The Issue of the Fatwa on Fasting:
Does the Jaffnamuslim.com Website Support the BBC Plot?
(A Critical analysis of the BBC’s fake news regarding Imam Khamenei’s fatwa concerning fasting in the month of Ramadan during the Coronavirus pandemic)
கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 19, 2020 அன்று Jaffnamuslim.com வலைத்தளம் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு, கடந்த காலங்களில் இலங்கையில் ஷீஆ-சுன்னி உட்பிரிவுவாத நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றும் வகையில் முஸ்லிம்கள் மத்தியில் வெளியிட்டு வந்த ஷீஆ முஸ்லிம்கள் குறித்த பொய்யான செய்திகளையும், அவ்வாறே ஷீஆ வெறுப்புப் பிரச்சாரங்களையும் மேற்கொண்டோரின் வரிசையில் தற்போது தானும் இடம்பிடித்துள்ளது.
முஸ்லிம் செய்தி வலைத்தளமாகச் செயற்படுகின்ற எந்தவொரு வலைத்தளமும் இனவாதம் தொடர்பில், குறிப்பாக ஷீஆ-சுன்னி உட்பிரிவுவாதம் தொடர்பிலான கருத்துக்களையோ அல்லது செய்திகளையோ ஒன்றுக்கு இரண்டு தடவை முறையாக அலசி ஆராய்ந்து, அவற்றை வெளியிடுவது ஒரு மார்க்கக் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“நம்பிக்கையாளர்களே! யாதொரு விஷமி உங்களிடம் யாதொரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் யாதொரு மக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துவிட்டுப் பின்னர், நீங்கள் செய்தவைகளைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும்படியும் நேர்ந்துவிடும்.”
(அல்குர்ஆன் 49:6)
முதலில் BBC ஐ மூலமாகக் கொண்டு வெளியிட்டுள்ள அந்த பொய்யான செய்தி என்ன என்பதைப் பார்ப்போம். பின்வருகின்ற Link இற்குச் சென்றால் குறித்த செய்தி கீழ்வருமாறு பதிவிடப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டுள்ளவாறு, உண்மையில் ஆயதுல்லாஹ் காமெனயி அவர்கள் கொரோனா தொற்று காரணமாக எதிர்வரும் ரமழானில் நோன்பிருத்தல் அவசியமில்லை என்ற ஃபத்வாவை வெளியிட்டுள்ளாரா? என்பது தொடர்பிலும், அவ்வாறு வெளியிட்டிருந்தால் அந்த ஃபத்வா ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் எந்த உத்தியோகபூர்வ ஊடகத்தில் வெளியாகியுள்ளது என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்த போது, அப்படியான ஒரு ஃபத்வா அவருடைய எந்தவொரு உத்தியோகபூர்வ ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை என்பது தெரிய வந்தது.
அப்படியாக இருந்தால், Jaffnamuslim.com வலைத்தளம் தான் வெளியிட்டுள்ள செய்திக்கு ஆதாரமாக எந்த ஊடகத்தை முன்வைத்துள்ளது? அதன் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதற்கு முன்னர், உண்மையில் கொரோனா தொற்று காணப்படுகின்ற இந்த காலகட்டத்தில் நோன்பிருத்தல் தொடர்பான ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் ஃபத்வாவை, அவர்களுடைய உத்தியோகபூர்வ வலைத்தளங்களின் வாயிலாக ஆராய்ந்த தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்தவகையில், ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் இரண்டினை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம். இவ்விரண்டும் அவர்களின் பணிமனையின் கீழ் இயங்கி வருகின்ற மிகவும் முக்கியமான தளங்களாகும்.
1. Leader.ir
2. Khamenei.ir
மேலே கூறிய இரு உத்தியோகபூர்வ வலைத்தளங்களும் ஈரானிய மொழியான பாரசீகம் உட்பட சர்வதேச மொழிகள் பலவற்றிலும் காணப்படுகின்றன. குறித்த வலைத்தளங்களின் ஆங்கிலப் பக்கத்தைப் பார்ப்பதற்கு பின்வரும் Link ஐ அணுகுங்கள்.
