தப்லீக் ஜமாத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் இந்தியா…!

இந்தியாவில் கொரோனா வைரஸின் அரசியல்மயமாக்கல் மற்றும் வகுப்புவாதம்

The Politicization & Communalization of Coronavirus in India

Jawhar Sircar, former IAS officer and retired CEO of Prasar Bharati, a reputed historian.

உலகின் பல்வேறு நாடுகளில் சமூகங்கள், இனங்கள் மற்றும் நம்பிக்கைகள், நாடுகளின் அரசியல் எல்லைள் எல்லாவற்றையும் மறந்து,  புவியியல் தடைகள், இன வேறுபாடுகள், தோலின் நிறம் மற்றும் பேசப்படும் மொழிகள், ஒருவர் பின்பற்றும் மதம் போன்றவை  ஒருபுறம் இருக்க, உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய்க்கு எதிரான மனிதகுலம் பொதுவான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில் கொரோனா அச்சுறுத்தலை முஸ்லிம்களை குறிவைக்க இந்தியாவில் ஒரு குழுவால் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தன்னை ‘இந்து’ என்று அழைத்துக்கொள்ளும் இந்து மதத்தின் உயர் தத்துவம் அறியாத இந்த அராஜகக் குழு, வன்முறை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு மற்றும் இரத்தக்களரி பற்றிய தட பதிவுகளையே கொண்டுள்ளது.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், இந்த குழப்பக்காரர்களுக்கு அரச உயர்மட்டத்தில் ஆதரவு இருப்பதாகத் தெரிவதே. சில அரசியல்வாதிகள் மற்றும் இந்தியாவின் ஊடகத் துறைகளின் வெறுப்பு நிறைந்த அறிக்கைகளால் இது தெளிவாகிறது. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் தேசிய அளவில் மக்களை பிளவுபடுத்தும் நடத்தைகளைக் கண்டிப்பதற்குப் பதிலாக, கொரோனா வைரஸை பரப்புவதாக முஸ்லிம் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் மத அமைப்புகள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

கடந்த மாதம் தலைநகர் புதுதில்லியில் தப்லீக் ஜமாஅத் அங்கத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுமதியுடன் கூடியிருந்தனர். பின்னர் அவர்களில் சிலர் கோவிட் -19 க்கு உள்ளாகியுள்ளதாக அறியவந்தது. இவ்விடயம் இந்தியாவின் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்க சில சந்தர்ப்பவாத கூறுகளால் அரசியல்மயமாக்கப்பட்டு வகுப்புவாதப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸை பரப்புவது முஸ்லிம்களே என்று குற்றம்சாட்டுகின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை மற்றும் கருத்துக்களுடன் நாம் முழுமையாக உடன்படவில்லை என்றாலும் அவ்வியக்கத்தை பலிகடாவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் குறிவைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த சதியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்திய ஆளும் அதிகாரிகள் அடங்கலாக பல அரசியல் மற்றும் மத குழுக்கள் இந்தியாவில் முடக்க உத்தரவை வெளிப்படையாக மீறி, நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த ஆபத்தான நோய் தொற்றை ஏற்படுத்தியுள்ளன என்ற விடயம் மறைக்கப்படுகிறது.

இவ்விடயம் சுயாதீனமான இந்திய பத்திரிகைகளால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வூடகங்கள் ஒரு பக்கச்சார்பற்ற இந்து, ஜவஹர் சிர்கார், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிரசார் பாரதியின் ஓய்வுபெற்ற தலைமை நிர்வாக அதிகாரியும், புகழ்பெற்ற வரலாற்றாசிரியரையும் மேற்கோள் காட்டியுள்ளன.

