ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள்

அஹ்லுல்பைத் இமாம்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் நினைவுகூர்ந்து குறிப்பிடுமளவுக்கு ஹஸரத் பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள், மிகவும் உயர்வான மற்றும் உன்னதமான ஆளுமையைக் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார்கள். எந்தளவுக்கு என்றால், அன்னையவர்கள் பிறப்பதற்கு முன்னரே, அதற்கும் மேலாக அன்னையவர்களின் தந்தை பிறப்பதற்கு முன்னரே, அவரது மாட்சிமை குறித்து முன்பிருந்த பரிசுத்த  இமாம்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு பார்ப்போம்.

இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்:

‘அறிந்துகொள்ளுங்கள், நிச்சயமாக கும் நகரம் எனது ஹரம் ஷரீஃபாகவும், எனக்குப் பின்னர் எனது பிள்ளைகளின் ஹரம் ஷரீஃபாகவும் இருக்கிறது. எனது பிள்ளைகளிலிருந்து ஒரு பெண் இந்த பிரதேசத்திலே வஃபாத்தாகுவார்கள். அவர் இமாம் மூஸாவின் மகளாக இருப்பார்கள்’. (ஸஃபீனதுல் பிஹார், பா 02, பக் 276)

மதிப்புமிகுந்த அன்னையவர்களைப் பற்றி, அவர்கள் பிறப்பதற்கு முன்பே, அன்னையின் சியாரத் மற்றும் நல்லடக்கம் ஆகியவற்றின் சிறப்புகளைப் பற்றியும், ஷீஆக்களுக்கு அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மற்றொரு ஹதீஸில், இமாம் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்:

‘கும் நகரம், எங்களது ஹரம் ஷரீஃபாகும். அதிலே எனது பிள்ளைகளிலிருந்து ஒரு பெண் நல்லடக்கம் செய்யப்படுவார். பாத்திமா என்ற பெயரைக்கொண்ட அவரை யார் சியாரத் செய்தாலும் அவருக்கு சுவர்க்கம் உறுதியாகிவிடும்’. (பிஹாருல் அன்வார், பா 06, பக் 216)

இப்படியான ஹதீஸ்கள், இக்கௌரவமான இஸ்லாமியப் பெண்மணியின் கண்ணியம், பெருமை மற்றும் நல்லொழுக்கத்தை எடுத்துக் காட்டுகின்றன. சந்தேகத்திற்கு இடமின்றி, இப்பெண்மணியின் இந்த நல்லொழுக்கங்களும், தார்மீக பண்புகளும்தான் அவருக்கு அத்தகைய உயர்நிலையையும், அந்தஸ்தையும் ஏற்படுத்தியுள்ளன. ஏனென்றால், இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 37 பிள்ளைகள் இருந்தனர். அவர்களிடையே கண்ணியமிகுந்த இப்பெண்மணி ஒரு மின்னும் நட்சத்திரத்தைப் போன்று பிரகாசிக்கிறார்கள். இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு மத்தியிலே இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பிறகு, யாரும் இப்பெண்மணிக்கு நிகராக இருக்கவில்லை. இந்தவகையில் பரிசுத்த இமாம்களின் ஏனைய பிள்ளைகளுக்கு மத்தியிலே அன்னையவர்களின் மகத்துவத்திற்கும், பிரகாசத்திற்கும் காரணமான சிறப்பம்சங்களையும், தனித்தன்மைகளை பின்வருமாறு பார்க்கலாம்.

1. குலச்சிறப்பு

அன்னை பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள் இமாமத் எனும் கோபுரத்திலிருந்து உதயமாகி, இமாமத்தின் கரங்களால் பயிற்றுவிக்கப்பட்டு, பின்னர் இமாமத்தின் சந்ததியை தன்னுடைய பராமரிப்பின் கீழ் வளர்த்துவிட்ட சந்திரனைப் போன்று பிரகாசிக்கிறார்கள். அவர் ஒரு இமாமின் மகளாகவும், மற்றொரு இமாமின் சகோதரியாகவும், மற்றொரு இமாமின் அத்தையாகவும் திகழ்கிறார்கள். அவர்களது முன்னோர்கள் அனைவரும் இமாமத்தை ஒளிரச்செய்த தீப்பந்தங்களாகவும், நேர்வழியை நிலைநாட்டியோராகவும், நல்லொழுக்கத்தின் முன்மாதிரிகளாகவும், விலாயத்தின் தூண்களாகவும் இருக்கிறார்கள்.

