இளைஞர்களை நோக்கி இமாம் கொமைனி (ரஹ்)

எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஓரு கருவியாகக் காணப்படுவது இளைஞர்கள் என்பது கால நீரோட்டத்தில் நாம் காணும் யதார்த்தமாகும். சமூக மாற்றத்தின் பாரிய தாக்கம் செலுத்தி சமூக அபிவிருத்தியினுடாக ஒரு நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய சக்தி பெற்ற இளைஞர் சமூத்திற்கு கல்வி கலாசார வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியது அத்தியவசியமான விடயமாகும்.

உலக சமயங்கள் இந்த கல்வி, கலாசார சீரதிருத்தத்தை வலியுருத்திக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இஸ்லாம், இளமைக்கு முக்கியத்துவம் வழங்கி அப்பருவத்தை சிறப்புற பயனுள்ளதாக கழிக்கவேண்டும் என்பதை மிகவும் வழியுருத்துகின்றது. ‘உன் முதுமைக்கு முன் உன் இளமையை பயன்படுத்திக் கொள்’ என்பது நபிமொழி இதன் மூலம் இளமைப் பருவம் கட்டுக் கோப்புகளையும் கடமைப்பாடுகளையும் சரிவரச் செய்வதற்கு பழக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

இஸ்லாம் காட்டித் தந்த வழிகாட்டல்களை பின் பற்றி வாழ்ந்த மகான்கள் உலகில் அதிகம் காணப்படுகின்றனர். அவர்களின் நடத்தைள், சொற்கள் எமக்கு முன்மாதிரியாக இருக்கின்றது. அவ்வாறான மகான்களில் ஒருவராக திகழ்பவர்தான் ஈரானை ”இஸ்லாமியக் குடியரசு” என்ற பெயரை பெற்றுக் கொள்ளச் செய்த ரூஹ்அல்லாஹ் இமாம் கொமைனி அவர்கள். இவர் ஆரம்பத்தில் ஒரு தனிமனிதனாக கலத்தில் இறங்கி ஈரானிய மக்களின் கல்வி, கலாசாரங்ளிலும,;, பண்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வெற்றியும் கண்டார்.

இமாம் குறிப்பாக இளைஞர்களின் முன்னேற்றத்தில் பெரிதும் கவனம் செலுத்தினார். இளைஞர்களுக்குப் பல உரைகளை ஆற்றியிருக்கின்றார் அவற்றை இன்று நூல் வடிவங்களில் எமக்கு கிடைக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான நூல்களில் பிரபல்யமான நூல்தான் ‘ஐpஹாதுல் அக்பர்’ என்ற நூல். இமாம் இளைஞர்களுக்கு கூறிய கூற்றுக்களில் ஒன்றுதான் ‘நீங்கள் சமூகததிற்கு செல்லும் முன் உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்’ இங்கு தயார்படுத்தல் என்பது தனது அனைத்து செயற்பாடுகளும் சீர்திருத்ப்பட்டதாகவும் காணப்பட வேண்டும் என்பதே. அது கல்வியாக இருக்கலாம் அல்லது நடத்தையாகவோ இருக்கலாம்.ஆகவே வாழ்வின் அனைத்துப் பக்கங்களும் தயார்படுத்தப்பட்டுக் கொண்டே இருத்தல் வேண்டும் . இமாமின் கூற்றுக்களையும் அறிவுரைகளையும் நாம் பல பகுதிகளாக இங்கு பிரித்து நோக்கலாம்.

இறை நம்பிக்கை -ஈமான்-

மனிதனைப்படைத்த இறைவனை மனிதன் நம்ப வேண்டும் இன்று பல சிததாந்தங்கள் இறைவன இல்லை எனற கருத்தை கொண்டிருப்பதை காணக்கூடியதாய் உள்ளது. எனவேதான தான் எங்கிருந்து வந்தேன? எனது வருகையின் நோக்கம் என்ன? என்பதை புரிந்து கொள்வதற்கு இறை நம்பி;கை அவசியமாகின்றது. இது பற்றி இமாம் பின்வரும் கூற்றுக்களை கவனிக்கலாம்.