1. leader.ir/en (https://www.leader.ir/en)
2. english.khamenei.ir (http://english.khamenei.ir/)
கொரோனா தொற்று காலத்தில் நோன்பிருத்தல் குறித்த உண்மையான ஃபத்வா
உண்மையில் கொரோனா தொற்று காணப்படுகின்ற இந்த காலகட்டத்தில் நோன்பிருத்தல் தொடர்பான ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் ஃபத்வாவை, அவர்களுடைய உத்தியோகபூர்வ வலைத்தளங்களின் வாயிலாக ஆராய்ந்தபோது, பின்வருமாறு அவருடைய ஃபத்வா காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
leader.ir எனும் அவருடைய உத்தியோகபூர்வ இணையத்தின் பாரசீக பக்கத்தில் பின்வருமாறு அவருடைய ஃபத்வா வெளியிடப்பட்டிருந்தது.
இதனை இந்த leader.ir இல் உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் பாரசீக மொழியிலான ஃபத்வாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு khamenei.ir எனும் மற்றொரு உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
இதனை இந்த khamenei.ir இல் உறுதிசெய்துகொள்ள முடியும்.
ஃபத்வாவின் மொழிபெயர்ப்பு
எனவே, மேலே ஆங்கிலத்தில் காணப்படும் ஃபத்வாவின் தமிழ் மொழிபெயர்ப்பை உங்களுக்காக கீழே தருகிறோம்.
Grand Ayatollah Khamenei’s office for answering questions on religious verdicts has published the ruling concerning fasting in the month of Ramadan during the Coronavirus pandemic.
மார்க்கத் தீர்ப்புகள் (ஃபத்வாக்கள்) குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அதிமேதகு ஆயதுல்லாஹ் (காமெனயி) அவர்களின் அலுவலகம், கொரோனா வைரஸ் தொற்றின் போது ரமழான் மாதத்தில் நோன்பிருத்தல் தொடர்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
What follows is the full text of the question and answer.
பின்வருவது, கேள்வி மற்றும் பதில் ஆகியவற்றின் முழு உரையாகும்.
கேள்வி:
Now that Coronavirus has become widespread rapidly, what are the rules for fasting during the month of Ramadan?
தற்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவிவிட்டதால், ரமழான் மாதத்தில் நோன்பிருப்பதற்கான (மார்க்கச்) சட்டங்கள் என்ன?
பதில்:
Fasting, which is a religious obligation, is in fact God’s special blessing upon His servants and is a foundation for perfection and spiritual upliftment for humanity.
ஒரு மார்க்க கடமையாக இருக்கின்ற நோன்பானது, உண்மையில் தன் அடியாளர்களின் மீதான இறைவனின் விஷேட அருளாகும். மேலும், மனிதகுலத்திற்கான சம்பூரணத்திற்கும் ஆன்மீக மேம்பாட்டிற்கும் ஒரு அடித்தளமாகும்.
It was obligatory for previous nations as well.
இது முந்தைய சமுதாயங்களுக்கும் கூட, கடமையாக இருந்தது.
Some of the effects of fasting include gaining a state of spirituality and inner purity, increasing individual and social piety, and the strengthening of one’s willpower and resistance when faced with hardships.
நோன்பின் சில பயன்விளைவுகளில் ஆன்மீகத்தையும், உளதூய்மையையும் அடைந்துகொள்ளல், தனிநபர் மற்றும் சமூக பக்தியை அதிகரித்தல், கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது ஒருவரின் மனவுறுதியையும், எதிர்த்து நிற்றலையும் வலுப்படுத்தல் ஆகியவை அடங்கும்.
The role it plays in people’s health is evident, and God has placed a great reward for those who fast.
மக்களின் ஆரோக்கியத்தில் அது வகிக்கும் பங்கானது, தெளிவானதாகும். மேலும், நோன்பிருப்போருக்கு இறைவன் ஒரு மகத்தான வெகுமதியை வழங்கியுள்ளான்.
Fasting is a religious obligation and a pillar in Islamic Law.
நோன்பிருத்தல், ஒரு மார்க்கக் கடமையும், இஸ்லாமிய சட்டத்தில் ஒரு தூணுமாகும்.
Therefore, not fasting during the auspicious month of Ramadan is not allowable unless an individual has a reason to believe that fasting will:
ஆகவே, நோன்பிருப்பது பின்வருவனவற்றை உண்டுபண்ணும் என்று நம்புவதற்கான ஒரு காரணத்தை தனிநபர் ஒருவர் கொண்டிருந்தாலே தவிர, புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்காதிருப்பது அனுமதிக்கப்படவில்லை.
