ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின் ஹஜ் செய்தி

The Islamic nation’s cry for unity should fall on the heads of the US & its chained dog, the Zionist regime

ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர்

இமாம் ஸெய்யிது அலீ காமெனெயி அவர்களின்

ஹஜ் செய்தி

அன்பாளனும் கருணையாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப் பெயர் போற்றி

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். திரு நபி மீதும் அவரது புனித குடும்பத்தினர், உத்தம ஸஹாபாக்கள் மற்றும் அவரை இறுதி நாள் வரை பின்பற்றுவோர் மீதும் இறைவன் ஸலவாத் ஓதுவானாக.

ஹஜ் பருவம் எப்போதும் இஸ்லாமிய உலகின் கண்ணியம், மகிமை மற்றும் செழிப்பு பற்றிய உணர்வுகளைச் சுமந்தே வந்தது. இந்த வருடத்தில் விசுவாசிகளின் கவலைக்கும் கைசேதத்துக்கும் உள்ளாகி ஆசிப்பவர்கள் மத்தியில் பிரிவின் ஏக்கத்தையும் மனவுளைச்சலையும் உருவாக்கியுள்ளது. புனித கஃபாவைப் பிரிந்த தனிமையில் இதயங்கள் பதைக்கின்றன. ஹஜ்ஜை அடைந்து கொள்ளாதோரின் லப்பைக் கோஷத்தில் கண்ணீரும் பெருமூச்சும் கலந்துள்ளது. இந்த இடைஞ்சல்கள் தற்hலிகமானவையே. இறைவனின் கருணையாலும் வல்மையாலும் நீண்ட காலம் நீடிக்காது. ஹஜ் எனும் அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொண்டமை நாம் இதிலிருந்து கற்ற பெரும் பாடமாகும். அது என்றும் நிலைத்திருநது நம்மை அலட்சியத்தில் இருந்து விழிப்படையச் செய்ய வேண்டும்.

பல்வேறு இடங்களைச் சேர்ந்த விசுவாசிகள் புனித கஃபாவின் பூமியிலும் நபிகளாரின் புனித நகரிலும் பகீயில் அடங்கியுள்ள இமாம்களின் புனித தளங்களைச் சுற்றியும் ஒன்று கூடுவதில் உள்ள இஸ்லாமிய உம்மத்தின் மகிமையினதும் வலிமையினதும் மர்மம் பற்றி வேறு எப்போதையும் விட நாம் உணரவும் சிந்திக்கவும் வேண்டும்.

ஹஜ் ஒப்பற்ற தனித்துவமான கடமையாகும். இஸ்லாத்தின் கடமைகளுள் பல நூறு இதழ்கள் கொண்ட அரிய மலர் போன்றது. அதனுள் முக்கியமான தனிமனித, சமூக, பூலோக, விண்ணுலக, வரலாற்று அம்சங்கள் அனைத்தும் அதில் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. அதில் ஆன்மீகம் அமைந்துள்ளது. ஆனால் துறந்து செல்லல், தனித்து வாழ்தல் என்பன அதில் கிடையாது. அதில ஒன்று கூடுதல் உள்ளது. ஆயினும் அது முரண்பாடு, குழப்பம், தீய எண்ணம் என்பவற்றுக்கு அப்பால் உள்ளது. ஒரு புறத்தில் இரைஞ்சுதல், இறை தியானம், பிரார்த்தனை என ஆன்மீக பெறுமானங்களும் மறு புறத்தில் மனிதர்கள் மத்தியிலான நல்லுறவும் பிணைப்பும் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஹாஜியும் ஒரு கண்ணோட்டத்தில் சரித்திரத்தோடுள்ள தனது நீண்ட கால உறவைக் கொண்டவராவார். நபி இப்றாஹீம், இஸ்மாயில், மனித சமுதாயத்துக்கு சமயம் வைத்திருக்கின்ற இலக்குகளும் பெறுமானங்களும் உயரிய பயனைத் தர வேண்டுமாயின் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லடியார்களின் ஒற்றுமை என்பன இன்றியமையாதன என்பதை ஹஜ்ஜின் தாத்பர்யம் பற்றி நன்கு சிந்திக்கின்ற ஹாஜி புரிந்து கொள்வார். இந்த ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் நிலை நிறுத்தப்படும் போது தமது பாதையில் தொடர்ந்து பணயிப்பதில் பகைவர்களின் திருகுதாளங்கள் தடையாக அமையாது.

