இரு கால்களில் நிலையாக நிற்றல்

Standing on both legs and Existence of God

இரண்டு கால்களில் நிலையாக நிற்பதை நீங்கள் எப்போதாவது அவதானித்துப் பார்த்துள்ளீர்களா? எவ்வித நடுக்கமும் கோணமும் இல்லாமல் நிலையாக நிற்பது எதனால் என்பதை சிந்தித்துள்ளீர்களா? நிற்கும் போது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ, வலப்புறமாகவோ அல்லது இடப்புறமாகவோ சாயாமல் நிலையாக நிற்பதன் இரகசியம் தான் என்ன?
வலப்புறமோ அல்லது இடப்புறமோ சாயாமல் இருப்பது சாதாரணமான விடயமாகும்; ஏனெனில் இரு கால்களும் தங்களை நோக்கியே முழு சக்தியினையும் பிரயோகித்து சாயாமல் பாதுகாக்கின்றது. ஆனால், முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சாயமல் இருப்பதும் சாதாரணமான ஒரு விடயமாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம், அது அவ்வாறல்ல.
கனமான பொருட்களை சுமந்து கொண்டு நின்றாலும் எமது உடல் முன்னோக்கியோ, பின்னோக்கியோ சாயாமல் இருக்கின்றது; இது ஓர் சாதாரண விடயமா? . அந்த சுமை உங்களது இடுப்பினை பூமியை நோக்கி குனிய வைக்கின்றதே தவிர முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ விழச்செய்வதில்லை. இது ஏன்?
உங்களது கால்கள் மிக அதியுயர் நுட்பமான தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது உடலின் அனைத்து சுமைகளையும் சுமப்பதற்கேற்ப அது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கால்கள் முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: தொடை, கெண்டைக்கால், பாதம்.
மூன்றாவது பகுதியான பாதம் என்பது உடல் எடையைத் தாங்குவதற்கும், இடப்பெயர்ச்சிக்கும் உதவும் மூட்டுகளின் ஒரு பகுதியாகும்.மனிதர்களின் பாதம் இருபத்தாறு எலும்புகளாலும், முப்பத்து மூன்று இணைப்புகளாலும், நூற்றுக்கும் மேற்பட்ட தசைகளாலும், தசை நாண்களாலும், தசைநார்களாலும் ஆனது. இது நன்கு உறுதியாகக் கட்டமைக்கப்பட்ட ஓர் இயந்திரம் போன்ற அமைப்பாகும்.
மனிதனது கால் ஏனைய விலங்குகளின் கால்கள் போன்றிருந்தால் அவனால் நிலையாக நிற்கமுடியாது. அவன் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ சாயாமல் இருக்க பாதத்தின் வடிவமைப்பு உதவியாக உள்ளது. இந்தப் பாத அமைப்பு இல்லாவிடின் மனிதனும் நான்குகால் விலங்குகள் போன்று இரு கைகளையும் பூமியில் ஊன்றியே நிற்கவேண்டியிருக்கும்.
பாதத்தில் குவிவு நிலை இல்லாது சமமாக இருப்பவர்கள் நோயாளிகள் ஆவார்கள்.
மனித உடற்கூறுகள் பற்றி பல அறிவியல் வளர்ச்சிகண்ட இன்றைய உலகு, மனிதனின் உருவாக்கத்தின் அடிப்படைப் பொருள் எவ்வித அறிவும் சிந்தனையும் அற்றது என விளக்கியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது எவ்வாறு முதன் மனிதனின் தோற்றம் எவ்வித குறைகளுமின்றி , மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது? எவ்வித அறிவும் ஆற்றலுமற்ற ஒருவிடயத்தினால் எவ்வாறு மனிதனின் பாதத்தினை வடிவமைக்க முடியும்?.
ஆகவே, மனிதனை மிக நுட்பமாக வடிவமைத்தது ; பரிபூரண அறிவும் பரிபூரண ஆற்றலுமுடைய ஒருவனாலேயே முடியும். அவனே இறைவன்.
🕋 يٰۤـاَيُّهَا النَّاسُ اِنْ كُنْـتُمْ فِىْ رَيْبٍ مِّنَ الْبَـعْثِ فَاِنَّـا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّـطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيْرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمْ‌ وَنُقِرُّ فِى الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ‌ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْــٴًـــا‌ وَتَرَى الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَيْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْبَـتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيْجٍ‏
🗣 மனிதர்களே! (மறுமையில் உங்களுக்கு உயிர் கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால் (உங்களை முதலில் எவ்வாறு படைத்தோம் என்பதைக் கவனியுங்கள்.) நிச்சயமாக நாம் உங்களை (உங்கள் மூலப் பிதாவாகிய ஆதமை) மண்ணில் இருந்தே (படைத்துப்) பின்னர் இந்திரியத் துளியிலிருந்து, பின்னர் அதனை ஓர் இரத்தக் கட்டியாகவும், பின்னர் (அதனை) குறைவடிவ அல்லது முழு வடிவ மாமிசப் பிண்டமாகவும் (நாம் உற்பத்தி செய்கிறோம். நம்முடைய வல்லமையை) உங்களுக்குத் தெளிவாக்கும் பொருட்டே (இவ்வாறு படிப்படியாகப் பல மாறுதல்களை அடைய) ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தங்கி இருக்கும்படி செய்கிறோம். பின்னர், உங்களைச் சிசுக்களாக வெளிப்படுத்தி நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். (இதற்கிடையில்) இறந்து விடுபவர்களும் உங்களில் பலர் இருக்கின்றனர். (அல்லது வாழ்ந்து) அனைத்தையும் அறிந்த பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தள்ளாத வயது வரையில் விட்டு வைக்கப்படுபவர்களும் உங்களில் இருக்கின்றனர். (மனிதனே!) பூமி (புற்பூண்டு ஏதுமின்றி) வறண்டு இருப்பதை நீ காணவில்லையா? அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது பசுமையாகி வளர்ந்து அழகான பற்பல வகை (ஜோடி ஜோடி)யான உயர்ந்த புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
📖அல்குர்ஆன் : 22:5.
🕋 وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ‌فَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
🗣️ (மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை யாவும் ஒரு வகையாக இருக்க வில்லை.) அவைகளில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவைகளில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவைகளில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவைகளை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
📖அல்குர்ஆன் 24:45.
Scroll to Top
Scroll to Top