நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் தனது தோழர்களிடம் ‘யார் மிகவும் வறியவர்?’ என்று வினவினார்கள்.
அதற்கு தோழர்கள் ‘ பண வசதியற்ற, தனது அன்றாட தேவையினை பூர்த்தி செய்ய முடியாதவர்’ என பதிலளித்தனர்.
அதற்கு நபியவர்கள் ‘ நீங்கள் கூறுபவர் உண்மையில் வறியவர் அல்ல. உண்மையில் வறியவர் யாரெனில் மறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் பிற மனிதர்களின் உரிமைகளை தன்னுடைய கழுத்தில் சுமந்தவாறு காணப்படுபவராவார். இவர் யாரெனில்,
பிற மனிதர்களுக்கு அசிங்கமான வார்த்தைகளைப் பிரயோகித்தவர்;
பிறருடைய உடமைகளை அபகரித்தவர்;
சக மனிதர்களின் இரத்தத்தை ஓட்டியவர்;
பிறரை துன்பப் படுத்தியவர்;
இவர் நன்மைகள் வைத்திருந்தால் அவை, அவரினால் அநீதியிழைக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும். அவருடைய நன்மைகள் போதாத சமயத்தில் அவரினால் அநீதிக்குள்ளானவர்களின் தீமைகள் இவருக்கு வழங்கப்படும். பின் இவரை நரகத்திற்குள் நுழைவிக்கப்படும். இவரே உண்மையான வறியவரும் பார்வையற்றவருமாவார்’ என நபியவர்கள் கூறினார்கள்.
( பிகாருல் அன்வார் : பாகம் 72 பக்கம்6)
தொடர்புகளுக்கு:
info@peace.lk
Facebook
Twitter
Google-plus
Instagram
Dribbble
Youtube