”இறைவனை நம்பி வாழ்பவர் இறையுதவியுடன் இருக்கிறார்”

‘இறைவனை தவிர எதனையும் கவனத்தில் கொள்ளாதீர்கள்’ இங்கு இறைவனே முதன்மையானவன் அதன் பின்னர்தான் அனைத்தும் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இறைவனின் ஒருமைத்தன்மையைக் காட்டும் தவ்ஹீதை பற்றி இவ்வாரு கூறுகின்றார்.

”தவ்ஹீத் எனப்படும் ஏகத்துவ அறிவு அல்லாஹ் அல்லாதவர்களுக்காக இருந்தால் அதுவும் இருண்ட திரையாகும்”

இறையச்சம் -தக்வா-

இறைவன் மீதான அச்சம் மனிதனுக்கு மிகவும் அவசியமாகின்றது. வெருமெனே இறைவனை நம்புகிறேன் அவனை வணங்குகிள்றேன் என்று மாத்திரம் கூறுவதன் மூலம் நாம் எமது கடமைகளை செய்து விட்டோம் என்று கருத முடியாது. முhற்றமாக எமது செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறையச்சம் மிகவும் அததியவசியமான ஒன்றாக காணப்படுகின்றது ஏனென்றால் இறையச்சம் கொண்ட ஒருவர்தான் இறைகட்டளைகளை முழுமையாக பின்பற்றுகின்றார், பாவமான காரியங்களில் இருந்த தூரமாகின்றார் இறைவனோடு நெருங்கிய தோடர்பை ஏற்படத்துகின்றார். ”இறைவனை அஞ்சுங்கள் செயல்களின பின்விளைவுளுக்கு பயப்படுங்கள் பராமுகமான தூக்கததிலிருந்து விழித்திருங்கள்” என இமாமவர்கள் இளைஞர்களை நோக்கி கூறினார்கள் மேலும் வாழ்க்கையில் ஆபாசங்களை விட்டு தவிர்ந்த தெய்வீக மனிதர்களாக இருங்கள்” என கூறி இமாமவர்கள் இறையச்சம் மனிதனுக்கு அத்தியவசியமான ஒன்று என்பதை வழியுருத்திக் காட்டுகின்றார்கள்.

உளத்தூய்மையாக்கம் -தஸ்கியா-

ஒருவரை மற்றவர் மதிப்பிடும் கருவியாக காணப்படுவதுதான் அவரின் நடத்தை,பண்பாடுகளில் காணப்படும் தூய்மையான தன்மை. குறிப்பாக இறைவனிடத்தில் தான் சிறந்தவன் என்பதை அடையாளப்படுத்தக்கூடியதுதான் உளத்தூய்மையாகும். அதாவது தான் செய்யும் அனைத்து விதமான காரியங்களும் இறைவனுக்காகவே தவிர மனிதர்கள் தன்னை பெருமையாக கதைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல என்ற தூய்மையான என்னம் உருவாகுவதே ஆகும். இதன் மூலமாகத்தான் ஆத்மா பண்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமின்றி உலகத்திற்கு வழிகாட்டிகள் அனுப்பபட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பெரும் பொருப்பாகவும் இது காணப்படுகின்றது.

”ஆன்மாவை வாலிபத்தின் போதே பலப்படுத்திக் கொள்ளுங்கள் அதன் மூலம் இறையச்சத்தின் சுவையை அணுபவிய்யுங்கள்” ”பண்பட்ட உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகள்தான் மாற்றங்களை ஏற்படுத்தும்”என இமாமவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள்.

