மப்அஸ் திருநாள்

ரஜப் 27ம் நாளை முன்னிட்டு…

இங்கணம் ஹிராவில் இருந்தீரே
ஜிப்ராயிலை கண்டு மகிழ்ந்தீரே
ஓதுவீரே என்பதற்குக் கட்டுப்பட்டீரே
‘அலக்’கை கண்ணீர் மழ்க ஓதினீரே

அதுவே இறை உடன்படிக்கையின்
கடவுச் சொல்லானதே
அதனையே எடுத்துக் கூறி,
‘எம் நபியே’ என்ற அழைக்கப்பட்டீரே

எம் இதயத் துடிப்புக்கள் உம்மை
யா முஹம்மது! யா நபியல்லாஹ்!
என்றழைக்கிறது

வானவர்கள் இந்நாளுக்காய்
கவிபாடி வாழ்த்துக் கூறுகிறார்கள்
நட்சத்திரம் அகிலத்தை தனது
ஒளியால் அலங்கரிக்கிறது

இந்நாளே மனித இதயங்களின் வசந்தம்
இதுவே தனது பெருமை என்றனர்

எதிரிகளே! அறிந்து கொள்ளுங்கள்
எங்கள் தெய்வீகத் தலைவன் எழுந்துவிட்டான்
இஸ்லாத்தின் ஒளியை பரப்ப துணிந்துவிட்டான்
உங்கள் இருளுக்கு வெளிச்சமாய் வந்துவிட்டான்

நண்பனே! கவி இயற்றி அகிலத்தை மகிழ்வி
இந்நாளே அகிலத்தின் கொண்டாட்ட நாள்
விண்மீன்கள் எம் தலைவனுக்காய்
அகிலத்தை அலங்கரிக்கும் நாள் இது

அகிலம் தலைவனுக்காய் தலைவணங்கிய நாள் இது

நண்பனே! எம் தலைவன் இருக்க
மறுமைக்காய் ஏன் அச்சம்?
உன் அன்பே உன் வெற்றி

நபியே! உமக்கே… எம் உதிரம்.

அழைக்கிறோம் நபியே!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மப்அஸ் திருநாள் முபாரக் ஆகட்டும்.

– மௌலவி அபு முர்தழா –

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top