அன்னையவர்களின் உன்னதமான தாய், நல்லொழுக்கமுள்ள பெண்மணிகளில் ஒருவர். பயபக்திக்கும், மரியாதைக்கும் முன்னுதாரணமானவர். மானுட வரலாற்றிலே ஒப்பற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்பவர்.

பெற்றோருடைய ஆளுமையின் தாக்கம் அவர்களின் குழந்தைகளின் ஆத்மாவிலும், உடலிலும் ஏற்படுவது மறுக்க முடியாதது என்பது வெளிப்படையானதே. இத்தனித்தன்மை அன்னை பாத்திமா மஃசூமா அவர்களிலும் வெளிப்பட்டுக் காணப்பட்டது. தாய், தந்தை ஆகிய இருவர் தரப்பிலிருந்தும் சிறப்பம்சங்களை வாரிசாகப் பெற்றிருந்தார்கள். இந்தவகையில், இமாம் மூஸா காழிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஏனைய குழந்தைகளை விடவும் அன்னையவர்கள் மேன்மை பெற்றிருந்தமைக்கு இதுவே காரணம் எனலாம். அதேநேரம், உயிரியல் ரீதியில் வாரிசாகப் பெற்ற சிறப்புகளுக்கு அப்பால், அன்னையவர்கள் தானாக முயன்று பெற்ற தனியாள் சிறப்பியல்புகளும் அவர்களின் ஆன்மீகம், நல்லொழுக்கம் மற்றும் அறிவு ஆகியவற்றை முழுமை பெறச்செய்து, ஜொலிப்பதற்கு காரணமாக அமைந்திருந்ததை மறந்துவிடலாகாது.

2. வணக்க வழிபாடு

குர்ஆனின் கூற்றுப்படி, மனித படைப்பின் நோக்கம் இறைவனை வணங்குவதும், நல்லடியானாக இருப்பதுமே தவிர வேறில்லை. என்றாலும், இந்த முக்கியமான இலக்கை உணர்ந்த பலருக்கு, ஆன்மீகத்தின் மிக உயர்ந்த கட்டத்தை எட்டுவது எப்படி என்று தெரிந்திருப்பதில்லை. விலாயத் மற்றும் இமாமத்தைக் கொண்டுள்ள பரிசுத்த அஹ்லுல்பைத்தினரிடமிருந்து இறைவழிபாட்டிற்கும், நல்லடியானாகத் திகழ்வதற்கும் மிக உயர்ந்த எடுத்துக்காட்டுகளில் ஒருவர்தான் சங்கைமிகுந்த அன்னை பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா ஆவார்கள். தனது வாழ்நாள் முழுவதும் இறை சந்நிதானத்திலே அடிபணிந்து மேற்கொண்டுவந்த இறைவழிபாடு, தெய்வீக அடிமைத்துவம் ஆகிவற்றிற்கு ஒரு எடுத்துக்காட்டாக, தனது இறுதி நாட்களில் மூசா இப்னு கஸ்ரஜ் என்பாரின் வீட்டிலே 17 நாட்கள் தங்கியிருந்தபோது அன்னையவர்கள் மேற்கொண்ட இபாதத்களும், இரவு வணக்கங்களும் காணப்படுகின்றன.

3. ஹதீஸ்களை அறிவித்தல்

ஹஸரத் பாத்திமா மஃசூமா அவர்களின் சிறப்பம்சங்களில் ஒன்று, அவர் இஸ்லாத்தினதும், நபிகளாரின் பரிசுத்த குடும்பத்தினரதும் அறிவுக்கருவூலங்களை அறிந்திருந்தமையாகும். இதனால், அவை தொடர்பிலான ஹதீஸ்களை அறிவிப்பவராகக் காணப்பட்டார்கள். இதற்கு உதாரணமாக, அன்னையவர்களை அறிவிப்பாளராகக் கொண்ட பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம். அல்லாமா அமீனி அவர்கள், தனது அல்கதீர் எனும் கிரந்தத்தில் அன்னையவர்களைத் தொட்டும் பதிவுசெய்துள்ள ஹதீஸ் பின்வருமாறு:

‘நான் யாருக்கு மவ்லாவாக இருந்தேனோ, இனி அவர்களுக்கு அலீ மவ்லாவாக இருப்பார்’ (அல்கதீர், பா 01, பக் 196)

இது போன்ற ஹதீஸ்களை அறிவித்திருந்தமை, அன்னையவர்களின் அறிவுக்கு சான்றாக உள்ளது.

