Why does Ayatollah Khamenei recommend everyone to read Rousseau’s “History of Science”?
பியர் ரூசோ (Pierre Rousseau) எழுதிய ‘அறிவியல் வரலாறு’ (The History of Science) எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே, நான் அதை எந்தப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும்?’ என்று கேட்டதற்கு, பேராசிரியர் பதிலளிக்கிறார், ‘நீங்கள் அதனை அண்டலூசியாவுக்கோ அல்லது இஸ்லாமியப் பகுதிகளுக்கோ அனுப்ப வேண்டும்.’ என்று பதிலளித்தார்.’
1. முஸ்லிம்களின் கைகளில் இருந்த உயர்ந்த அறிவு: ‘அறிவியல் வரலாறு’ எனும் நூலில் ரூசோ
மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெறுவது என்பது நாம் எப்போதும் அவர்களின் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. இதன் பொருள் அதுவுமல்ல. இதன் அர்த்தம் என்னவென்றால், நாங்கள் இன்று அவர்களின் மாணவர்களாக இருக்கிறோம், நாளை நாங்கள் அவர்களின் ஆசிரியர்களாக மாறுவோம் என்பதாகும். ஏனெனில், அவர்கள் ஒரு நாள் எங்கள் மாணவர்களாக இருந்தார்கள். இன்று எங்கள் ஆசிரியர்களாக அவர்கள் மாறியிருக்கிறார்கள். மேலை நாட்டினர் எங்களிடமிருந்தே அறிவைப் பெற்றனர். பியர் ரூசோ எழுதிய ‘அறிவியல் வரலாறு’ எனும் புத்தகத்தை நீங்கள் புறட்டிப்பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார், ‘சுமார் நான்கு, ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு வணிகர் ஒரு ஐரோப்பிய நாட்டில் ஒரு பேராசிரியரைச் சந்திக்கிறார். வணிகர், ‘என் குழந்தை பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அதனை எந்தப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும்?’ என்று கேட்டபோது, பேராசிரியர் பதிலளிக்கிறார், ‘கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய நான்கு அடிப்படை நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி அடைந்தால், நீங்கள் அவரை நம் நாட்டில் உள்ள எந்தப் பள்ளிக்கூடத்திற்கோ அல்லது பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள எந்தப் பள்ளிக்கூடத்திற்கோ அனுப்பலாம்.’
இவ்வாறுதான் பியர் ரூசோ எழுதியிருக்கிறார். இது நான் சொல்வது அல்ல. எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள ‘சிலுவைப் போர்கள்’ அவர்களுக்கு உதவின. அவர்களின் அறிஞர்கள் இஸ்லாமியப் பிராந்தியங்களுக்குக் குடிபெயர்ந்தது அவர்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள உதவியது. எங்கள் அறிஞர்கள் மேற்கு பிராந்தியங்களுக்கு குடிபெயர்ந்ததும், எங்கள் புத்தகங்களை அவர்களின் நாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததனூடாக அவர்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள உதவியது. ஒரு நாள், அவர்கள் எங்களிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள் மாணவர்களாக இருந்தார்கள். பிற்காலத்தில், அவர்கள் எங்கள் ஆசிரியர்களாக மாறினர். தற்போதைய நேரத்தில், நாங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களின் மாணவர்கள். ஆனால், பின்னை நாட்களில் நாங்கள் அவர்களின் ஆசிரியர்களாக இருப்போம். ஆகவே, விஞ்ஞானப் பகுதிகளில் மேற்கத்தியர்கள் எங்களை விட உயர்ந்தவர்களாக இருந்தால், தொலைதூர எதிர்காலத்தில் அவர்கள் எங்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் வகையில் நாமும் ஏதாவது செய்ய முடியும் என்பதையும், அவ்வாறே இது உங்கள் விடாமுயற்சியுடனும், உறுதியுடனும் செய்வதற்கு சாத்தியமானது என்பதையும் நம் நாட்டின் ஆய்வியல் சார்ந்த தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.