முடக்க உத்தரவையும் சமூக விலக்கல்  மற்றும் பிற வழிகாட்டுதல்களையும் மீறும் வகையில் இடம்பெற்ற சில ஒன்றுகூடல்களை அவர் பட்டியலிட்டுள்ளார். மார்ச் மாதத்திலும் அதைச் சுற்றியும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பெரிய மதக் கூட்டங்கள் நடந்துள்ளன; இவை பாடகர் கனிகா கபூர் வைரஸ் தொற்றுக்கு ஆளான நேர்மறையான பரிசோதனையுடன் தொடங்கியது. அவர் லக்னோவில் பல வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்ட ஒரு பிரமாண்டமான விருந்து வைபவத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனூடாக நூற்றுக்கணக்கான மக்களுக்கு தொற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் அவர் மார்ச் 14 அன்று, இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி, கொரோனா வைரஸுக்கு ஒரு மருந்தாக மாட்டு சிறுநீரை பரிந்துரைத்து அதை குடிப்பதற்கான “கௌ முத்ரா” என்ற ஓர் பெருவிழாவை ஏற்பாடு செய்து நடத்தினார் – மேலும் அவரது அறிவியலற்ற முறை அவரைப் பின்தொடர்பவர்களில் பலரின் ஆரோக்கியத்தை மோசமாக்கியது மட்டுமல்லாமல் கோவிட் -19 க்கு ஆளாகக்கூடிய அபாய நிலையை உருவாக்கியது என்றும் கூறினார்.

திருபதி கோயிலில் மார்ச் 16 ம் தேதி பாரிய இந்து யாத்ரீகர்கள் கூடியதையும் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலரும் தங்கள் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் திரும்பி வரும்போது அங்குள்ள பலரும் பாதிக்கப்படுகிறார்கள்; இந்த விடயம் கண்டுக்கொள்ளப்படவில்லை சிர்கார் சுட்டிக்காட்டினார்.

மார்ச் 18 அன்று, வெளிநாட்டிலிருந்து திரும்பிய பல்தேவ் சிங் என்ற சீக்கியர், பஞ்சாபில் ஒரு பெரிய “ஹோலா மொஹல்லா” நிகழ்ச்சியை நடத்தினார், இதில் கலந்துகொண்ட 40,000 மக்களின் ஆரோக்கியத்தை அபாயத்திற்கு உள்ளாக்கினார் என்றும் சிர்கார் தெரிவித்தார். கொஞ்ச நாட்களில் பல்தேவ் சிங் கோவிட் 19 தோற்று காரணமாக இறந்தார், ஆனால் இந்த பாரிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுமில்லை அல்லது கண்காணிக்கப்படவுமில்லை.

மேலும், மார்ச் 24 அன்று, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் – ஒரு தீவிரமான முஸ்லிம் விரோத பிரமுகர் – “ராம் லீலா” இந்து மத விழாவை நடத்தினார். இவ்விழா நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது; பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக் கூட்டத்திற்கு எதிரான வேண்டுகோளை உதாசீனம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியும் கண்டுகொள்ளப்படவில்லை.

ஜவஹர் சிர்கார், ஏப்ரல் 5 ம் தேதி, முழு நாட்டிலும் விளக்குகளை அணைத்து, ஒரு மெழுகுவர்த்தி அல்லது ஒரு விளக்கு அல்லது டார்ச் அல்லது செல்போன் லைட் மூலம் ஒளியேற்றி, ஒற்றுமையின் அடையாளத்தை காட்டுமாறு பிரதமர் கேட்டுக் கொண்ட நாள். மகாராஷ்டிராவில் உள்ள பாஜக எம்எல்ஏ தாதராவ் கெச்சேவின் வீட்டில் அவரது பிறந்தநாள் விழாவிற்கு 200 அழைப்பாளர்கள் கூடியிருந்தனர் அவர்கள் கொரோனா வைரஸ் பரவுவதை அறிந்திருக்கவில்லையா…?

இந்த மறுக்கமுடியாத உண்மைகளின் அடிப்படையில், தேசிய ஒற்றுமைக்காக இந்திய அரசு, முஸ்லிம்களை குறிவைக்கும் இந்த அராஜகவாத வெறுப்புக் கூறுகளை தடுக்க வேண்டும். கோவிட் -19 இன, மத பிரிவுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.

http://kayhan.ir/en/news/77449/the-politicization-&-communalization-of-coronavirus-in-india

https://thoothu2018.blogspot.com/2020/04/blog-post_16.html

Scroll to Top
Scroll to Top