துன்பத்தின் வாயில்
இமாம் சாதிக் (அலை) அவர்கள் அருளினார்கள்:
எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படாமலும், அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனை இல்லாமலும் இருக்கிறதோ, அந்த வீட்டில் மூன்று விடயங்கள் உருவாகிவிடுகின்றன:
1) அவரின் சௌபாக்கியம் (பரகத்) குறைந்துவிடுகிறது.
2) வானவர்கள் அந்த வீட்டை விட்டும் விலகிச் சென்றுவிடுகிறார்கள்.
3) அவ்வீட்டினுள்ளே ஷைத்தான் நுழைந்து விடுகிறான்.
(இதன் மூலம் சர்ச்சைகளையும், பிரச்சினைகளையும், வேற்றுமைகளையும் ஷைத்தான் உருவாக்கிவிடுகிறான்).
(அல் காபீ, பாகம் 2, பாகம் 499, ஹதீஸ் இலக்கம் 01)