1.Cause an illness
1.நோயைத் தோற்றுவித்தல்
2.Intensify an illness
2.நோயைக் கடுமையாக்குதல்
3.Prolong an illness, or delay one’s recuperation.
3.நோயை நீடித்தல் அல்லது ஒருவரின் குணமடைதலைத் தாமதப்படுத்தல்
In such cases, one should not fast, but it will be necessary to make up for the missed fasts at a later time.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒருவர் நோன்பு நோற்கக்கூடாது. ஆனால், தவறவிட்ட நோன்புகளை பிற்காலத்தில் ஈடுசெய்வது (கழாசெய்வது) அவசியமாகும்.
Obviously, it is enough if this conviction is obtained based on the opinion of a religious physician.
வெளிப்படையாக, ஒரு மார்க்கப்பற்றுள்ள மருத்துவரின் கருத்தின் அடிப்படையில் இத்திடநம்பிக்கை பெறப்பட்டால் போதுமானது.
Therefore, if a person has a reasonable fear of being subject to any of the above-mentioned difficulties, they should not fast, but it will be necessary to make up for these missed fasts at a later time..
எனவே, மேலே குறிப்பிடப்பட்ட ஏதேனும் சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் என்ற நியாயமான பயத்தை ஒரு நபர் கொண்டிருந்தால், அப்படியானோர் நோன்பு நோற்கக்கூடாது. ஆனால், தவறவிட்ட நோன்புகளை பிற்காலத்தில் ஈடுசெய்வது (கழாசெய்வது) அவசியமாகும்.
ஃபத்வாவிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியவை
1. கொரோனா காரணமாக மரணித்த முஸ்லிமை எரித்துவிட்டால், அவருடைய சாம்பலை அடக்கம் செய்யலாம் என்பது போன்ற ஒரு கையாலாகாத ஃபத்வா இதுவல்ல. இது மருத்துவமும், சமயமும் உள்ளடங்கிய ஒரு ‘அறிவியல் ஃபத்வா’ (Scientific Fatwa) ஆகும்.
2. ஏனைய எல்லா முஸ்லிம்களைப் போன்றும் ஷீஆ முஸ்லிம்களும் ரமழான் மாதத்தின் நோன்பை ஒரு தவிர்க்க முடியாத கடமையாகவே கருதுகின்றனர்.
3. நோன்பிருத்தலின் மூலம் இறைவன் எமக்கு அருளியிருக்கும் ஆன்மீக மற்றும் இலௌகீக பயன்களை அடைந்துகொள்ள முடியும் என்பது ஷீஆ இஸ்லாமிய நம்பிக்கை.
4. தகுந்த காரணமின்றி, கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்காது இருக்க முடியாது.
5. தகுந்த காரணத்தோடு கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்காது போனால், அதனை பிற்காலத்தில் கண்டிப்பாக கழாச்செய்துவிட வேண்டும்.
6. அறிவியல் துறைசார்ந்த விடயங்களில், (உதாரணமாக மருத்துவம்) மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது, அத்துறைசார்ந்த மார்க்கப்பற்றுள்ள நிபுணர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படல் வேண்டும்.
7. தற்போதைய சூழலில் சமயமும், மருத்துவமும் ஒருங்கிணைந்த ஒரு ஃபத்வாவின் தேவையை இது பூர்த்தி செய்துள்ளது.
8. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு மணிநேரமும் குறித்த மூலிகைகளை தயார்படுத்தி பருகிக்கொண்டிருக்குமாறு மருத்துவர்கள் அரச ஊடகங்களில் எந்நேரமும் வலியுறுத்திக்கொண்டுவரும் நிலையில், நோன்பை அண்மித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள், அப்பரிந்துரைகளைக் கவனத்திற்கொள்ளாமல் நோன்பு நோற்றால், அதில் ஏதாவது மார்க்க ரீதியிலான அல்லது மருத்துவ ரீதியிலான பிரச்சினை வருமா? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் ஆராய்ந்து கொள்வது மிகவும் முக்கியமானது.