இறை வணக்கம் -இபாதத்-

மனிதன் படைக்கப்ட்ட நோக்கமே இறைவனை வணங்குவதற்காகத்தான். இச்செய்பாடு இறைவன் எம்மைப்படைத்ததற்கு நாம் செய்யும் நன்றியா கருதலாம். இந்த வணக்க வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் அதனை நிலைநாட்டுபவரின் பண்புளையும் வழியுருத்தியதாக இளைஞர்களுக்கு இமாமின்; பின்வரும் கூற்று அமைகின்றது.

”வணக்க வழிபாடுகளும் பிராத்தனைகளும்; இருளில் இருந்து அடியானை வெளிப்படுத்தி பேரொளியின் பக்கம் அழைத்துச் செல்கின்றது அதன் பிறகு அவர் அல்லாஹ்விற்காக அர்பணிப்புடன் சேவையாற்றும் அடியானகின்றார்.”

மேலும் சத்தியததிற்காக போராடி தீயோரை அழிக்கவும், தன்னுடைய உயிரை சத்தியத்தை நிலை நிருத்துவதற்காக தயங்கவும் மாட்டான்.

சிலர் கூறுவது போன்று வணக்கவழிபாடுகள் ஒருமனிதனை செயலற்றவனாக ஆக்குவதில்லை. இளமை உங்களிடம் இருக்கும் போதே உலகாயுத அசுத்தங்களில் இருந்து சுத்தமாகி கொள்ளுங்கள்.”

பாவ மன்னிப்பு –தௌபா

இளமை ஆசைகளாலும், இச்சைகளாளும் அதிகம் பாதிக்கப்படும் ஒரு கட்டமாக இருக்கின்றது. இந்த காலத்தில் அதிகம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டியது கடமையான விடயமாகும். வயது முதிர்ந்ததும் கேட்கும் தௌபா விற்கும் இளமையில் கேட்கும் தௌபாவிற்கும்; இடையில் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. ”இளமைப்பருவம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கும் ஓர் ஊற்றுப் போன்ற பருவமாகும். இதயம் மிருதுவாக இருப்பதனால் பாவமன்னிப்பிற்கான நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டதாகவே உள்ளன.” என இமாவர்கள் இளமையில பாவ மன்னிப்பு கேட்பதன் அவசியத்தை வழியுருத்துகின்றார்.

கல்வி

இன்றை இளைஞர்கள் அனைவரும் உணர்ந்து தன் வாழ்கைக்கு அத்தியவசியமான விடயமாக காண்பது கல்வியே. இருந்த போதிலும் தற்காலத்தில் வெரும் உலகாயுத தேவைகளுக்காக மற்றும் இந்த கல்வி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் ”உண்மையாக அறிவென்பது தெய்வீக வழிகாட்டலின் பிரகாசமாகும் மேலும் அது இறைவனை அடைவதற்கானதும் அவனுடன் நெருககத்தை ஏற்படுததுவதற்குமான நேரான பாதையாகும்.” ஏன இமாமவர்கள் கல்வி உண்மையில் எவ்வாறு அமையவேண்டும் என கூறிக்காட்டியுள்ளார்கள். மேலும் ”பண்படாத அறிவு அறியாமையை விடக் கொடியது” ”அறிவும் உளத்தூய்மையும் மனிதனை புனிதனாக்குகின்றன.” என்ற பல கூற்றுக்களையும் இமாமின் வாயிலிருந்து இளைஞர்களுக்கு பொக்கிசமாக கிடைக்கப்பெற்றுள்ளது.

