இற்றைக்கு சுமார் 99 ஆண்டுகளுக்கு முன்னால் (ஹிஜ்ரி 1344, ஷவ்வால், பிறை 08 இல்) வஹ்ஹாபிய்ய மூடர்களினால் ஜன்னத்துல் பகீயில் உள்ள இமாம்கள், நபித்தோழர்கள் ஆகியோரின் சியாரம்கள் தகர்க்கப்பட்டு, அங்கிருந்த தங்கங்களும், வெள்ளிகளும் ஏனைய சொத்துக்களும் சூறையாடப்பட்டன.
முஸ்லிம் சமுதாயத்திற்கு மத்தியில் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட, வளர்ச்சியடையாத சிந்தனையுடைய, மதிப்புக்குரிய முஸ்லிம் பெரியார்களை சங்கைப்படுத்துவதை குப்ர் என்று சொல்லும் மூட நம்பிக்கையுடைய சிலர் தோன்றுகின்றனர். இது உண்மையில் ஒரு பெரும் சோதனையாகும்.
இவர்களினால் முடியுமாக இருந்திருப்பின் ஜன்னத்துல் பகீயில் இமாம்களின் மண்ணறையைத் தகர்த்த கையோடு, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் மண்ணறையையும் அழித்திருப்பார்கள். இச்செயலினை அவர்கள் மார்க்கத்தின் கடமை என்றும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இவர்கள், முஃமின்களுடைய கப்றுகளை தரிசிப்பதையும் அங்கு இறை அருளினை வேண்டுவதைனையும் இணைவைப்பு என்று கூறுகின்றனர். ஆனால் காலனித்துவவாதிகளிடம் அடிமையாக இருப்பதை, அவர்களின் அபிலாசைகளுக்கு ஆடும் பொம்மையாக இருப்பதை ஏன் இணைவைப்பாக கருதுவதில்லை? இது இஸ்லாத்திற்கு வந்த ஓர் சோதனையாகும்.
வரலாற்றுப் பொக்கிஷங்கள் உலகின் எந்த மூலையில் தகர்க்கப்பட்டாலும் அதற்காகக் குரல் கொடுத்து அதற்காக கண்ணீர் வடிப்பவர்கள்; அரசியல் தலைவர்களாகட்டும், சர்வதேச அமைப்புக்களாகட்டும், ஆனால் இவர்கள் இந்த விடயத்தில் மௌனமாகின்றார்கள். இச்செயற்திட்டத்திற்குப் பின்னால் யார் உள்ளார்கள் என்பதை இதன் மூலம் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியும்.
அறிந்துகொள்ளுங்கள்! இறைவன் கூறுகின்றான்;
‘அவர்கள் சதிசெய்கின்றார்கள், அல்லாஹ்வும் சதிசெய்கின்றான்’.
‘நிச்சயமாக உம் இறைவன் அநியாயக்காரர்களை குறிவைத்துக் கொண்டிருக்கின்றான்.’
நிச்சயமாக இறைவன் , இந்த அநியாயச்செயலிற்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்பான்.
– இமாம் காமெனயீ –