முஸ்லிம் சிந்தனையாளர் சிலரின் நம்பிக்கையின் படி, குர்ஆன், சுன்னா மற்றும் நஹ்ஜுல் பலாகாவுக்கு அடுத்ததாக ஸஹீஃபாதான் தெய்வீக அறிவுகளையும் ஞானங்களையும் உள்ளடக்கிய மிகப்பெரும் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
இதன்படி, ‘உஹ்க்துல் குர்ஆன்’ (திருக்குர்ஆனின் சகோதரி), ‘இன்ஜீலு அஹ்லுல்பைத்’ (அஹ்லுல்பைத்தின் இன்ஜீல்வேதம்), ‘ஸபூரு ஆலிமுஹம்மத்’ (நபி குடும்பத்தாரின் ஸபூர்வேதம்) மற்றும் ‘ஸஹீஃபா காமிலா’ (சம்பூரண நூல்) என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.(1)
ஸஹீஃபா காமிலா எனப் பெயரிடப்பட்டமைக்கான காரணம் ‘சைதிய்யா’ ஷீஆக்களிடத்தில் முழுமை பெற்றிராத மூலப்பிரதி இருந்த நிலையில், இமாமிய்யா ஷீஆக்களிடத்தில் அது பரிபூரணமாக இருந்ததனால் ஸஹீஃபா காமிலா என்று அழைத்தனர்.(2)
———————————
(1). அத்-தரீஆ, பா:15, பக்:18, 19.
(2). முகத்தமது மர்அஷி நஜஃபீ அலஸ் ஸஹீஃபா, பக்:46