9. கொரோனா வைரஸின் தொற்று உக்கிரநிலையை அடைந்த நாடுகளில் இந்த ஃபத்வாவின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
10. இலங்கை போன்ற கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள நாடுகளில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவான ஒரு விடயம். எனவே, அவர்கள் மேற்குறித்த ஃபத்வாவின்படி ரமழான் மாதத்தில் கடமையாக்கப்பட்டுள்ள நோன்பை நோற்றே ஆகவேண்டும். தகுந்த காரணமின்றி நோன்பை நோற்காது விடலாகாது.
11. கீழ்வரும் திருக்குர்ஆனியக் கட்டளைக்கு அமைவாக இந்த ஃபத்வா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).’ (அல்-குர்ஆன், 02:185)
شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ
12. நோன்பின் மூலம் அதிக மருத்துவ பயன்கள் உண்டு என்பது உண்மைதான். அதற்காக எல்லா நோய்க்கும் நிவாரணம் உண்டு என்று கருதிவிடக் கூடாது. அப்படியாக இருந்தால், ஒரு நோயாளிக்கு ஏன் அல்லாஹ் நோன்பை நோற்காதிருக்க சலுகை வழங்க வேண்டும்? என்பதை சிந்திக்க வேண்டும்.
13. நோன்பினால் நோய்க்கு நிவாரணம் மட்டுன்தான் விளைய முடியும் என்று கூறிக்கொண்டு சிலர் இந்த அறிவியல் ஃபத்வாவை விமர்சிக்க முனைகின்றனர். உண்மையில், மேற்படி குர்ஆனிய வசனத்தைக் கருத்திற்கொள்ளும்போது இவர்கள் கடவுளை மிஞ்சிய பூசாரித்தனத்தையே கையில் எடுக்கிறார்கள் என்பது புரிகிறது.
14. மார்க்கத்தை அறிபூர்வமாகப் பின்பற்ற வேண்டும் என்றால், இது போன்ற அறிவியல் ஃபத்வாக்களின் தேவைப்பாடு இன்றியமையாததாகும்.
15. இந்த அறிவுபூர்வமான ஃபத்வாக்களின் மூலம் முஃப்திக்கும், முஜ்தஹிதுக்கும் இடையிலான வித்தியாசங்களை விளங்கிக்கொள்ள முடியும்.
Jaffnamuslim.com வலைதளம் வெளியிட்ட செய்தியின் நம்பகத்தன்மை என்ன?
ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் ஃபத்வா குறித்த செய்தியை வெளியிட்ட Jaffnamuslim.com வலைதளம் BBC ஐ மேற்படி செய்திக்கான மூலமாகக் குறிப்பிட்டுள்ளது.
முதலில், BBC ஊடம் ஆயதுல்லாஹ் காமெனயி அவர்களின் உத்தியோகபூர்வ ஊடகமல்ல என்பதோடு, அது எப்போதும் ஈரானுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு நேசமாகவும் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது, BBC ஊடகம் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரான செய்திகளை உலகளவில் பரப்பிவரும் ஒரு சியோனிச செய்தி நிறுவனமாகும். இஸ்லாமியப் பகையச்சத்தை (Islamophobia) பரப்புரை செய்வதில் அதற்கு கணிசமான பங்குண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். இப்படியான ஊடகங்களின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகளால் அண்மைய ஆண்டுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் நாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய பகையச்சத்தையும், அதன் பாரிய விளைவுகளையும் கண்டுகொள்ள முடியும். இதில், இந்தியாவும் இலங்கையும் கூட விதிவிலக்கல்ல என்பதைக் காணலாம்.
இலங்கை மற்றும் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டும் BBC இன் செய்திகள்
1.இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டும் செய்தி
‘இலங்கையில் இனம், மதம் ரீதியிலான கட்சிகள், புர்காவை தடைசெய்ய பரிந்துரை’ எனும் தலைப்பில் 21 பிப்ரவரி, 2020 அன்று வெளியிடப்பட்ட செய்தியை பின்வரும் Link இல் பார்வையிட முடியும்..
https://www.bbc.com/tamil/sri-lanka-51583458
2.இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டும் செய்தி
‘மதரசாவில் அதிகரிக்கும் இந்து மாணவர்கள் – காரணம் என்ன?’ எனும் தலைப்பில் 20 பிப்ரவரி, 2020 அன்று வெளியிடப்பட்ட செய்தியை பின்வரும் Link இல் பார்வையிட முடியும்.
https://www.bbc.com/tamil/india-51551350
Masha Allah.
Please continue and do not stop your achievement.