Rules of Fasting in Islam according to Imam Khamenei Fatwa
01. நோன்பு எவ்வகையான வணக்கமாகும்?
மனிதன் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் ஒன்றையும் செய்யாதிருக்கும் வணக்கமாகும்.
02. நோன்பின் நிய்யத்தை வாயினால் மொழிய வேண்டுமா? அல்லது உள்ளத்தால் நினைத்தால் போதுமா?
ஒருவர் நோன்பின் நிய்யத்தை உதாரணமாக நாளைக்கு நோன்பு நோற்கிறேன் என வாயினால் மொழிவது அவசியமில்லை உள்ளத்தால் நினைத்துக்கொண்டாலும் போதுமாகும்.
03. நோன்பு சஹீஹாவதென்றால் என்ன செய்ய வேண்டும்?
இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து சுபஹூடைய அதானிலிருந்து மஃரிபுடைய அதான் வரைக்கும் நோன்பை முறிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாதிருந்தால் போதுமாகும்.
04. ஒருவர் முழுநாளும் நோன்பாளியாக இருந்தார் என உறுதி ஏற்பட என்ன செய்ய வேண்டும்?
முழுநாளும் நோன்புடன் இருந்தார் என உறுதி ஏற்படுவதற்கு சுபஹூடைய அதான் ஒலிப்பதற்கு சற்று முன்னரும், மஃரிபுடைய அதான் கூறப்பட்டு சற்று நேரம் கழிக்கும் வரை நோன்பை முறிக்கும் எந்த செயலையும் செய்யாதிருக்க வேண்டும்.
05. ஒருவர் ரமழான் மாத ஒவ்வொரு இரவிலும் மறு நாள் நோன்புக்காக நிய்யத்துச் செய்ய முடியுமா?
ஆம், முடியும்
06. எவ்வாறு நிய்யத்து வைப்பது சிறந்தது?
ரமழானில் முதல் இரவில் ஒரு மாத நோன்புக்காக நிய்யத்து வைப்பது சிறந்ததாகும்.
07. ரமழான் மாத நோன்புக்காக எப்போது நிய்யத் வைக்க வேண்டும்?
ரமழான் மாத நோன்பின் நிய்யத்தை இரவில் ஆரப்பத்திலிருந்து சுபஹூடைய அதான் வரைக்கும் வைக்கலாம்
08. சுன்னத்தான நோன்புக்காக எதுவரை நிய்யத்துச் செய்ய முடியும்?
இரவுடைய ஆரம்பத்திலிருந்து மஃரிபுடைய அதான் ஒலிப்பதற்குல் நிய்யத்து வைக்கும் அளவுக்கு நேரம் இருந்தால் அது வரைக்கும் நிய்யத்து வைக்கலாம். ஆனால் அந்த நேரம் வரைக்கும் நோன்பை முறிக்கும் எச் செயலையும் செய்திருக்க கூடாது. அவ்வாறாயின் அவரது சுன்னத்தான நோன்பு சஹீஹாகும்.
09. சுபஹூடைய அதானுக்கு முன் நோன்புடைய நிய்யத்து இல்லாது தூங்கியவனின் நோன்பு எவ்வகையில் சஹீஹாகும்?
ளுஹருக்கு முன்பு எழுந்து நிய்யத்துச் செய்தால் அவரது நோன்பு சஹீஹாகும். அது வாஜிபான நோன்பாக அல்லது முஸ்தஹப்பான நோன்பாக இருந்தாலும் சரி
10. ளுஹருக்குப் பின் விழித்தால் அவருடைய கடமை என்ன?
ளுஹருக்குப் பின் விழித்தால் வாஜிபான நோன்பின் நிய்யத்தை வைக்கமுடியாது.
11. ஒருவர் ரமழான் மாத நோன்பு அல்லாதவற்றை நோற்பதாயின் என்ன செய்ய வேண்டும்?
கட்டாயமாக அது என்ன நோன்பு என்பதை குறிப்பிடவேண்டும், உதாரணமாக கழாவான அல்லது நேர்ச்சைக் குறிய நோன்பை பிடிக்கிறேன் என நிய்யத்து வைக்க வேண்டும்.
12. ரமழான் மாதத்தில் நோன்பு பிடிக்கும் போது ரமழான் மாதத்தின் நோன்பைப் பிடிக்கிறேன் என நிய்யத்து வைப்பது அவசியமா?
ரமழான் மாதத்தில் பிடித்தால் வைப்பது அவசியமில்லை
13. ஒருவர் ரமழான் மாதம் என அறியாது அல்லது மறந்து வேறு நோன்பைப் பிடித்தால் அவரது நோன்பின் சட்டம் என்ன?
அது ரமழான் மாத நோன்பாக கருதப்படும்
14. ஒருவருக்கு ரமழான் மாதம் என தெரியும், அவர் வேண்டுமென்று ரமழான் மாதம் அல்லாத நோன்புக்காக நிய்யத்துச்சொன்னால் அவரது நோன்பின் சட்டம் என்ன?
அந்நோன்பு ரமழான் மாத நோன்பாகவோ அல்லது அவர் நிய்யத்து வைத்த நோன்பாகவோ கருதப்பட மாட்டாது.