அமைதியின்மை, அநியாயம், ஒடுக்கப் பட்டோரைப் படுகொலை செய்தல், சூறையாடுதல் போன்றவற்றின் மொத்த வடிவமான வல்லாதிக்கங்களுக்கு எதிரான தமது சக்தியை ஒப்புவிக்கும் ஒத்திகையே ஹஜ் ஆகும். இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தின் உடலும் உயிரும் வல்லாதிக்கங்களின் அநியாயங்களாலும் அடாவடித்தனங்களாலும் துவண்டு போயுள்ளன. ஹஜ்ஜின் முலம் உம்மத்தின் இலகு மற்றும் கடின ஆற்றல்கள் காட்சிப்படுத்தப் படுகின்றன. ஹஜ்ஜின் இயல்பும் உயிரோட்டமும் அதன் அதி முக்கிய நோக்கங்களில் ஒன்றுமாகும். உயரிய தலைவர் இமாம் கொமெய்னி இதனையே இப்ராஹிமிய ஹஜ் என்றார். ஹஜ் விவகாரங்களின் பொறுப்பைச் சுமந்துள்ள ஹரமைனின் காவலர்கள்என தம்மை அழைத்துக் கொள்வோர் மனப்பர்வமாக இப்பொறுப்பை நிறைவேற்றுவார்களாயின், அமெரிக்காவை மகிழ்விப்பதற்குப் பதிலாக இறை திருப்தியை தேர்ந்தெடுப்பர்களாயின் இஸ்லாமிய உலகின் பாரிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றல் பெறுவார்கள்.

எப்போதும் போல இன்றும் இஸ்லாமிய உம்மத்தின் நலன்கள் அதன் ஒற்றுமையிலேயே அவசியம் தங்கியுள்ளது. எதிரிகளின் அச்சுறுத்தல்கள் முன்னால் கருத்தோர்மைப்பட்ட ஐக்கியம். சாத்தானின் மறுவடிவமான அடாவடித்தனம் புரியும் அமெரிக்காவினதும் அதன் ஏவல் நாயான சியோனிஸ அரசினதும் முன்னால் இடியாக ஓங்கி ஒலிக்கும் குரலான ஐக்கியம். அத்தகைய ஐக்கியமே அவற்றின் சண்டித் தனத்துக்கு முன்னால் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்தெழும் வல்லமை பெற்றது. பின்வரும் இறைவாக்குகள் அந்த ஒற்றுமையையே சுட்டி நிற்கின்றன.

‘அனைவரும் ஒனறிணைந்து இறைவனின் கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விட வேண்டாம்’. ‘நிராகரிப்போர் மீது கடுமையானவர்கள்ää தமக்குள் இரக்கமுள்ளவர்கள்’ எனும் சட்டகத்துக்குள் இஸ்லாமிய உம்மத்தை அறிமுகப்படுத்துகிறது புனித குர்ஆன்.

‘அநியாயம் செய்வோருடன் இணங்க வேண்டாம்’, ‘விசுவாசிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு நிராகரிப்பாளர்களுக்கு அல்ல்hஹ் இடமளிக்கவே மாட்டான்’, ‘நிராகரிப்பின் தலைமைகளுடன் போராட்டம் நடத்துங்கள்’, ‘எனதும் உங்களதும் எதிரிகளை காவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்’ முதலிய கடமைகளை உம்மத்திடம் எதிர்பார்க்கப்படுகிறது.