இமாம் காமெனயீ, 07.07.2004
2. அண்டலூசியாவில் அமைந்துள்ள உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களைப் பற்றி விவாதிக்கும் இரண்டு ஐரோப்பிய வணிகர்கள் பற்றிய ரூசோவின் கதைப்பகிர்வு பற்றிய இமாம் காமெனயீ அவர்களின் கருத்து
ஜார்ஜ் சர்ட்டன் (George Sarton) என்பவரிடமிருந்து ஒன்றை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். மற்றவர்கள் ஏதாவது சொல்லும்போது, நாமே அதைச் சொல்வதை விட மக்கள் அதை எளிதாக ஏற்றுக்கொள்கிறார்கள்!. இதனால்தான் நான் அவரை மேற்கோள் காட்டவிரும்புகிறேன். இல்லையெனில், நான் மேற்கத்தியர்களிடமிருந்து வாக்கியங்களை மேற்கோள் காட்டுவதற்குப் பழக்கப்பட்டவனல்ல. ஜார்ஜ் சார்டன் – இவர் நன்கு அறியப்பட்ட புத்தகமான விஞ்ஞான வரலாற்றை எழுதியவர். இது (ஈரானிய மொழியில்) மொழிபெயர்க்கப்பட்டு, வெளியிடப்பட்ட நிலையில் நீங்கள் அனைவரும் இதனைப் படித்திருக்கலாம் – இவ்வாறு கூறுகிறார், ‘ஈரானிய அறிஞர்கள் இந்த நாகரிகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றனர். ஈரானிய அறிஞர்களின் படைப்புகளை இந்தத் தொகுப்பிலிருந்து அகற்றும்போது, உண்மையில் மிக அழகான பகுதியை அகற்றியுள்ளோம் (என்பது போன்று ஆகிவிடும்).’ சார்டன் ஒரு விஞ்ஞான வரலாற்றாசிரியர். விஞ்ஞான வரலாற்றை எழுதியுள்ள பியர் ரூசோவின் மற்றொரு மேற்கோள் உள்ளது. இந்த புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன்பு பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. நான் பல வருடங்களுக்கு முன்பு அவரது புத்தகத்தைப் பார்த்திருக்கிறேன் என்பதால் அவரை நினைவில்கொண்டு மேற்கோள் காட்டுகிறேன். இதனால், திட்டவட்டமான வார்த்தைகளைக்கொண்டு என்னால் மேற்கோள் காட்ட முடியாதுள்ளது. அவரது புத்தகத்தை நான் பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். நான் அதை மீண்டும் குறிப்பிட விரும்பினேன்…
இந்த புத்தகத்தில், அவர் ஒரு ஐரோப்பிய – இத்தாலியன் அல்லது பிரஞ்சு – வணிகருக்கும் அந்த நாட்களில் ஒரு விஞ்ஞான நிபுணருக்கும் இடையிலான உரையாடலை மேற்கோள் காட்டுகிறார். இது இடைக்காலத்தில் நடந்தது. வணிகர் நிபுணருடன் கலந்தாலோசிக்க விரும்புகிறார். அவரிடம், ‘எனது குழந்தை படித்து அறிஞராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அவரை எந்த நாட்டிற்கு, எந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்?’ என்று வினவியபோது, நிபுணர் பதிலளிக்கிறார், ‘நான்கு அடிப்படை கணித நடவடிக்கைகளில் நீங்கள் திருப்தி அடைந்தால், நீங்கள் விரும்பும் எந்த ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கும் அவரை அனுப்பி வைக்கலாம். இதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், அதையும் மீறி ஏதாவது (கற்றுக்கொள்ள) விரும்பினால், நீங்கள் அவரை அண்டலூசியாவுக்கு அனுப்ப வேண்டும்.’ என்று பதிலளித்தார். அந்த நேரத்தில், அண்டலூசியா முஸ்லிம்களின் கைகளில் இருந்தது. இது இஸ்லாத்தில் அறிவின் வரலாறு. முந்தையது ஈரானுடன் தொடர்புடையது, பிந்தையது இஸ்லாத்துடன் தொடர்புடையது.
அத்தகைய வரலாறு எங்களிடம் உள்ளது. இஸ்லாமியராக இருந்தாலும் சரி, ஈரானிய சூழலில் இருந்தாலும் சரி, அத்தகைய மரபு எங்களிடம் உள்ளது. நிச்சயமாக, நான் இதையும் இணைத்துக் கூறவேண்டும் – இது பழங்குடி மற்றும் தேசியவாதம் என்று பொருள் கொள்ளப்படாது என்று நம்புகிறேன் – இஸ்லாமிய நாடுகளிடையே சிந்தனை மற்றும் அறிவு உற்பத்தியின் உச்சம் ஈரான்தான். இவ்வளவு பெரிய ஆளுமைகளைக் கொண்ட வேறு எந்த நாடும் எங்களுக்குத் தெரியாது. எடுத்துக்காட்டாக, ஈரானில் அல்-கிந்தி போன்ற ஏராளமான தத்துவவாதிகள் உள்ளனர் – மற்றும் அல்-கிந்தி பல தத்துவஞானிகளில் ஒருவர் மட்டுமே – மற்றும் இதுபோன்ற பிற ஆளுமைகள் ஏராளம். எனவே, இஸ்லாமிய அறிவின் வரலாற்றைப் பற்றி நாம் பேசினாலும், ஈரான் இன்னும் முதலிடத்தில்தான் இருக்கும். இது எங்கள் மரபு. இது எங்கள் கடந்த காலம். இதுவே எங்கள் வரலாறு.
இமாம் காமெனயீ, 11.11.2015
3. ஈரானிய முஸ்லிம் விஞ்ஞானிகளின் காலகட்டங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய அறிவியலை ரூசோ வகைப்படுத்தியுள்ளார்
ஆரம்பத்தில் இருந்தே, பண்டைய கிரேக்க விஞ்ஞானிகளான தலேஸ் ஆஃப் மிலேட்டஸ் அல்லது வடிவியல், வேதியியல் போன்ற துறைகளில் உள்ள பிற மேற்கத்திய விஞ்ஞானிகளுக்கு, (ஈரானியர்களான) நாங்கள் உரை புத்தகங்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தோம்;. நம் காலம் வரைக்கும் மற்ற மேற்கத்திய விஞ்ஞானிகளைப் பொறுத்தவகையில் இது உண்மையாகவே இருந்து வந்துள்ளது. எவ்வாறாயினும், ஜார்ஜ் சர்டன் அல்லது பியர் ரூசோ போன்ற வரலாற்றாசிரியர்கள் – 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த புத்தகங்கள்; பியர் ரூசோவின் புத்தகமானது, விஞ்ஞான வரலாற்றில் இவை உள்ளன – நம் சொந்த விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால், எமக்கு அவர்களைத் தெரியாது. மேலும், அவர்கள் இஸ்லாமிய அறிவியலின் வௌ;வேறு காலகட்டங்களை ஜாபீர் இப்னு ஹயான், அல்-குவாரஸ்மி போன்றோரின் காலகட்டங்களாக வகைப்படுத்தியிருந்தனர்!.
இமாம் காமெனயீ, 14.08.2006