மூன்றாம் ஒளியின் பிறந்த நாள் வாழ்த்து

 

ஷஃபான் 03ம் நாளை முன்னிட்டு…

மனித விடுதலை பெற்றநாள் இது
நண்பர்களை இனம் கண்ட நாள் இது
உண்மையான கொண்டாட்டம் பெற்றநாள் இது
கருணையான ஷஃபான் மாதம் இது
மஃசூம்களின் இதயம் மகிழ்ச்சியில் மூழ்கிய நாள் இது
ஷஃபான் மாதத்தின் மூன்றாம் நாள் இது

உணர்வுகள் உணர்ச்சி பெற்ற நாள் இது
கண்ணியம் தலைதூக்கிய நாள் இது
தன் கருணையை இறைவன் வழங்கிய நாள் இது
மேகங்கள் குடையாய் மாறிய நாள் இது
நிலவுகள் ஒளியை கடன் வாங்கிய நாள் இது
முஹம்மதின் வாசனை அகிலத்திற்கு பரவிய நாள் இது
அஹ்மதுக்கு வாழ்த்துக்கூற மதீனாவுக்கு வானவர் வந்த நாள் இது

ஆதம் பெருமைப்பட்ட நாள் இது
இறுதி தூதரின் ஒளி பிறந்த நாள் இது
அப்துல்லாஹ்வின் மகனுக்கு வாழ்த்து கூறும் நாள் இது
சுவன தலைவன் அகிலத்துக்கு பிரகாசித்த நாள் இது
அஹ்லுல் கிஸாயின் மூன்றாம் ஒளி பிறந்த நாள்

அன்பானவர்களே! இவ் ஒளியை நேசியுங்கள்
அலியின் கண் குளிர்ச்சியை கவனியுங்கள்
அன்னை பாத்திமாவின் இதயக் கொழுந்தை பின்பற்றுங்கள்
வாழ்த்து கூற ரூகுல் அமீன் சமூகமளித்த வீட்டை நினைவு கூறுங்கள்
சுவனத் தலைவி ஆனந்த கண்ணீர் வடித்த நாளை ஞாபக மூட்டுங்கள-

– மௌலவி அபு முர்தழா –

Scroll to Top
Scroll to Top