முஹியித்தீன் பள்ளிவாசல்கள்

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 14 முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல்களும், இரண்டு முஹியத்தீன் தக்கியாக்களும் காணப்படுகின்றன.

குருணாகல் மாவட்டத்தில் 16 முஹியித்தீன் மஸ்ஜிதுகளும் இரண்டு முஹியித்தீ்ன் தக்கியாக்களும் காணப்படுகின்றன. (முஸ்லிம் சமயகலாசார திணைக்களத்தின் பதிவுகளின் அடிப்படையில்) இவற்றில் சில பள்ளிவாசல்கள் ஆயிரம்வருடங்கள் பழமை வாய்ந்தவை.

(இலங்கையின் பள்ளிவாசல்கள் பற்றி தனியான ஆய்வொன்றை மேற்கொண்டு வருகிறோம். அதற்கமைய திரட்டிய தகவல்களின் அடிப்படையில் கிடைத்த தரவுகளை பகிர்ந்துகொள்கிறோம்)

சில பள்ளிவாசல்கள் 600 வருடங்களைத் தாண்டியவை. போர்த்துக்கேயரினால் நிர்முலமாக்கப்பட்ட பள்ளிவாசல்களை மீண்டும் கட்டியெழுப்ப இமாம் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் (றஹ்) அவர்கள் மகத்தான சேவைகளை நிறைவேற்றினார்கள். அவர்கள் இலங்கையில் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், மத்ரஸாக்கள் அடங்கலாக 350 சமய நிறுவனங்களை நிறுவினார்கள்.

பொதுவாக இலங்கையில் உள்ள பெரும்பாலான பெரிய பள்ளிவாசல்கள் Grand Mosques முஹியித்தீன் பள்ளிவாசல்களாகும். சில இடங்களில் சில வெறியர்கள் முஹியத்தீன் என்ற பெயர் சிர்க என்று கூறி அதனை சில அரபு முதலாளிகளின் குடும்பத்தவர்களின் பெயர்களால் பிரதியீடு செய்திருக்கிறார்கள். (ஊரான் கோழிய அறுத்து வாப்பாட பெயர்ல கத்தம் ஒதியதைப் போல) முஹியித்தீன் பள்ளிவாசல்கள் இலங்கை முஸ்லிம்களின் தலைமுறை வரலாற்றுக்கான சான்றுகளாகும். அவற்றைப் பாதுகாக்க முயற்சிப்போம்.

படத்தில் உள்ள முதலாவது பள்ளிவாசல் ஆயிரம் வருடங்களை தாண்டியதாகும். இது உமையாக்களிடமிருந்து அப்பாஸியர்களுக்கு ஆட்சிமாறும் Transitional period பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

ஆயிரம் வருடங்கள் தாண்டிய பெரும்பாலான பள்ளிவாசல்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இவ்வாறான பள்ளிவாசல்களுக்குப் பதிலாக களினி கங்கை, அத்தனகல்ல ஒய என்பவற்றக்கு அருகில் பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டு அவ்வாறான இடங்களில் முஸ்லிம் குடியேற்றங்கள் இடம்பெற்றன. கொழும்பு, கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் இதற்கான தெளிவான சான்றுகள் காணப்படுகின்றன.

மிப்பர்கள், மினாராக்கள், ஹவ்ழ்கள், கப்றுஸ்தானங்கள், அஸா என்பனவும் எமது அடையாளங்களே.

(வாய்ப்பு இருந்தால் உங்கள் ஊரில் உள்ள முஹியித்தீன் பள்ளிவாலசலின் படத்தை comment செய்யவும்)

– பஸ்ஹான் நவாஸ்

 Source & Thanks:

Scroll to Top
Scroll to Top