மேம்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க தங்களுக்குள் ஒத்துழைப்பை அதிகரிக்குமாறு ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி இஸ்லாமிய அரசுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
“ஒத்துழைப்பு மூலம் முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவு செய்யும் நாள் இன்று, நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். இஸ்லாமிய உலகில் ஒன்றுபட்டு செயல்பட பல துறைகள் இன்று உள்ளன. எங்களுக்குள் விவேகமான, முதிர்ந்த புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும்,” என்று கோலாலம்பூர் உச்சி மாநாட்டில் ‘வளர்ச்சியின் முன்னுரிமை மற்றும் சவால்கள்’ பற்றிய முதல் வட்டமேசை அமர்வில் ரூஹானி கூறினார்.
இஸ்லாமிய நாகரிகத்தின் வீழ்ச்சி துரதிர்ஷ்டவசமாக, இஸ்லாமிய நீதித்துறைக்குள் முரட்டு பிடிவாதம் ஊடுருவியதும், அவர்களில் சிலர் மனித ஞானத்தின் பங்கையும் சமூகங்களை நிர்வகிப்பதில் அனுபவத்தையும் புறக்கணித்தபோது தொடங்கியது, அதே நேரத்தில் இஸ்லாம் எங்களுக்கு அறிவுறுத்துகிறது ‘நாங்கள் உங்களுக்கு அருளை வழங்கியுள்ளோம் உங்கள் வழிகாட்டுதளுக்காக, அவற்றில் ஒன்று ஞானம், மற்றொன்று இறைத் தூதர் (ஸல்).
துரதிர்ஷ்டவசமாக, பிற்போக்குத்தனமான கருத்துக்கள் தான் இஸ்லாமிய சமூகங்களை முன்னேற்றத்திலிருந்து விலக்கி இஸ்லாமிய சமூகத்தில் ஒரு தீவிரவாத யோசனையை வளர்த்தன, இது நமது நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தீங்கு விளைவித்தது, மேலும் இஸ்லாத்தின் உண்மையான முகத்தை சேதப்படுத்தியது.
ஞானம், பகுத்தறிவு மற்றும் பிறரின் அனுபவத்திலிருந்து தீவிரவாதத்தை தடுத்துக்கொள்ள முயல்வதற்கு பதிலாக, மேற்கத்திய மாதிரிகளை முழுவதுமாகப் பின்பற்றுவதைத் தவிர்த்து, நமது தேசிய மரபுகளிலிருந்து நம்மைத் திசைதிருப்ப முயற்சிப்பதைத் தவிர முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்று சொன்ன மற்றொரு தீவிர பார்வை.
இந்த இரண்டு தீவிரவாத கருத்துக்களால் இஸ்லாமிய சமூகங்கள் அதிக விலை கொடுத்தன.
வரலாற்று மதிப்புகள் மற்றும் மத நம்பிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் வளர்ச்சியை நோக்கி நகர்வது நம் சமூகங்களில் மிகவும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இன்று அனைவருக்கும் தெளிவாகிவிட்டது.
இஸ்லாமிய உம்மா அது இருக்க வேண்டிய தகுதியான ஒரு இடத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. நட்பை வளர்த்து, முஸ்லிம்களை பகைமை, கோபம் மற்றும் வெறுப்பின் சங்கிலிகளிலிருந்து விடுவித்தாலன்றி இஸ்லாமிய உம்மா அதன் உண்மையான இடத்தை அடைய முடியாது.
ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்ற முஸ்லீம் நாடுகளுடன் ஒத்துழைக்க தயாராக உள்ளது. உயர்கல்வியில் விரிவான முதலீட்டின் பலன் மற்றும் நமது இளம் விஞ்ஞானிகளை வளர்ப்பது அதிர்ஷ்டவசமாக நமது நாட்டை பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் விஞ்ஞானத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் வைத்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, நனோ மற்றும் உயிரி தொழில்நுட்பம், அறிவாற்றல் அறிவியல் மற்றும் அமைதி பயன்பாட்டுக்கான அணு அறிவியல் போன்ற துறைகளில் பல சிறந்த சாதனைகளை எட்டியுள்ளோம்.
