இமாம் ஹுஸைனின் அருள்வாக்குகள்

مَن عبد الله حق عباده آتاه الله فوق امانیه وکفایته

எவர் இறைவனை அவனது தகுதிக்கேட்ப வணங்குகின்றாரோ இறைவன் அவருக்கு அவரின் எதிர்பார்ப்பிற்கும், தேவைக்கும் மேலாக அருள்பாளிக்கின்றான்.

السر امانة
இரகசியம் பேணுதல், அமானிதமாகும்.
الصدق عز
மெய்யுரைத்தல் கண்ணியத்தைத்தரும்.
الحلم زینة
பணிவு, அழங்காரமாகும்.

الرفق لب
மனிதர்களுடனான சிறந்த நட்புறவு, புத்திக்கூர்மையின் அடையாளமாகும்.
السخاء محبة
மனிதர்களுக்கு வாரி வழங்குவது, நட்பை தரும்.
الوفاء مروة
வாக்குறுதியை நிறைவேற்றுவது, தீரச் செயலாகும்.
الصمت زین
(குறைவாகப் பேசி) மௌனம் காப்பது, அழகாகும்.
الاستکبار صلف
மேலாதிக்கம், வரம்பு மீறும் செயலாகும்.
البخل مبغضة
கஞ்சத்தனம், பகைமையைத் தோற்றுவிக்கும்.
الکذب عجز
பொய்யுரைத்தல், மனிதனின் இயலாமையாகும்.
الشح فقر
பேராசை, வறுமையாகும்.
المعونة صداقة
உதவி செய்தல், நட்பின் அடையாளமாகும்.
العمل تجربة
வேலையும், செயலும் (மிகச்சிறந்த) அனுபவமாகும்.
الزهد غناء الابد
துறவுநிலை, நித்திய செல்வமாகும்.
اوصیکم بتقوی الله (التقوی شرف)
இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறு உங்களை உபதேசிக்கிறேன். (இறையச்சம் உயர்வுக்கு வழிவகுக்கும்)
الأمین آمن
நம்பிக்கையான மனிதன், பாதுகாப்பானவனாக இருக்கிறான்.
البری جری
குற்றமிழைக்காத மனிதன், அச்சமற்று வாழ்பவன் ஆவான்.
الجوار قرابة
அயலவரும், குடும்ப உறவினராவர்.
الصلة نعمة
இரத்த உறவு, அருட்கொடையாகும்.
الخائن خائف
துரோகி, (என்றும்) பயத்துடன் வாழ்பவன் ஆவான்.
المسیئ مستوحش
தவறிழைத்தவன், அச்சத்தோடு வாழ்பவன் ஆவான்.
العجلة سفه
அவசரப்படுதல், (ஒருவகை) மடமையாகும்.
الغلو ورطة
(தேவையற்ற) மிகைப்பு, அழிவைத்தரும்.
البخیل مذموم
கஞ்சன், இகழப்படுபவன் ஆவான்.
الحریص محروم
பேராசைக்காரன் (தனக்கு கிடைக்கவிருப்பதை) இழந்துவிடுபவன் ஆவான்.
الحسود مغموم
பொறாமை கொண்டவன், கவலையுற்றவன் ஆவான்.
الصبر شجاعة
பொறுமை, வீரமாகும்.
العجز آفة
இயலாமை என்ற உணர்வு, ஆபத்தாகும்.
الزهد ثروة
(பேராசையின்றி) பற்றற்று இருத்தல், சிறந்த செல்வமாகும்.
الورع جنة
பேணுதல், மிகச்சிறந்த கேடயமாகும்.
الصبر مفتاح الفرج
பொறுமை, பிரிவினையின் தீர்வுக்கான திறவுகோலாகும்
القنوع راحة الابدان
போதும் என்ற மனப்பாங்கு, உடல்களுக்கு சுகத்தை, நிம்மதியைத் தரும்.
الخلق الحسن عبادة
நல்லொழுக்கம் பேணுதல், வணக்கமாகும்.
الدنیا سجن المؤمن
இவ்வுலகம் முஃமின்களின் சிறையாகும்.
مجالسة أهل الفسق ریبة
தீயோருடன் கலந்துறவாடல், கெட்ட பெயரைத் தேடித்தரும்.
العلم لقاح المعرفة
அறிவு, யதார்த்தத்தை நோக்கி வழிகாட்டும்.
مجالسة أهل الدیانة شر
(குணத்தில்)தாழ்ந்தோருடன் கலந்துறவாடல் தீங்காகும்.
بکاء العیون وخشیة القلوب من رحمة الله
கண்களால் அழுவதும், உள்ளங்களால் அச்சங்கொள்வதும் இறையருள்களில் உள்ளவை.
لاینال ماعندالله إلابطاعته
அல்லாஹ்விடத்தில் உள்ளவற்றை, அவனை வழிப்படுவதினாலன்றி அடையமுடியாது.
لاأفلَحَ قـَومٌ اشتَـروا مَـرضـاتِ المَخلـُوق بسَخَطِ الخـالِق
இறைகோபத்தைக் கொண்டு, படைப்புக்களின் விருப்புகளை வாங்கிய சமூகம் வெற்றி பெறமாட்டாது.

Scroll to Top
Scroll to Top