பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களின் இறுதி வார்த்தைகள்

அலியே! இதுதான் என்வாழ்வின் கடைசி நாள் என்பதை நீங்கள் அறிவீர்கள்

நான் சந்தோசமாக இருக்கிறேன், அவ்வாறே கவலையுடனும் இருக்கிறேன்

சிறிது நேரத்தில் என் துயரங்கள் முடிந்து, நானோ என் தந்தையை சந்திக்கப் போகிறேன் என்பது சந்தோசமே.

மேலும், உம்மோடு ஒன்றாய் பங்குகொண்டதை நினைத்து வருந்துகிறேன்.

அலியே! நான் சொல்பவற்றைக் கருத்திற்கொண்டு, எதை உமக்காக நான் விரும்பபுகிறேனோ அதை செய்து விடுங்கள்.

அலியே! எனக்குப் பிறகு நீங்கள் விரும்பியவர்களை திருமணம் செய்துகொள்ளுங்கள். என்றாலும், நீங்கள் எனது அத்தை மகள் யமாமாவை கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் எனது குழந்தைகளை அவர் மிகவும் நேசிக்கிறாள். ஹுஸைனும் அவருடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

பீஸாவை (பாத்திமா ஸஃறாவின் சேவகி), அவளின் திருமணத்திற்கு பின்னரும் அவள் விரும்பினால் உம்முடன் பணிவிடை புரிவதற்கு வைத்துக் கொள்ளுங்கள். அவள் எனக்கு ஒரு பணியாளராய் இருப்பதைவிடவும் மேலானவராய் இருந்தாள். நான் அவளை எனது மகள் போன்றே நேசிக்கிறேன்.

அலியே! என்னை இரவிலே அடக்கம் செய்து விடுங்கள். எனது நல்லடக்கத்தில், என்னோடு கொடூரமாக நடந்து கொண்டோரை கலந்து கொள்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

எனது மரணம், உங்களை வருந்தச் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம், நீங்கள் நீண்டகாலம் இஸ்லாத்திற்கும், மானுடத்திற்கும் சேவகம் புரிய கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

எனது துயரங்கள் உங்கள் வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தி விடுவதற்கு இடமளிக்க வேண்டாம். இதனை எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் அலியே!.

இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்: ‘சரி பாத்திமாவே, நான் சத்தியம் செய்து தருகிறேன்’.

பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா தமது வஸிய்யத்தை மீளவும் தொடர்ந்தார்கள்.

அலியே! நீங்கள் என் குழந்தைகளை நேசிக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். இருந்தும், ஹுஸைன் மீது மிகவும் கவனமாய் இருந்து கொள்ளுங்கள். அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். அதனால், மிகவும் கவலையுடனே என்னை பிரிந்திருப்பார். அவருக்கு ஒரு தாயுமானவராய் இருந்து கொள்ளுங்கள். எனது இந்த அன்மைக்கால சுகயீனங்கள் வரைக்கும், என் மார்புகளிலே உறங்கிக்கொண்டிருந்தார். அதனை இப்போது அவர் இழந்திருக்கிறார்.

அலியே! அழாதீர்கள். உம்முடைய வெளிப்புறத் தோற்றத்தின் வலிமையையும், அதனுள்ளே நீங்கள் கொண்டிருக்கும் மென்மையான இதயத்தையும் நான் அறிவேன்.

நீங்கள் முன்னரே அதிக பொறுப்புகளைக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள், மேலும் பொறுப்புகளைக் கொண்டிருக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

அலியே! பிரியாவிடைக்கான நேரமிது. விடைகொடுத்து என்னை அனுப்பி வையுங்கள்.

துயரம், இமாம் அலியை திணறச் செய்தது. அவருடைய வார்த்ததைகள் கண்ணீருடன் சங்கமித்தன. அந்நிலையிலே அவர் இவ்வாறு கூறினார்,

‘சென்று வாருங்கள் பாத்திமாவே!’

இதனை செவியுற்ற நிலையிலே, பாத்திமா ஸலாமுல்லாஹி அலைஹா கூறினார்கள்,

‘இந்த துயரங்களையும், வேதனைகளையும் நீங்கள் பொறுமையோடு தாங்கிக்கொள்வதற்கு கருணையாளனான அல்லாஹ் அருள்புரிவானாக.

இப்போது, என்னை இறைவனோடு தனித்திருக்க விட்டுவிடுங்கள்.

இதனைக் கூறியவராய், தனது தொழுகை விரிப்பின் பக்கம் திரும்பிக்கொண்டு, இறைவனுக்காக சிரம்பணிந்தார்கள்.

சற்று நேரம் கழித்து, இமாம் அலி அவர்கள் அறைக்குள் நுளைந்த போது, அவ்வாறே அவர் சிரம் தாழ்த்தியவராகவே இருந்தார்கள். ஆனாலும் கூட, அவரின் ஆத்மா அவரது தந்தையினுடைய கிருபை, கருணை, வல்லமையின் வெளியிலே சங்கமித்துவிடுவதற்காக அவரிடத்திற்கே சென்றுவிட்டது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.)

அவர் மிக இளம்வயதிலேயே மரணித்திருந்தார்.

இது குறித்து இமாம் அலி அலைஹிஸ்ஸலாம் குறிப்பிடுகையில், ‘மலரொன்று மொட்டிலேயே பறிக்கப்பட்டுவிட்டது. அது சொர்க்கத்திலிருந்து வந்து, சொர்க்கத்திற்கே மீண்டுவிட்டது. அது பிரிந்துவிட்டாலும் கூட, அதன் நறுமணம் என் மனதிலே எஞ்சியிருக்கிறது’.

– ஆஷிகே மஃஸூமீன் –

தொடர்புகளுக்கு:

info@peace.lk


Facebook


Twitter


Google-plus


Instagram


Dribbble


Youtube

Scroll to Top
Scroll to Top