அருள்மிகு ரமழான் மாத நிகழ்ச்சித் திட்டமானது, அடிப்படையில் மனிதனை உருவாக்குவதற்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். குறைபாடுடைய மனிதர்கள் இம்மாதத்திலே தங்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதற்கும், ஆரோக்கியமானவர்கள் தங்களை சம்பூரணமானவர்களாக மாற்றுவதற்குமான நிகழ்ச்சித் திட்டமாகும்.
அருள்மிகு ரமழான் மாத நிகழ்ச்சித் திட்டமானது, ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். குறைகளை நீக்கி, சரிசெய்வதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். மனோ-இச்சையின் மீது பகுத்தறிவும், இறைநம்பிக்கையும், சுயசித்தமும் ஆதிக்கம் செலுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். பிரார்த்தனைக்கான நிகழ்ச்சித் திட்டமாகும். அல்லாஹுவை வழிப்படுவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். இறைவனை நோக்கிப் பயணப்படுவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். ஆன்மாவை முன்னேற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும். ஆன்மாவை மீட்டெடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமாகும்.
அருள்மிகு ரமழான் மாதம் வந்து, மனிதனோ முப்பது நாட்கள் பசியையும், தாகத்தையும், தூக்கமின்மையையும் பொறுத்துக்கொண்டு, உதாரணமாக, இரவு துவக்கம் அதன் பிற்பகுதிவரை விளித்திருந்து, அந்த நிகழ்வு, இந்த நிகழ்வு என்றெல்லாம் சென்றுவிட்டு, அவ்வாறே பெருநாளையும் அடைந்த பிறகு, ஷஃபான் மாதத்தின் இறுதி நாளோடு அணுவளவும் வித்தியாசப்படவில்லை என்றிருந்தால், இவ்வாறான நோன்பினால் மனிதனுக்கு எவ்விதப் பலனும் கிடையாது.
மனிதர்கள் காரணமின்றி தங்களது வாய்களை மூடிக்கொள்வதை இஸ்லாம் வேண்டவில்லை. மாறாக, நோன்பின் மூலமாக மனிதர்கள் சீர்திருத்தப்பட வேண்டும். ‘நோன்பின் மூலம் வெறும் பசித்திருப்பதைத் தவிர வேறு எந்த பலனும் தமக்கில்லை என்றவாறே அநேக நோன்பாளிகள் உள்ளனர்’ என்பதாக நமது ஹதீஸ்களில் வந்துள்ளது.
ஹலாலான உணவை உண்பதிலிருந்து வாயை மூடிக்கொள்வது, மனிதன் ஹராமான வார்த்தைகளை விட்டும் தன்னுடைய நாவைத் தடுத்துக்கொள்ளவும், புறம் பேசாமல் இருக்கவும், பொய் கூறாமல் இருக்கவும், தூசிக்காமல் இருக்கவும் முப்பது நாட்கள் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.
-ஷஹீத் முதஹ்ஹரி-
சம்பூரண மனிதன் நூலிலிருந்து…