15. ஒருவர் ரமழான் மாத முதல் நாள் என நினைத்து நோன்பு பிடிக்கிறார். பின்னர் அவருக்கு நோன்பு இரண்டுஅல்லது முன்று என தெரிந்தால் அவரது நோன்பின் சட்டமென்ன?
அவரின் நோன்பு சஹீஹாகும்
16. ஒருவர் சுபஹூடைய அதானுக்கு முன் நோன்பின் நிய்யத்து செய்து பின் மயக்கமாகி பகல் வேளையில் சுய நினைவுக்கு வந்தால் அவரது நோன்பின் சட்டமென்ன?
இஹ்தியாது முஸ்தஹப்பின் பிரகாரம் அந்த நோன்பை பூரணப்படுத்த வேண்டும். பின்னர் அதை கழா செய்ய வேண்டும்
17. ஒருவர் சுபஹூக்கு முன் நோன்பின் நிய்யத்து செய்து தூங்கி மஃரிபுக்கு பிறகு விழித்தால் அவரது நோன்பின் சட்டமென்ன?
அவரது நோன்பு சஹீஹாகும்
18. ஒருவர் ரமழான் மாதமென அறியாது அல்லது மறந்து போய் அதை ளுஹருக்கு முன்பு உணர்ந்தால் அவரது கடமை என்ன?
நோன்பை முறிக்கும் செயலை செய்யாதிருப்பின் கட்டாயம் நோன்பிற்காக நிய்யத்து வைக்க வேண்டும் அப்போது அவரது நோன்பும் சஹீஹாகும்
19. அவர் நோன்பை முறிக்கும் செயலை செய்து ளுஹருக்குப் பின் நோன்பு மாதமென அறிந்தால் அவரது நேன்பின் சட்டமென்ன?
அவரது நோன்பு பாத்திலாகும். ஆனால் மஃரிபு வரைக்கும் நோன்பை முறிக்கும் செயல் ஒன்றையும் செய்யாதிருத்தல் வேண்டும். ரமழான் முடிந்ததும் அதை கழாச் செய்ய வேண்டும்.
20. குழந்தை சுபஹூடைய அதானுக்கு முன் பருவ வயதை அடைந்தால் அதன் கடமை என்ன?
கட்டாயமாக நோன்பு பிடிக்க வேண்டும்.
21. சுபஹூடைய அதானுக்குப் பின் பருவமடைந்தால் அதன் கடமை என்ன?
அந்த நாளுடைய நோன்பு அவர் மீது கடமையல்ல. அவர் அதற்கு முதல் நோன்புடைய நிய்யத்தை செய்திருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி இன்னும் ளுஹருக்கு முதல் நோன்பை முறிக்கும் ஒன்றை செய்திருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி.
23. மரணித்தவரின் நோன்பைப்பிடிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளவர் சுன்னத்தான நோன்பை பிடிப்பது கூடுமா?
ஆம், அதில் பிரச்சினையில்லை
24. கழாவான நோன்பு உள்ளவர் சுன்னத்தான நோன்பு பிடிக்கலாமா?
இல்லை பிடிக்க முடியாது
25. கழாவான நோன்பு உள்ளவர் மறந்து சுன்னத்தான நோன்பு பிடித்தால் அவரது நோன்பின் சட்டம் என்ன?
ளுஹருக்கு முன்னர் ஞாபகம் வந்தால் சுன்னத்தான நோன்பின் நிய்யத்தை கழாவான நோன்புக்கு மாற்றி வைக்க முடியும்.
26. ளுஹருக்குப் பிறகு உணர்ந்தால் அதன் சட்டம் என்ன?
அவரது நோன்பு பாத்திலாகும்.
27. ரமழான் மாத நோன்பு இல்லாத வேறு நாளில் குறிப்பான நோன்பு கடமையாகி இருந்து வேண்டுமென்று அவர் சுபஹூடைய அதான் வரைக்கும் நிய்யத்துச் செய்யாது இருந்தால் அவரது நோன்பின் சட்டம் என்ன?
அவரது நோன்பு பாத்திலாகும் (உதாரணமாக நேர்ச்சைக்குறிய நோன்பு)
28. குறிப்பிட்ட அந்த நாளில் தன்மீது கடமையான நோன்பு உள்ளதென தெரியாது அல்லது மறந்து போய் ளுஹருக்கு முதல் அது அவருக்கு ஞாபகம் வந்தால் அந்நோன்பின் சட்டம் என்ன?
அது வரைக்கும் நோன்பை முறிக்கும் செயல் ஒன்றையும் செய்யாதிருந்து வாஜிபான அந்நோன்புக்காக நிய்யத்து வைத்தால் அது சஹீஹாகும். இதற்கு மாற்றமாக இருந்தால் நோன்பு பாத்திலாகும்.
30. நிய்யத்து வைப்பதற்கு முன் நோன்பு பிடிப்பதில்லை என உறுதி கொண்டிருந்து அல்லது பிடிப்பதா? இல்லையா? என சந்தேகத்தில் இருந்து நோன்பை முறிக்கும் செயல் எதையும் செய்யாதிருந்து ளுஹருக்கு முன்னர் நோன்புடைய நிய்யத்தை வைத்தால் அந்நோன்பின் சட்டம் என்ன?
அந்த நோன்பு சஹீஹாகும்.