விளையாட்டு

இளைஞர்களால் தமது உடலைக் கட்டுக் கோப்புடன் வைத்திருப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு பயிற்சியே விளையாட்டு ஆகும். ”நான் விளையாடுபவன் அல்ல ஆனால் விளையாட்டு வீரர்களை விரும்புகின்றேன்”. ஏன்று விளையாட்டிற்கு முக்கியததுவம் வழங்கும் இமாம் விளையாட்டு வீரர்களை நோக்கி ”நீங்கள் எவ்வாரு விளையாட்டில் வீரனாக காணப்படுகின்றீரோ அதே போல் பண்பாட்டிலும் வீரனாக இருங்கள்”, ”விளையாட்டு வீரர்கள் உளப்பயிற்சி எடுப்பது போல் உளப்பயிற்சியும் எடுக்கவேண்டும்” என அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

தன்னம்பிக்கை

”வாலிபர்களே! தோல்வியைக் கண்டு தளர்து விடாதீரகள் அதே போன்று நம்பிக்கையையும் இழந்து விடாதீர்கள். இருதியில் சத்தியம் வெற்றிபெருவது உறுதி. நம்மை நாமே மாற்றிக் கொள்ளாமல் ஒரு தேசத்தை மாற்றி விடலாம் என கனவு காணாதீர்கள்”
”இறை நம்பிக்கைக்குப் பின்னான தன்னம்பிக்கை நலவுகளின் பிறப்பிடமாகும்”

மனோ இச்சைகளை கைவிடல்

”இளைஞர்கள், சக்தி இருக்கின்ற வரை மனோ இச்சைகளையும், உலக ஆசைகளையும் மிருகத்தனமான விருப்பங்களையும் விட்டு தன்னை தூரப்படுத்த முடியும்.”
”ஷைத்தானின் மனோ இச்சையை கைவிடுங்கள், உண்மையிலிருந்து விழகிச் செல்வதற்கான அளவீடு மனோ இச்சையை பின்பற்றுவதாகும்.”

எளிமையான வாழ்க்கை

”எளிமையாக வாழப் பழகிக் கொள்ளுங்கள், ஆடம்பர வாழ்வில் இஸ்லாமிய பெருமானங்களை அடைய முடியாது.”
”ஆன்மீகம் இஸ்லாத்தின் அடிப்படை அதற்கு உரமூட்டி ஆடம்பரங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்”

இவ்வாறு இமாமவர்கள் இளைஞர்களின் வாழ்க்கபை;பருவத்தின் அனைத்து கட்டங்களுக்கும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. ஆதிசயிக்கத் தக்க விடயமல்ல ஏனென்றால் அல்குர்ஆன் நபி(ஸல்) மற்றும் அவரது அஹ்லுல் பைத்துக்களின் நெறிமுறைகளை தனது வாழ்கையில் கடைப்பிடித்து வாழ்ந்த ஒருவராக இமாம் கொமைனி (ரஹ்) அவர்கள் காணப்படுகின்றார்கள்.
எனவே, இமாமின் வழிகாட்டுதல்கள் இன்றை இளைஞர்களும் நாளைய தலைவர்ளுமான எம்மிடத்தில் வரவேண்டியது காலத்தின் தேவையோடு எமது தார்மீக பொருப்பும் என்பதை கவனத்திற் கொண்ட செயற்பட வேணடும்;.

”பொருளாதாரம், அரசியல், சமூக வாழ்வு உட்பட இஸ்லாத்தின் ஏனைய சகல கோடபாடுகளையும் ஆராயும் போது முஸ்லிம வாலிபர்கள் ஆதார பூர்வமான விடையங்களையே கவனத்தில் கொள்ள வேண்டியதுடன், சத்திய சன்மார்க்கமான இஸ்லாத்திற்கும் ஏனைய மூட நம்பிக்கைகளுக்கும் இடையே உள்ள தெளிவான வித்தியாசத்தை புரிந்து செயலாற்ற வேண்டும்.”

உசாத்துணைகள்
அல்குர்ஆன்
தூதூ (கலாசார் பகுதி ஈரான் இஸ்லாமிய குடியரசு தூதரகம்)
ஜிஹாதுல் அக்பர் – எம். நிஸாம்தீன்
இமாம் கொமைனியின் சிந்தனைகள்

………………………………………………………………………..

peace.lk

Scroll to Top
Scroll to Top