இலங்கை நீண்ட வரலாற்றுத் தொடரைக்கொண்ட ஒரு நாடு. 1972 ம் ஆண்டுக்கு முன் சிலோன் என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது. பிரதான ஆட்சி மொழியாக தமிழ் சிங்களம் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆங்கிலமும் உண்டு.
பல சமயங்களை உள்ளடக்கி சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆபிரிக்கர், வேடுவர் ஆகியோரின் தாயகமே இலங்கை.
பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்ட இந் நாடு ஈழம் என்று தமிழர்களாலும் இலங்காபுரி என்று இயக்கர்களாலும் ஸ்ரீலங்கா என்று சிங்களவர்களாலும் நாகதீபம் நாகர்களாலும் லங்காதுவீபம் வடமொழியிலும் தம்பபண்ணி ஆரியர்களாலும் தாப்பிரபொனே யவனர்களாலும் சேலான் போர்த்துகீசர்களினால் சிலோன் ஆங்கிலேயர்களினால் தப்ரபோன் கிரேக்கர்களினாலும் ஸரன்தீப் அரேபியர்களினாலும் அழைக்கப்பட்டது.
இஸ்லாமும் பௌத்தமும் வந்தடைந்த காலம்தொட்டு இன வேறுபாடின்றி சகோதரர்களைப் போன்றே இருந்து வந்தார்கள். பின்நாளில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் கூட 1948 – 02 – 04 ம் திகதி சுதந்திரம் அடைந்த பின்னும் அப்படியே இருந்தார்கள்.
ஆனால் புனித தீனுல் இஸ்லாம் பற்றியோ இஸ்லாத்தின் ஆணிவேராகிய அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆன் மொழியாக்கம் பற்றியோ அதில் என்ன உண்டு என்பதை விளங்க சிங்கள இனத்தவர்களிடம் காணமுடியாத ஒன்றாக பெரும் குறையாகவே காணப்பட்டன.
இக்குறையை பூர்த்தியாக்க வேண்டும் என்றும் சிங்கள மக்கள் இஸ்லாம் பற்றி அறிய வேண்டும் அதனால் இப்புனித வேதம் அல் குர்ஆன் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. சிங்கள மொழியாக்கம் இல்லையே!
எனவே அதை முன்னெடுக்கலாம் என்று ஆரம்பமாக மர்ஹும் A.I.L. மரிக்கார் அவர்கள் ஆலோசனை வளங்கி அதற்கமைய 1955 – 08 – 28 ம் திகதி முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெருகிறது.
அக்கூட்டத்தில் சேர் ராஸிக் பரீட் M P அல் ஹாஜ் A.H. மாக்கான் மாக்கார் M P அல் ஹாஜ் A.M.A. மர்சூக் ஆகியோர்கள் கலந்துகொண்டு ஆலோசனை செய்து முடிவுக்கு வந்ததன் பின் உண்மையில் இதை கட்சிதமாக செய்து முடிக்க வேண்டும், இதை சிங்கள மக்களிடம் அம்மொழியில் சேர்க்க வேண்டும், இஸ்லாம் பற்றி அறிய வேண்டும் எனவே இதை அழகாக செய்து முடியுங்கள் என்று ஆலோசனையும் உதவிகளையும் மேற்கொண்டார்கள் சிங்கள சகோதரர் அரபி மொழியை அறிந்தவரும் இஸ்லாத்தை நன்கு புரிந்தவரும் நற்குணமுடையவருமான MR. P. விக்ரமசிங்க அவர்கள்.
அதன் பின் மொழிபெயர்க்கும் பொறுப்பை கொழும்பு வேகந்த ஸாஹிரா கல்லூரியின் அதிபர் மர்ஹும் அல் ஆலிம் M.A.C.A. லாபிர் ஆலிம் அவர்களிடமும் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளி வாயலின் பேஷ் இமாம் மர்ஹும் மௌலவி M.I. அப்துல் ஹமீத் நூரி அவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.
எழுத்துதுரையில் பிரசித்தி பெற்ற மர்ஹும் அல் ஆலிம் மௌலவி பாஸில் O.L.M. உவைஸ் ஆலிம் அவர்களிடம் எழுத்துதுரை ஒப்படைக்கப்பட்டு முதல் 5 ஜுஸ்உகளை முடித்த நிலையில் இறைவன் அவர்களை அழைத்துக்கொண்டான்.
இப்படி சில ஆலிம்கள் முன் நின்று அல் குர்ஆனை சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்கிறார்கள்.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்களை கொடுத்து இம்மொழியாக்கம் செய்யப்படுகிறது.
இவைகளை எல்லாம் சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து சீர்படுத்த நியமிக்கப்பட்டவர்கள் சிங்கள சகோதரர் MR டான் அல்பேட் பெரேரா அவர்களும் MR M.A. வதூத் அவர்களும்.
அல்ஹம்துலில்லாஹ் பரிபூணமாக சிங்கள மொழியில் அல் குர்ஆனை மொழிபெயர்த்து முதன் முதலாக இந்த இலங்கை திருநாட்டில் சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட சிங்கள மொழி தர்ஜுமா 1961 – 05 – 16 ம் திகதி வெளியாக்கப்பட்டது. இதுவே இலங்கையில் முதல் சிங்கள மொழி தர்ஜுமதுல் குர்ஆன்.
இதன் எல்லா விபரங்களையும் கீழே கொடுக்கும் போடோவில் பார்த்துக்கொள்ளலாம்.
இதன் பிரதி ஒன்று கலீபதுல் குலபா அல்லாமா மௌலானா மௌலவி சங்கைக்குரிய மர்ஹும் ஸுஹுருத்தீன் ஹழ்ரத் அவர்களின் மகன் மௌலானா மௌலவி சங்கைக்குரிய ஸுஹுருத்தீன் முஹம்மத் பாரி ஹழ்ரத் அவர்களிடம் இருக்கிறது.
peace.lk