பகைமையை இனங்கண்டு கொள்வதற்காக ‘மார்க்க விவகாரத்தில் உங்களுடன் சமர் புரியாத, வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதவர்களுடன் பொருதுவதை அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கிறான்’ என்ற தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான இந்த கட்டளைகள் ஒரு காலமும் முஸ்லிம்களின் சிந்தனை மற்றும் பெறுமான ஒழுங்கில் இருந்து அகன்று விடவோ மறக்கப்படவோ கூடாது.

இந்த அடிப்படை மாற்றத்திற்கான பின்புலம் தற்போதும் முன்னெப்போதையும் விட உம்மத்தினதும் நலன் விரும்பிகளினதும் ஆர்வலர்களினதும் கைக்கு எட்டு தூரத்தில் வந்துள்ளது. முஸ்லிம் இளைஞர்களும் ஆர்வலர்களும் தமது அறிவு மற்றும் ஆன்மீக வளங்களைப் பற்றிய கரிசனையோடு திகழும் இஸ்லாமிய எழுச்சியானது இன்று நிராகரிக்க முடியாத யதார்த்தமாகும். ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரும் மேற்கு நாகரிகத்தின் பொக்கிசங்களாகக் கருதப்பட்ட லிபரல்வாதமும் கம்ய10னிஸமும் இன்று பொழிவிழந்து சீரமைக்க முடியாத நிலையில் சிதைவடைந்துள்ளன. அவற்றில் ஒன்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஆட்சி சரிந்து வீழ்ந்தது. மற்றையதன் மீதான ஆட்சி அமைப்பும் கூட அடிப்படையான நெருக்கடிகளில் சிக்கி அழிவின் விளிம்பில் நிற்கிறது.

அசிங்கமான ஆரம்பத்தைக் கொண்ட மேற்கத்திய கலாசாரத்தின் முன்மாதிரி மட்டுமன்றி அதன் அரசியல் மற்றும் பொருளாதார முன்னுதாரணமும் கூட தனது பணம் சேகரிக்கும் வகுப்பு வேறுபாட்டினதும் முதலாளித்துவ வர்க்கவாதத்தினதும் சுரண்டலினதும் அடிப்படையிலான ஜனநாயகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

மேற்கு நாகரிகத்தின் அறிவியல் மற்றும் நாகரிக உரிமைகளை சவாலுக்குட்படுத்தி அவற்றுக்கு இஸ்லாமிய பிரதியீடுகளை நெஞ்சுறுதியுடனும் பெருமையுடனும் முன்மொழியும் ஆர்வமுள்ள அறிஞர்கள் இன்று இஸ்லாமிய உம்மத்தில் பெரும் எண்ணிக்கையில் உள்ளார்கள். லிபரல் சிந்தனையை வரலாற்றின் இறுதியான சிந்தனையாக அகங்காரமாக அறிமுகப்படுத்திய மேற்கின் பெரும் சிந்தனையாளர்கள் கூட தற்போது தமது நிலைப்படுகளைக் கைவிட்டு சித்தாந்த மற்றும் நடைமுறை ரீதியான தமது குழப்ப நிலையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அமரிக்காவின் நடைபாதைகளைக் கவனியுங்கள். அந்நாட்டு ஆட்சியாளர்கள் தமது மக்களுடன் நடந்து கொள்ளும் முறை, அந்த நாட்டில் வர்க்க வேறுபாட்டில் காணப்படும் பாரிய இடைவெளி, அந்த நாட்டின் நிர்வாகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் வெகுளித்தனமும் கோமாளித்தனமும் அங்குள்ள ஆழமான இன முரண்பாடு, குற்றமற்ற அப்பாவியை நடுவீதியில் மக்களின் கண்முன்னால் மிகச் சாதாரணமாக வதை செய்து கொலை செய்யும் கல்மனம் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் என எல்லாமே மேற்கு நாகரிகத்தின் சமூகää ஒழுக்க ரீதியான சிக்கலான நெருக்கடிகளைப் பறைசாற்றுகின்றன. அது மட்டுமன்றி அதன் அரசியல் மற்றும் பொருளதார தத்துவத்தின் சிதைவையும் தோல்வியையும் உணர்த்துகின்றன.