4. மஃசூமா எனும் சிறப்புப் பெயர்

அன்னையின் சிறப்புப் பெயர்களில் ஒன்றுதான் மஃசூமா ஆகும். இதன் பொருள் புனிதமானவர் என்பதாகும். மிகவும் உயர்வான ஆன்மீக அந்தஸ்தும், தூய்மையுமான இருக்கின்ற இஸ்மத் என்ற அந்தஸ்துக்கு பல படித்தரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டை முதல்கட்டத்தில் குறிப்பிட முடியும். 1. தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர். 2. பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர். ஒருவர் மறதியினால் செய்யும் தவறுகள் பாவங்கள் ஆகாது என்பதைப் போல எல்லா தவறுகளும் பாவங்களில்லை. அதேநேரம், தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் பாவங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டவராக இருக்கிறார். இப்படியான பரிசுத்த நிலையில் பதினான்கு பரிசுத்தவான்கள் உள்ளனர். என்னதான் பதினான்கு பரிசுத்தவான்களைப் போல் இல்லாது விட்டாலும், அன்னை சைனப் ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களைப் போன்று, மேலே சொன்ன இரண்டு படித்தரங்களில் ஒன்றில் அன்னை பாத்திமா மஃசூமா அவர்களும் இருக்கிறார்கள் என்பது உறுதி.

இது தொடர்பில் இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ள பின்வரும் ஹதீஸைப் பார்க்கலாம்.

‘யார் மஃசூமாவை கும் நகரில் சியாரத் செய்கிறார்களோ, அவர்கள் என்னை சியாரத் செய்தவர்களைப் போன்றவர்கள் ஆவார்கள்’. (ரயாஹீனுஷ் ஷரீஃ, பா 05, பக் 35)

ஹஸரத் பாத்திமா மஃசூமா அவர்களின் இஸ்மத் எனும் பரிசுத்த நிலை குறித்து சான்றுகள் பல உள்ளபோதிலும், இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ள மேற்படி ஹதீஸ், அன்னையவர்கள் இஸ்மத் எனும் அந்தஸ்தில் இருக்கிறார் என்பதற்குச் சான்றாக உள்ளது. ஏனெனில் மேற்படி ஹதீஸில் அன்னையவர்களை ‘மஃசூமா’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது அன்னையவர்களுக்கு இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழங்கிய சிறப்புப் பெயராகும். இந்தவகையில், நிச்சயமாக அன்னையவர்கள் பரிசுத்த பெண்மணியாக இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

5. விரிவான ஷஃபாஅத்

நபிமார்கள் மற்றும் இமாம்களின் ஷஃபாஅத் பற்றிய நம்பிக்கை ஷீஆ சிந்தனையின் இன்றியமையாத ஓர் அம்சமாகும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஷஃபாஅத்தின் மிகவும் உயர்ந்த நிலையானது பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களுடைய ஷஃபாஅத் ஆகும். இதனை அல்-குர்ஆன் ‘மகாம் மஹ்மூத்’ என்று அழைத்துள்ளது.

உண்மையில், நபிகளாரின் பரிசுத்த குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள் நாளை மறுமையில் பலரை பரிந்துரைக்குமளவுக்கு விரிவான ஷஃபாஅத்தைப் பெற்றுள்ளனர் என்று இமாம்களின் வாயிலாக வந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இதன்படி, அவ் இருவர்களும் 1. அன்னை பாத்திமா ஸஹ்றா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள். 2. அன்னை பாத்திமா மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்கள்.

