அறிவைத்தேடுவதிலே ஆன்மீகத்தலைவரின் பரிந்துரை

The Recommendation of the Spiritual Leader in Seeking Knowledge

 

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், நமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், ‘சீனா தேசத்திற்கு சென்றாயினும், அறிவைத் தேடிக்கொள்ளுங்கள்’* என்று பரிந்துரைத்திருந்தார்கள். அறிவானது, மிகத்தூரத்திலுள்ள பகுதியொன்றில் அமைந்திருந்தாலும், அதனைக் கற்றுக்கொள்வதற்காக புறப்படுங்கள்.

அவ்-அறிஞர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அறிவிலும், தொழில்துறையிலும் அவ்வறிஞர்களிடமிருந்து பிரயோசனத்தைப் பெறுபவர்களாக மாறுங்கள். எனவே, மற்றவர்களின் அறிவிலிருந்தும், தொழில்சார் கற்கைகளிலிருந்தும் பயனடைந்து கொள்வது அவசியமாகும். அதேநேரம், நாமும் சுயமாக தேடிக்கற்கவும், உருவாக்கவும் முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

*வஸாயில், பா:27, பக்:27.

(இமாம் செய்யித் அலீ காமினியின் உரையிலிருந்து…)

Scroll to Top
Scroll to Top