கடந்த 41 ஆண்டுகளில் வல்லரசுகள் நமது சுதந்திரத்தையும் இறையாண்மையையும் சேதப்படுத்த முடியாதிருப்பதற்கான முக்கிய காரணம் ஜனநாயகம் மற்றும் மக்கள் அதில் ஆர்வத்துடன் இருப்பதால் தான். கடந்த 40 ஆண்டுகளில், நாங்கள் பல தேர்தல்களை நடத்தியுள்ளோம், அதில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
ஒத்துழைப்பின் மூலம் முஸ்லீம் உலகின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க முடிவு செய்யும் நாள் இன்று, நாம் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய உலகில் ஒன்றுபட்டு செயல்பட பல துறைகள் இன்று உள்ளன. விவேகமான, முதிர்ந்த சிந்தனையுடன் ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்வது நமக்கு முக்கியம்.
பொருளாதாரத்தின் ஐந்து துறைகளில் நாம் ஒருவருக்கொருவர் நெருங்கி செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
முதல் துறை நிதி, நாணய, வங்கி மற்றும் காப்பீட்டு ஒத்துழைப்பு. இன்று, நமது பொருளாதார முன்னேற்றங்கள் பல வெளிநாட்டு காப்பீடு மற்றும் பெரும் நாடுகளை நம்பியுள்ளன என்பதை நாங்கள் அறிவோம், அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகளான நாங்கள் காப்பீட்டில் முதலீடு செய்ய வல்லமை பெற்றவர்கள்.
மற்ற துறையானது நவீன தொழில்நுட்பங்கள், இதில் இஸ்லாமிய நாடுகள் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுள்ளன. நவீன தொழில்நுட்பங்களின் பல துறைகளில், நாங்கள் எங்கள் சொந்த காலில் நிற்கக்கூடியவர்கள்.
மூன்றாவது புலம் வர்த்தகம். முஸ்லீம் உலகில், குறிப்பாக ஹலால் பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளில் நாம் ஒருவருக்கொருவர் நெருங்கி செல்படமுடியும்.
மற்ற சுற்றுலா துறை. முஸ்லீம் உலகில், சுற்றுலாத்துறையை வளர்ப்பதற்கு நாம் ஊக்குவிக்கக்கூடிய கலாச்சாரம், வரலாறு, கலாச்சார பாரம்பரியம், கைவினைப்பொருட்கள் மற்றும் வானிலை ஆகியவற்றின் அடிப்படையில் சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.
புதிய தொழில்நுட்பத்தின் தோற்றத்துடன், நமது மத்திய வங்கிகளின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் நமது சொந்த கிரிப்டோகரன்ஸியைக் உருவாக்கலாம், மேலும் திரு மகாதீர் முகமது கடந்த ஆண்டு இஸ்லாமிய தினாரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார், நாணயத்தில் ஒரு புதிய வடிவத்தை உருவாக்க முடியும் இஸ்லாத்தின் உலகம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களிலிருந்து பயனடையலாம்.
நான் குறிப்பிட விரும்பும் மற்ற தலைப்பு கலாச்சார மற்றும் சமூக துறைகளில் ஒத்துழைப்பு. சுற்றுலா வலையமைப்பு, இஸ்லாமிய நாடுகளிடையே ஒரு தகவல் வலையமைப்பு, செயற்கை நுண்ணறிவுத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கலாச்சார மற்றும் ஊடக தயாரிப்புகளுக்கான சந்தையை நிகழ்ச்சி நிரலில் நிறுவுதல் என்ற தலைப்பை வைக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
ஒரு குறுகிய கால மற்றும் இடைக்கால செயல் திட்டத்தை நாங்கள் ஒப்புக் கொள்ளலாம் மற்றும் ஒரு யதார்த்தமான தீர்வைக் கண்டறிவதற்கான, சிக்கல்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையை வழங்க முடியும்.
ஐ.டி.எஃப் என்று நாம் அழைக்கக்கூடிய இந்த புதிய நடவடிக்கையின் குறிக்கோள் முஸ்லிம் சமூகங்களின் முழுமை என்பதை அனைவருக்கும் தெளிவாக அறிந்துகொள்ளட்டும்.
peace.lk