பாத்திமா ஸஹ்றாவுக்குப் பிறகு, ஷஃபாஅத்தின் விரிவான தன்மையின் அடிப்படையில் வேறெவரும் இவருக்கு நிகராக இல்லை எனலாம். இது தொடர்பில் இமாம் ஜஃபர் சாதிக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்:

‘அவருடைய ஷஃபாஅத்தின் மூலம் நமது ஷீஆக்கள் அனைவரும் சுவர்க்கம் நுழைவார்கள்’ (பிஹாருல் அன்வார், பா 06, பக் 228)

6. விசேட சியாரத் மடல்

ஒருவரை சியாரத் செய்யும்போது ஓதவேண்டிய விசேட துஆக்கள் உள்ளன. நபிமார்கள், இமாம்கள் மற்றும் விசேட நபர்கள் ஆகியோரின் புனித ஹரம் ஷரீஃபுகளைத் தரிசிக்கின்ற போது ஓதுவதற்காக இமாம்கள் காட்டித்தந்த விசேட துஆக்கள் உள்ளன. இந்தவகையில், அன்னை மஃசூமா ஸலாமுல்லாஹி அலைஹா அவர்களுக்கும் இவ்வாறான விசேட சியாரத் மடல் உள்ளது. இது அன்னையின் மிகப்பெரும் மகத்துவத்திற்கான சான்றுகளில் ஒன்றாகும்.

குறிப்பாக, இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அன்னையவர்கள் தொடர்பில் வெளியிட்டிருந்த விசேட சியாரத் மடலாக இது இருக்கிறது. ஏனெனில், ஹஸரத் பாத்திமா ஸஹ்றாவுக்குப் பிறகு, ஒரு பெண்மணிக்காக பரிசுத்த இமாம் ஒருவர் வெளியிட்டுள்ள சியாரத் மடலாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இமாம் ரிழா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்:

بلى مَنْ زَارَهَا عَارِفاً بِحَقِّهَا فَلَهُ الْجَنَّةُ

‘யார் அவரை அவருடைய அந்தஸ்தை அறிந்தவராக சியாரத் செய்கிறாரோ, அவருக்கு சுவர்க்கம் உரித்தாகிவிட்டது’

அன்னையின் மக்பராவை நெருங்கி, 34 தடவைகள் ‘அல்லாஹு அக்பர்’ என்றும், 33 தடவைகள் ‘அல்ஹம்து லில்லாஹ்’ என்றும், 33 தடவைகள் ‘சுப்ஹானல்லாஹ்’ என்றும் கூறிவிட்டு, பின்வரும் சியாரத் மடலை ஓதுவீராக…

[player id=8815]

السَّلامُ عَلَىٰ آدَمَ صِفْوَةِ اللّٰهِ، السَّلامُ عَلَىٰ نُوحٍ نَبِيِّ اللّٰهِ، السَّلامُ عَلَى إِبْراهِيمَ خَلِيلِ اللّٰهِ، السَّلامُ عَلَىٰ مُوسَىٰ كَلِيمِ اللّٰهِ، السَّلامُ عَلَىٰ عِيسىٰ رُوحِ اللّٰهِ،

السَّلامُ عَلَيْكَ يَا رَسُولَ اللّٰهِ، السَّلامُ عَلَيْكَ يَا خَيْرَ خَلْقِ اللّٰهِ، السَّلامُ عَلَيْكَ يَا صَفِيَّ اللّٰهِ، السَّلامُ عَلَيْكَ يَا مُحَمَّدَ بْنَ عَبْدِ اللّٰهِ خاتَِمَ النَّبِيِّينَ،  

السَّلامُ عَلَيْكَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ عَلِيَّ بْنَ أَبِي طالِبٍ وَصِيَّ رَسُولِ اللّٰهِ، السَّلامُ عَلَيْكِ يَا فاطِمَةُ سَيِّدَةَ نِساءِ الْعالَمِينَ، السَّلامُ عَلَيْكُما يَا سِبْطَيْ نَبِيِّ الرَّحْمَةِ وَسَيِّدَيْ شَبابِ أَهْلِ الْجَّنَةِ،

السَّلامُ عَلَيْكَ يَا عَلِيَّ بْنَ الْحُسَيْنِ سِيِّدَ الْعابِدِينَ وَقُرَّةَ عَيْنِ النَّاظِرِينَ، السَّلامُ عَلَيْكَ يَا مُحَمَّدَ بْنَ عَلِيٍّ باقِرَ الْعِلْمِ بَعْدَ النَّبِيِّ؛