பலவீனமான தேசங்களுடன் அமெரிக்கா நடந்து கொள்ளும் முறை, கறுப்பின அப்பாவியின் கழுத்தில் முழங்காலை அழுத்தி உயிர் பிரியும் வரை இறுக்கிப் பிடித்த காவல் அதிகாரியின் நடத்தையின் பெரிது படுத்திய பிரதியாகும். மேற்கின் ஏனைய அரசுகளும் தமது ஆற்றலுக்கும் வசதிக்கும் ஏற்ப இது போன்ற படுமோசமான நிலைமைக்கு சிறந்த முன்னுதாரணங்கள் ஆவர்.

இந்த நவீன ஜாஹிலியத்துக்கு எதிரான செழுமை மிக்க தோற்றப்பாடே ஹஜ் ஆகும். அது இஸ்லாம் நோக்கிய அழைப்பாகும். அது இஸ்லாமிய சமுதாயத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கின்றது. அந்த சமுதாயம் ஏகத்துவத்தை மையமாக் கொண்டு இடைவிடாது நகர்ந்தேறிச் செல்லும் விசுவாசிகளின் சகவாழ்வை வெளிப்படுத்துகிறது. முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் அப்பால்ää சமுதாய வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால், சீரழிவு மற்றும் மாசடைதலுக்கு அப்பால் அமைவது அதன் அடிக்கடை நிபந்தனையாகும்.

இங்கு சைத்தானுக்குக் கல் எறிதல், இணைவைப்பாளர்களின் தொடர்பறுத்தல், இடர்பட்டோருக்கு ஆதரவளித்தல், தேவையுடையோருக்கு உதவிக் கரம நீட்டுதல், விசுவாசிகளின் நம்பிக்கைகளை உயரப் பிடித்தல் என்பன இதன் அடிப்படையான கடமைகளாகும். இறைவனைப் போற்றுவதும் அவனுக்கு நன்றி சொல்வதும் அவனுக்கு வழிபடுவதை உறுதி செய்வதும் அத்தோடு பொதுவான நலன்களையும் பயன்களையும் அடைந்து கொள்ளலும் இறுதியான அடித்தளமாக அமையும் இலக்குகளில் உள்ளவையாகும். இப்ராஹிமிய ஹஜ்ஜில் பிரதிபலிக்கும் இஸ்லாமிய சமுதாயத்தின் சுருக்கமான வடிவம் இதுவாகும். பெரும் உரிமை கோரல்களுடன் காணப்படும் மேற்கு சமுதாயங்களின் உண்மை நிலையுடன் இதனை ஒப்பிடும் போது ஆர்வமுள்ள ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இத்தகைய ஓர் உயரிய சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்காகவும் அதனைப் பாதுகாக்க போராடுவதற்குமான ஆர்வம் அள்ளி நிறையும்.

ஈரானிய மக்களாகிய நாம் பெருந் தலைவர் இமாம் கொமெய்னியின் வழிகாட்டலிலும் அவரது தலைமையிலும் இதே ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்து வெற்றியும் கண்டோம். நாம் அடையாளம் கண்டவற்றையும் நாம் விரும்பியவற்றையும் அவ்வாறே அடைந்து கொண்டோம் என்று நான் வாதிடவில்லை. ஆயினும் நாம் இந்தப் பாதையில் முன்னேறிச் செல்கிறோம் என்பதையும் பாதையில் இருந்த பல்வேறு தடைகளை நாம் நீக்கி விட்டோம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன். குர்ஆனின் வாக்குறுதிகளின் மீதான அசையாத நம்பிக்கையின் பலனாக நமது பாதையில் ஸ்திரமான அடிகளை எடுத்து வைக்கிறோம். யுகத்தின் மிகப் பெரும் கொள்ளைக் காரனும் வழிப்பறிக்காரனும் ஆகிய அமெரிக்க அரசால் நம்மை அச்சுறுத்தவோ வீழ்த்தவோ ஏமாற்றவோää நமது ஆன்மீக மற்றும் அறிவியல் முன்னேற்றங்களைத் தடுக்கவோ முடியவில்லை.

