பலஸ்தீன் தொடர்பாக சவூதி அரேபியா போடும் இரட்டை வேடம்

Saudi Arabia’s dual role in Palestine

 

சவூதி அரேபியா இஸ்ரேல் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான மற்றொரு அறிகுறி. சவூதி எழுத்தாளர் முகமது அல்-சயீத் பாலஸ்தீனியர்களையும், அவர்களின் போராட்டத்தை கண்டித்து, விடுதலை குழுக்களையும் தாக்கி, பழமைவாத (சவூதி) இராச்சியத்தின் தீவிர “எதிரிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரேபிய மொழி ஒகாஸ் நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையில், பாலஸ்தீனியர்கள் கத்தார், துருக்கி மற்றும் ஈரானுடன் தங்களை நெருக்கமாக இணைத்துக் கொண்டதாகவும், “தோஹா, அங்காரா மற்றும் தெஹ்ரான் கைகளில் கைப்பாவைகளாக” மாறிவிட்டதாகவும் சயீத் குற்றம் சாட்டியுள்ளார்.

“பாலஸ்தீனர்கள் பெரும்பாலான அரபு நாடுகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாதத்தைப் பயன்படுத்தினர், மேலும் அரபு நாடுகளுக்கு எதிராக தங்கள் துப்பாக்கிகளையும் குண்டுகளையும் பயன்படுத்தினர்,” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“கடந்த ஆறு தசாப்தங்களாக பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு பதிலாக, அரபுப் படைகளுக்கும் பாதுகாப்புச் சேவைகளுக்கும் எதிராகப் போராடி வருகின்றனர்” என்றும் சயீத் கூறியுள்ளார்.

அரசின் பச்சை சமிக்ஞை இன்றி சவுதி அராபியாவில் அரசுக்கு சொந்தமான ஓர் ஊடகத்தில் இவ்வாறு ஒருவரால் எழுத முடியாது என்பது ரகசியமல்ல.

இந்த சவூதி எழுத்தாளர் பாலஸ்தீனிய மக்களின் போராட்டத்தை கேலி செய்துள்ளதோடு, தூதரகங்கள் மற்றும் சவுதி ஆளுமைகளின் படுகொலைகளுக்கு பின்னால் அவர்கள் இருந்துள்ளனர் என்றும் பாலஸ்தீனர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி தலைவர்களுக்கு எதிராக பாலஸ்தீன மக்கள் விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

“சவுதி அரேபியா அவர்களின் (பாலஸ்தீன மக்களின்) பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர மட்டுமே விரும்புகிறது. (அதற்காக) இதுபோன்ற துன்புறுத்தல்களையும் அவமானங்களையும் சவுதி பொதுமக்கள் இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை பாலஸ்தீனியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

சவூதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வுத் தலைவரும் அமெரிக்காவிற்கான தூதருமான இளவரசர் பந்தர் பின் சுல்தான் பின் அப்துல் அஸிஸ் பாலஸ்தீனியர்களையும் அவர்களுடைய போராட்டத்தையும் கீழ்த்தரமாக தாக்கி பேசிய சில நாட்களுக்குப் பிறகு பாலஸ்தீனியர்களுக்கு எதிரான சயீத்தின் மோசமான கருத்துக்கள் வந்துள்ளன.

former Saudi intelligence chief Prince Bandar bin Sultan bin Abdulaziz.

இந்த வார தொடக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் சவூதி இளவரசர் சவுதிக்கு சொந்தமான அல்-அரேபியா தொலைக்காட்சி செய்தி நெட்வொர்க்கிடம் பாலஸ்தீனியர்கள் ரியாத் ஆட்சியின் ஆதரவை ஏதோ நாம் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது போல் எடுத்துக்கொண்டுள்ளனர் என்று கூறியதோடு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகியன இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்கியதற்காக பாலஸ்தீனிய தலைமை விமர்சித்து அவதூறாக பேசியதாகவும் கூறினார்.

கடந்த ஏப்ரல் பிற்பகுதியில், சவூதி எழுத்தாளர் ரவாஃப் அல்-சயீன் “(பாலஸ்தீனர்கள் வாழும்) பிரதேசத்தை தீயில் பொசுக்கி, நீண்டகாலமாக தொடரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவாருங்கள்” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கேட்டுக்கொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது; பலஸ்தீன் மக்கள் புயலாக கொதித்தெழுந்தனர்.

