்.

பாலஸ்தீனத்தின் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் ஒரு புதிய சமன்பாட்டைச் அடையாளப்படுத்தும் அதே தருவாயில், இந்த ஆண்டு குத்ஸ் தினத்தை நாங்கள் அனுஷ்டிக்கின்றோம்.

இன்று, பாலஸ்தீனத்திலும் மேற்கு ஆசியா முழுவதிலும் இளைஞர்களின் ஒரு “வெல்லமுடியாத மன உறுதி” மேலோங்கியுள்ளது. அது சியோனிஸ்டுகளின் “வெல்லமுடியாத இராணுவம்” என்ற நிலையை மாற்றியுள்ளது. இன்று, அந்த கிரிமினல் சியோனிச இராணுவம் அதன் ஆக்கிரமிப்பு வரிசையை தற்காப்புப் படையாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று அரசியல் அரங்கில், அந்த கிரிமினல் ஆட்சியின் மிக முக்கிய ஆதரவாளரான அமெரிக்கா, தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. அது ஆப்கானிஸ்தானில் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அதன் அதிகபட்ச அழுத்தக் கொள்கையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, ஆசிய சக்திகளின் முன்னாள் தோற்கடிக்கப்பட்டுள்ளது,, உலகப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்கடிக்கப்பட்டுள்ளது, மற்றும் அமெரிக்க நாட்டில், மற்றும் அமெரிக்க ஸ்தாபனத்தில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவின் நிகழ்வை நிர்வகித்தல் மற்றும் உள்ளக நிர்வாகத்திலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

கிரிமினல் சியோனிச ஆட்சியானது அரசியல் மற்றும் இராணுவ அரங்கில், சிக்கல்களின் சுருண்ட வலைப்பின்னலில் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் உச்சியில் இருந்த முன்னாள் கசாப்புக் கடைக்காரரும், கிரிமினலும் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார். சைஃப் அல்-குத்ஸ் காவியத்தைத் தொடர்ந்து. ஒவ்வொரு மணி நேரமும் அவரது தற்போதைய வாரிசுகள் மற்றொரு காவியத்தின் கூர்மையான கத்திக்காக காத்திருக்கிறார்கள்.

ஜெனினின் செயல்பாடுகள் சியோனிச ஆட்சியை பைத்தியக்காரத்தனமாக ஆத்திரமடையச் செய்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நஹாரியாவில் ஒரு சில சியோனிஸ்டுகளின் மரணத்திற்கு பதிலளிக்கும் விதமாக, ஜெனின் விஷயத்தை +முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்துடன் ஜெனின் அகதிகள் முகாமில் 200 பேரை சியோனிச கிரிமினல் ஆட்சி கொன்றது.

1948 மற்றும் 1967 அபகரிக்கப்பட்ட நிலங்களிலும் அதைச் சுற்றியுள்ள முகாம்களிலும் கிட்டத்தட்ட 70% பாலஸ்தீனியர்கள் சியோனிச ஆட்சியின் மீது தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனிய தலைவர்களை ஊக்குவிப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இது ஒரு முக்கியமான நிகழ்வாகும், ஏனெனில் இது சியோனிச கிரிமினல் ஆட்சியை எதிர்கொள்ள பாலஸ்தீனியர்களின் முழுமையான தயார்நிலையைக் குறிக்கிறது மற்றும் முஜாஹித் அமைப்புகளுக்கு தேவையான போது இராணுவ நடவடிக்கை எடுக்க சுதந்திரத்தை வழங்குகிறது.

1948ல் அபகரிக்கப்பட்ட நிலங்களில் இரண்டு – வடக்கு மற்றும் தெற்கு – பகுதிகளில் பாலஸ்தீன மக்களின் ஜிஹாதி நகர்வுகள், அதே நேரத்தில், ஜோர்டான் மற்றும் கிழக்கு குத்ஸில் மாபெரும் பேரணிகள், பாலஸ்தீனிய இளைஞர்களால் அல்-அக்ஸா மசூதியின் துணிச்சலான பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் காசாவில் இராணுவ உத்திகள் பாலஸ்தீனம் முழுவதும் எதிர்ப்பின் களமாக மாறிவிட்டதைக் குறிக்கிறது. இந்த நேரத்தில், பாலஸ்தீன மக்கள் இறைவனின் பாதையில் இந்தப் போராட்டத்தைத் தொடர்வதில் ஒருமனதாக உள்ளனர்.

