இமாம் காமினியின் பார்வையில்
கம்யூனிசக் கட்சியின் வெற்றிக்கான காரணம்
(வலுவான இலக்கியத்தைக் கொண்டிருப்பது பற்றிய இமாமின் வார்த்தைகள்)
In the view of Imam Khamenei
Reason for the success of the Communist Party
(Imam’s words about having a strong literature)
என்னுடைய பார்வையில், நமது ஈரானிய நாட்டில் இருந்துவந்த கம்யூனிசக் கட்சியின் நீண்டாயுலும், எவ்வித சத்தமுமின்றி மிகவும் பரவலாகக் காணப்பட்ட அவ்வமைப்பின் விரிவான இருப்பும் இரு காரணங்களால் அமையப் பெற்றிருந்தன.
ஒன்று, அவர்கள் கொண்டிருந்த சர்வதேசத் தரத்திலான கட்டமைப்பு. முன்னரே தயார் படுத்தப்பட்டிருந்த அக்கட்டமைப்பு எவ்வித சிரமமுமின்றி, பகிரப்பட்டு எல்லா இடங்களிலும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தது.
மற்றது, அவர்களின் பலமான இலக்கியம். அவர்கள் மன்னர் ரிஸா ஷாவுடைய அரசியல் அழுத்தங்கள் நிலைபெற்றிருந்த காலப்பகுதியிலிருந்தே மிகவும் பலமான இலக்கியத்தைக் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் புரட்சியை அடுத்து, உடனே ‘எழுத்தாளர் மன்றத்தை’ வீதிக்கு இறக்கிவிட்டனர். இவ்வாறான எழுத்தாளர் மன்றம் இல்லாமல் விட்டிருந்தால், இப்படியான சந்தர்ப்பத்தை அவர்களால் பெற்றிருக்க முடியாது.
நூற்றுக்கணக்கான நூற்களைப் பதிப்பித்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான சிற்றேடுகள், ஆக்கங்கள் மற்றும் பகுப்பாய்வுகள் முதலானவற்றை பல்வேறு இடங்களில் வெளியிட்டிருந்தார்கள்.
இப்படியான காரியத்தைப் புரிய விரும்புவோர்க்கும் அல்லது பகுப்பாய்ந்து விமர்சனம் செய்ய விரும்புவோர்க்கும் அவை மிகப்பெரும் இலக்கிய மூலதனமாகக் காணப்பட்டன.
(முஸ்லிம் எழுத்தாளர் பேரவை உறுப்பினர்களுடனான சந்திப்பு, 1992.07.05.)