0⃣1⃣ ஹஸ்ரத் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த ஆண்டு எது?
✅ ஹிஜ்ரி 255, ஷஃபான் பிறை 15.
0⃣2⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது எத்தனையாவது வயதில் இமாமத்தை அடைந்தார்கள்?
✅ தனது ஐந்து வயதில்.
0⃣3⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிறிய மறைவு எத்தனையாண்டு நீடித்தது?
✅ 69 ஆண்டுகள்.
0⃣4⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவரக்ளின் சிறிய மறைவில் இமாம் அவர்களின் நான்கு பிரதிநிதிகளும் யார்?
✅ உதுமான் பின் ஸயீத் அம்ரி.
✅ முஹம்மது பின் உதுமான்.
✅ ஹுஸைன் பின் ரூஹ்.
✅ அலி பின் முஹம்மது சமரி.
0⃣5⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவரகளின் பெரிய மறைவு எப்போது ஆரம்பமானது?
✅ ஹிஜ்ரி 329 இல்.
0⃣6⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெரிய மறைவில் இமாம் அவர்களின் பிரதிநிதிகள் யார்?
✅ மராஜிஃ எனப்படும் ஷீஆக்களின் இஸ்லாமிய சட்டங்களை அல்-குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் மக்களுக்கு கூறும் அறிஞர்களாகும்.
0⃣7⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்த பொழுது அவருடைய வலக்கை தோள்பட்டையில் என்ன எழுதப்பட்டிருந்தது?
✅ جَآءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
0⃣8⃣ “இமாமின் வருகை இறைவனோடு சம்மந்தப்பட்டதாகும். யார் ஒருவர் அதனை குறிப்பிட்டுக் கூறுகின்றாரோ அவர் பொய் கூறுகின்றார்” என்ற ஹதீஸ் யாருடையது?
✅ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின்.
0⃣9⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்கான அடையாளங்கள் என்ன?
✅ சுப்யானிகளின் வருகை.
✅ யமானியின் வருகை.
✅ வானிலிருந்து வரும் சத்தம்.
✅ புனிதமான ஆத்மா கொல்லப்படல்.
1⃣0⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எங்கு வெளிப்படுவார்கள்?
✅ மக்காவில்.
1⃣1⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வெளிப்படும் பொழுது எந்த அல்-குர்ஆன் வசனத்தினை ஓதுவார்கள்?
✅ بَقِيَّتُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
1⃣2⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்குப் பின்னர் அவர்களின் ஆட்சியின் தலைநகரம் எது?
✅ கூபா(ஈராக்கில் அமைந்துள்ளது; இமாம் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆட்சியிலும் இதுவே தலைநகரமாக காணப்பட்டது)
1⃣3⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்குப் பின்னர் அவர்கள் எங்கிருந்து ஆட்சி செய்வார்கள்?
✅ மஸ்ஜித் கூபாவிலிருந்து.
1⃣4⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்குப் பின்னர் அவரது முதலாவது தோழர்கள் எங்கு அவருக்கு பைஅத் செய்வார்கள்?
✅ இறைஇல்லம் கஃபாவில் ருக்னுக்கும் மகாமுக்குமிடையில்.
1⃣5⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முதன்மையான தோழர்கள் எத்தனை பேர்கள்?
✅ 313தோழர்கள்.
1⃣6⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையின் போது அவர்களோடு எத்தனை பெண்கள் இருப்பார்கள்?
✅ 13பெண்கள்.
1⃣7⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகையின் பொழுது முதன் முதலாக அவருக்கு பைஅத் செய்பவர் யார்?
✅ ஹஸரத் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
1⃣8⃣ இமாம் அவர்களின் வருகையின் பொழுது எந்த நபி அவரோடு தொழுவார்கள்?
✅ ஹஸரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
1⃣9⃣ ஹதீஸ்களின் பிரகாரம் இமாம் அவர்களின் வீட்டின் பெயர் என்ன?
✅ பைத்துல் ஹம்து.
2⃣0⃣ இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் ஹஸரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இடையிலான ஒற்றுமை என்ன?
✅ நீண்ட ஆயுளாகும்.