இந்த சம்பவங்கள் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் பாலஸ்தீனத்தில் நடந்தவை சியோனிச எதிரியுடன் சமரசம் செய்து கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் ரத்து செய்யும் முத்திரையாகும். ஏனென்றால் பாலஸ்தீனம் இல்லாத நிலையில் அல்லது அதன் உரிமையாளர்களான பாலஸ்தீனர்களின் சம்மதத்திற்கு எதிராக பாலஸ்தீனம் பற்றிய எந்த திட்டமும் அல்லது நிகழ்ச்சிகளும் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒஸ்லோ ஒப்பந்தம், இரு நாடுகள் என்ற அரேபியர்களின் தீர்வு, (ட்ரம்பின்) நூற்றாண்டின் ஒப்பந்தம் மற்றும் உறவுகளை இயல்பாக்குவதற்கான சமீபத்திய அவமானகரமான முயற்சிகள் போன்ற அனைத்து முன்னாள் ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டுள்ளன.

சியோனிச ஆட்சி மூச்சுத் திணறிய நிலையிலும், குற்றங்களைச் செய்து அப்பாவி மக்களை ஆயுதங்களால் கொன்று குவித்து வருகிறது. இது நிராயுதபாணியான பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்களை படுகொலை செய்கிறது. அது அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்கிறது, வீடுகளை அழித்து, பண்ணைகளையும் சொத்துக்களையும் இடித்துத் தள்ளுகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பொய்யர்களின் மனித உரிமைகள் பற்றி ஆடம்பரமான கூற்றுக்கள் அனைத்தும் பாசாங்கு என்று நிரூபணமாகியுள்ளது. மற்றும் உக்ரைன் பிரச்சினையில் ஒரு கலவரத்தை உருவாக்கி, பாதிப்புகளுக்காக குரல் எழுப்பும் இவர்கள், பாலஸ்தீனத்தில் இழைக்கப்படும் இந்த குற்றங்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களைக் காக்க முன்வராதது மட்டுமல்ல, இரத்தவெறி பிடித்த அந்த ஓநாய்க்கும் உதவி செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

இது எம் அனைவருக்கும் ஒரு முக்கியமான பாடம். இஸ்லாமிய உலகத்தின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் – அதில் பாலஸ்தீன் பிரச்சினை முதன்மையாக உள்ளது – இந்த இனவெறி மற்றும் மனித விரோத சக்திகளை நாம் நம்ப முடியாது மற்றும் நம்பவும் கூடாது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

அல்குர்ஆனின் போதனைகளில் இருந்து உருவாகும், சன்மார்க்க வழிகாட்டுதல்களில் இருந்து எழும் எதிர்ப்பு சக்தியால் மட்டுமே, இஸ்லாமிய உலகப் பிரச்சினைகளுக்கும், உச்சத்தில் நிற்கும் பாலஸ்தீன் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

மேற்கு ஆசியாவில் (அநீதி) எதிர்ப்பின் உருவாக்கம் சமீபத்திய தசாப்தங்களில் இந்த பிராந்தியத்தில் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரவேற்கத்தக்க நிகழ்வாகும். அநீதி எதிர்ப்பின் மகத்துவத்தால் சியோனிஸம் என்ற அசிங்கத்திலிருந்து லெபனானின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களைச் சுத்தப்படுத்தவும், ஈராக்கை அமெரிக்காவின் பிடியில் இருந்து மீட்டெடுக்கவும், ஈராக்கை அமெரிக்க திட்டங்கள் மற்றும் தாயேஷ் வெறியர்களின் தீங்கிழைப்பிலிருந்து காப்பாற்றவும், சிரிய பாதுகாவலர்களுக்கு உதவவும் முடிந்தது.