السَّلامُ عَلَيْكَ يَا جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ الصَّادِقَ الْبارَّ الْأَمِينَ، السَّلامُ عَلَيْكَ يَا مُوسَى بْنَ جَعْفَرٍ الطَّاهِرَ الطُّهْرِ، السَّلامُ عَلَيْكَ يَا عَلِيَّ بْنَ مُوسَى الرِّضَا الْمُرْتَضىٰ، السَّلامُ عَلَيْكَ يَا مُحَمَّدَ بْنَ عَلِيٍّ التَّقِيَّ،

السَّلامُ عَلَيْكَ يَا عَلِيَّ بْنَ مُحَمَّدٍ النَّقِيَّ النَّاصِحَ الْأَمِينَ، السَّلامُ عَلَيْكَ يَا حَسَنَ بْنَ عَلِيٍّ، السَّلامُ عَلَى الْوَصِيِّ مِنْ بَعْدِهِ.

اللّٰهُمَّ صَلِّ عَلَىٰ نُورِكَ وَسِراجِكَ، وَوَلِيِّ وَلِيِّكَ، وَوَصِيِّ وَصِيِّكَ، وَحُجَّتِكَ عَلَىٰ خَلْقِكَ، السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ رَسُولِ اللّٰهِ، السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ فاطِمَةَ وَخَدِيجَةَ، السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ أَمِيرِ الْمُؤْمِنِينَ،

السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ الْحَسَنِ وَالْحُسَيْنِ، السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ وَلِيِّ اللّٰهِ، السَّلامُ عَلَيْكِ يَا أُخْتَ وَلِيِّ اللّٰهِ، السَّلامُ عَلَيْكِ يَا عَمَّةَ وَلِيِّ اللّٰهِ، السَّلامُ عَلَيْكِ يَا بِنْتَ مُوسَى بْنِ جَعْفَرٍ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكاتُهُ؛

السَّلامُ عَلَيْكِ عَرَّفَ اللّٰهُ بَيْنَنا وَبَيْنَكُمْ فِي الْجَنَّةِ، وَحَشَرَنا فِي زُمْرَتِكُمْ، وَأَوْرَدَنا حَوْضَ نَبِيِّكُمْ، وَسَقَانا بِكَأْسِ جَدِّكُمْ مِنْ يَدِ عَلِيِّ بْنِ أَبِي طالِبٍ صَلَواتُ اللّٰهِ عَلَيْكُمْ،

أَسْأَلُ اللّٰهَ أَنْ يُرِيَنا فِيكُمُ السُّرُورَ وَالْفَرَجَ، وَأَنْ يَجْمَعَنا وِإِيَّاكُمْ فِي زُمْرَةِ جَدِّكُمْ مُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَآلِهِ، وَأَنْ لَايَسْلُبَنا مَعْرِفَتَكُمْ إِنَّهُ وَلِيٌّ قَدِيرٌ،

أَتَقَرَّبُ إِلَى اللّٰهِ بِحُبِّكُمْ، وَالْبَراءَةِ مِنْ أَعْدائِكُمْ، وَالتَّسْلِيمِ إِلَى اللّٰهِ راضِياً بِهِ غَيْرَ مُنْكِرٍ وَلَا مُسْتَكْبِرٍ، وَعَلَىٰ يَقِينِ مَا أَتىٰ بِهِ مُحَمَّدٌ وَبِهِ راضٍ، نَطْلُبُ بِذٰلِكَ وَجْهَكَ يَا سَيِّدِي اللّٰهُمَّ وَرِضاكَ وَالدَّارَ الْآخِرَةَ،

يَا فاطِمَةُ اشْفَعِي لِي فِي الْجَنَّةِ فَإِنَّ لَكِ عِنْدَ اللّٰهِ شَأْناً مِنَ الشَّأْنِ.

اللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنْ تَخْتِمَ لِي بِالسَّعادَةِ فَلَا تَسْلُبْ مِنِّي مَا أَنَا فِيهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيمِ .

اللّٰهُمَّ اسْتَجِبْ لَنا وَتَقَبَّلْهُ بِكَرَمِكَ وَعِزَّتِكَ وَبِرَحْمَتِكَ وَعافِيَتِكَ، وَصَلَّى اللّٰهُ عَلَىٰ مُحَمَّدٍ وَآلِهِ أَجْمَعِينَ وَسَلَّمَ تَسْلِيماً يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

2 thoughts on “ஹஸரத் மஃசூமாவின் சிறப்புகள்”

Comments are closed.

Scroll to Top
Scroll to Top