“நான் ஒரு யூதனின் பக்கத்தில் உறங்குவதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால் ஒரு பாலஸ்தீனியனுடனல்ல. நான் என் வீட்டில் ஒரு யூதனை அனுமதித்து அவனை மகிழ்விப்பேன்; ஆனால் ஒரு பாலஸ்தீனியனை  என் வீட்டிற்குள் நுழையவும் அனுமதிக்க மாட்டேன்”

 என்று தனது யூடியூப் சேனலில் சயீன் கூறுகின்றார்.

பின்னர் அவர் பாலஸ்தீனியர்களை நோக்கி, “நீங்கள் அரேபியர்கள் அல்ல. உங்களுக்கு நிலமோ உரிமைகோர காரணமோ கிடையாது. அந்த நிலம் இஸ்ரேலிய மண். (முன்னாள் இஸ்ரேலிய பிரதமர்கள்) யிட்சாக் ஷமிர், (யிட்சாக்) ராபின் மற்றும் கோல்டா மீர் ஆகியோர் ஹீரோக்கள், ஆனால் நெத்தன்யாகு ஒரு கோழை, ஏனெனில் அவர் உங்களை எரிக்காமல் விட்டு வைத்துள்ளார். அவர் ஏன் ஆயுதங்களை வைத்துள்ளார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை.”

“பாலஸ்தீனர்களை அழித்துவிடுங்கள், பாலஸ்தீனர்கள் குடியேறுவதைத் தடுக்கும் பொருட்டு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் எல்லையை மூடிவிடுங்கள்” என்றும் சயீன் இஸ்ரேலிய பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 15 ம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்திய உத்தியோகபூர்வ வைபவத்தில், எமிரேட்ஸின் வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பஹ்ரைனின் வெளியுறவு மந்திரி அப்துல்லாதீப் அல் சயானி ஆகியோருடன் உறவு இயல்பாக்குதல் ஒப்பந்தங்களில் நெதன்யாகு கையெழுத்திட்டார்.

கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் காசாவிலும் ஒரு சுதந்திர அரசை ஸ்தாபிக்க போராடும் பாலஸ்தீனியர்கள், இந்த ஒப்பந்தங்களை தங்களது போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் செயலாகவே கருதுகின்றனர்.

 

பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இஸ்ரேலுடனான உறவு இயல்பாக்குதல் ஒப்பந்தங்களை கடுமையாக எதிர்த்தார், அமெரிக்காவும் இஸ்ரேலிய ஆட்சியும் பாலஸ்தீனிய தேசத்தின் உரிமைகளை அங்கீகரிக்காத வரை பாலஸ்தீனிய அகதிகளின் பிரச்சினையை தீர்க்க மறுக்கும் வரை இந்த ஒப்பந்தங்கள் பயனற்றவை என்று கூறினார்.

https://www.presstv.com/Detail/2020/10/10/636036/Saudi-writer-assails-Palestinians-with-scathing-comments-claims-they-are-kingdom-enemies?

பலஸ்தீன் தொடர்பாக சவூதி அரேபியா போட்டுவரும் இரட்டை வேடம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சவூதி அரசின் இணக்கமின்றி இந்த உறவு இயல்பாக்கம் நிச்சயம் இடம்பெற்றிருக்காது என்பது சகலரும் அறிந்த விடயம். வெள்ளை மாளிகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுவதற்கு பல மாதங்களுக்கு முன்னர், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், ஒரு நீண்டகால ஒப்பந்தத்திற்கான தனது நியாயத்தை முன்வைத்து வந்தார்.

 

பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய எதிர்ப்பு அலையை சமாளிக்க, முன்னேற்பாடாக சவூதி அரசு பல நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவருகிறது. ஷீஆக்களை விட யூதர்கள் மேலானவர்கள் என்ற பிரச்சாரம் முஸ்லிம் உலகம் முழுவதும் தாம் படியளக்கும் நிறுவனங்கள் மூலமும் தனிநபர்கள் மூலமும் முடுக்கிவிடப்பட்டது.

இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்ரேலை அங்கீகரிக்க ஆர்வமாக உள்ளார், ஆனால் அவரது தந்தை மன்னர் சல்மானின் மரணத்திற்காக காத்திருக்கிறார். இவரின் தலைமையின் கீழ், ரியாத் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக டெல் அவிவ் உடன் கூட்டணி வைப்பதற்கான அவரின் நோக்கங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்று https://www.trtworld.com/magazine என்ற இணையதளம் குறிப்பிடுகின்றது.

Scroll to Top
Scroll to Top