இந்த அநீதி எதிர்ப்பு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது, அவர்கள் மீது சுமத்தப்பட்ட போரில் எதிர்க்கும் யெமன் மக்களுக்கு உதவுகிறது, பாலஸ்தீனத்தில் உள்ள சியோனிச கொள்ளையர்களுடன் யுத்தம் செய்து இறைவனின் கிருபையுடன் அவர்களை மண்டிச் செய்வதோடு குத்ஸ் மற்றும் பாலஸ்தீனத்தின் பிரச்சினையை உலக மக்கள் அன்றாடம் அறிந்துகொள்ளும் வகையில் இது மேலும் மேலும் முன்னிலைப்படுத்துகிறது.

பாலஸ்தீன மக்களே, மேற்குக் கரையிலும், 1948 இல் அபகரிக்கப்பட்ட பிரதேசங்களில் சுய தியாகம் (ஜிஹாது) செய்யும் இளைஞர்களே, ஜெனின் அகதிகள் முகாமிலும் பைத்துல் முகத்தஸ் மற்றும் காஸா விடுதலையில் இறைவனுக்காக போராடும் நீங்கள், மற்றும் பாலஸ்தீனத்திற்கு வெளியே முகாம்களில் வசிப்பவர்களே முக்கியமானவர்கள். நீங்களே உணர்திறன் பகுதிகள் மற்றும் எதிர்ப்பின் முன்னோடிகள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும் மற்றும் “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாப்பான்” [புனித குர்ஆன், 22:38], “ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்தால், பொறுமையாளர்களுக்கு நிச்சயமாக அதுவே சிறந்ததாக இருக்கும்” [16:126] , “ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.” [3:186], மேலும் “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக “ஸலாமுன் அலைக்கும்” (உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக!) உங்களுடைய இறுதி உறைவிடம் எவ்வளவு சிறப்பானது” [13:24].

ஈரான் இஸ்லாமிய குடியரசு (அநீதி)எதிர்ப்பு முகாமை ஆதரிக்கிறது. இது பாலஸ்தீனர்களின் போராட்டத்தை ஊக்கப்படுத்துகிறது மற்றும் ஆதரிக்கிறது. நாங்கள் இதைச் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம், நாங்கள் எப்போதும் இதைச் செயலிலும் காட்டி வருகின்றோம், நாங்கள் அதில் உறுதியாக இருக்கின்றோம். [சியோனிச ஆட்சியுடன்] உறவுகளை இயல்பாக்குவதற்கான துரோக நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம். உறவுகளை இயல்பாக்கும் கொள்கையை நாங்கள் கண்டிக்கிறோம். சில அரபு அரசாங்கங்கள் பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்க்கும் விஷயத்தை விரைவுபடுத்துமாறு அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளன. அமெரிக்கா பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், சியோனிச ஆட்சியின் வழியில் இருக்கும் எந்த தடையையும் நீக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், முதலில், அவர்கள் துரோகமாக நடந்துகொண்டு அரபு உலகிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவதாக, குருடர்கள் பார்வையற்றவர்களை வழிநடத்தும் நிகழ்வு போன்றது அது என்பதால் அவர்கள் அப்பாவியாக இருக்கிறார்கள்.

எனது இந்த அறிக்கையின் முடிவில், பாலஸ்தீன தியாகிகளின் ஆத்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைபிடிக்கப்பட்டு ஆனால் உறுதியுடன் எதிர்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எனது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இந்தப் பெரிய பொறுப்பின் முக்கியப் பகுதியைச் செயல்படுத்த உறுதியளித்துள்ள நமது (அநீதி) எதிர்ப்பு பாலஸ்தீனிய குழுக்களின் கைகளை நான் பற்றிக்கொள்கிறேன். முழு இஸ்லாமிய உலகையும், குறிப்பாக இளைஞர்களையும், கண்ணியத்தையும், கெளரவத்தையும் கொண்டு வரும் இந்தத் துறையில் பங்கேற்குமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.

“எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.” [புனித குர்ஆன், 10:10]

https://english.khamenei.ir/news/8960/Everything-is-signaling-a-new-equation-in-Palestine-s-future

Scroll to Top
Scroll to Top