‘அவர்கள் அணிந்திருக்கும் ஹிஜாப் ஆடை அவரது அறிவுகூர்மையோடு ஒத்துப்போகவில்லையே’ என்று அமெரிக்க ஜனாதிபதி அவர்களிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது.
‘ஹிஜாப் என்பது அறியாமை காலத்து யுகத்தின் ஆடை’ என்ற கருத்திலேயே இந்த கேள்வி அவர்களால் முன் வைக்கப்பட்டது.
டாலியா முஜாஹித் அவர்கள் இவ்வினாவுக்கு மிக அறிவுக்கூர்மையோடு பதிலளித்துள்ளார்கள்:
“முதலாம் நூற்றாண்டிலிருந்து மனிதக்குலம் நிர்வாண கோலத்திலேயே இருந்திருக்கிறது. கால ஓட்டத்தில் அவன் பலவகை ஆடைகளின் பயன்பாட்டை கண்டுபிடித்து, அவற்றை அணியவும் கற்றுக்கொண்டான். இவ்வாறு மனித குலம் ஆடை அணியத் தொடங்கி முன்னேறியதின் பலனாக, நாகரிகத்தின் உச்சக்கட்ட ஆடையான ஹிஜாபைதான் இப்போது நான் அணிந்து உள்ளேன். ஆகவே இது ஒரு பிற்போக்கு ஆடையல்ல.
ஆகவே, ‘நிர்வாணகோல ஆடைகள்தாம்’ முதலாம் நூற்றாண்டை ஞாபகப்படுத்தும் பிற்போக்கு ஆடைகள்.
அம்மணமாக ஆடை அணிவதுதான் நாகரிகத்தின் உச்சம் என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் மிருகங்கள் உங்களைவிட நாகரிகத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றன.”
-ஸுப்ஹானல்லாஹ்…. سبحان الله
தமிழில்: அப்துர் ரஹீம் முஹம்மத் ஜஃfபர்