நாம் அனைத்து முஸ்லிம் சமுதாயங்களையும் நமது சகோதரர்களாகவே கணிக்கிறோம். நமக்கு எதிரான முகாமில் சேர்நது கொள்ளாத முஸ்லிம் அல்லாத நாடுகளுடன் நீதியுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்கிறோம். முஸ்லிம் சமுதாயங்களின் கஷ்டநஷ்டங்களை நமது இடராகக் கருதி அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம். பலஸ்தீன மக்களுக்கு உதவி செய்தல்ää காயப்பட்டுள்ள யெமன் தேசத்துக்கு ஆதரவளித்தல், உலகின் எந்த இடத்திலும் அநீதியிழைக்கப்பட்ட முஸ்லிம்களின் இ;ன்னல்கள் பற்றிய கரிசனை என்பன பற்றி நாம் கவனம் செலுத்துகிறோம். சில முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு சில உபதேசங்களை கூற விரும்புகிறேன்:

தமது சகோதர முஸ்லி;ம் மீது நம்பிக்கை வைப்பதை விடுத்து எதிரியின் பாதுகாப்பில் தஞ்சம் அடையும் ஆட்சியாளாகள், தமது சில நாள் சொகுசுக்காக எதிரியின் வன்முறைகளையும் இழிவுகளையும் பொறுமையோடு சகித்துக் கொள்வார்கள். தமது தேசத்து மக்களின் கண்ணியத்தையும் சுயாதீனத்தையும் அதற்காக விலை பேசுவார்கள். அநியாயம் செய்யும் ஆக்கிரப்புக்கார சியோனிச அரசை அங்கீகரிக்கும் அவர்கள் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் அவ்வாட்சியாளரிடம் நேசக் கரம் நீட்டுகிறார்கள். நான் இவர்களுக்கு வழங்கும் உபதேசம் என்னவெனில் இந்தப் போக்கின் கசப்பான விளைவுகள் பற்றி அவர்களை எச்சரிக்கிறேன்.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரசன்னம் இப்பிராந்திய நாடுகளின் நலன்களைப் பாதிக்கும் என்றும் அந்நாடுகளின் அழிவுக்கும் பாதுகாப்பின்மைக்கும் பின்னடைவுக்கும் காரணமாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அமெரிக்காவின் தற்கால விவகாரங்களில் அதிலும் குறிப்பாக அங்கு உருவாகியுள்ள இனவாத பாகுபாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளில் அந்த மக்களுக்காக ஆதரவளிப்பதும் இனப் பாகுபாட்டைத் தூண்டும் அரசாங்கத்தின் கடும் போக்கைக் கண்டிப்பதும் நமது தெளிவான நிலைப்பாடாகும்.

முடிவாக, நமது உயிர் அர்ப்பணமாகும் இறுதியான இமாம் அவர்களுக்கு ஸலாம் சமர்ப்பிக்கிறேன். இமாம் கொமெய்னிக்கும் உயிர் நீத்த தியாகிகளுககும் நல்லருள் கோருகிறேன். முஸ்லிம் உம்மத் பாதுகாப்பான பேரருள் மிக்க ஹஜ்ஜினை மிக வரைவில் அடைந்து கொள்ள இறையோனைப் பிரார்த்திக்கிறேன்.

அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீது ஸலாம் உண்டாவதாக.

ஸெய்யித்அலீ காமெனெயி

Scroll to Top
Scroll to Top