துஆக்கள் மற்றும் முனாஜாதுகளின் தலைப்புகள்

ஸஹீஃபா ஸஜ்ஜாதிய்யா, பின்வரும் 54 பிரதான துஆக்களையும், 7 வாரநாட்களில் ஓதப்படும் துஆக்களையும், 15 முனாஜாதுகளையும் கொண்டமைந்துள்ளது.

துஆக்கள்
1. இறைபுகழ் கூறி தொடங்கும் துஆ
2. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறும் துஆ
3. அர்ஷைச் சுமப்போர், நெருக்கமான வானவர்கள் மீது ஸலவாத் கூறும் துஆ
4. இறைதூதர்களை பின்பற்றுவோர், மெய்ப்படுத்துவோர் மீது ஸலவாத் கூறும் துஆ
5. தனக்கும், தனது குடும்பத்திற்கும், சகாக்களுக்கும் கேட்கும் துஆ
6. காலையும் மாலையும் ஓதும் துஆ
7. துன்பம், துயரம், சோகம் ஆகியன நிகழும்போது ஓதும் துஆ
8. வெறுக்கத்தக்க, இழிவான, தீய பண்புகளை விட்டும் பாதுகாப்புக் கோரும் துஆ
9. மன்னிப்புக் கோருவதின் பாலான ஆர்வத்தை வெளிப்படுத்தும் துஆ
10. இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி ஓதும் துஆ
11. நல்ல முடிவுகளைக் கோரும் துஆ
12. பாவங்களை ஒப்புக்கொண்டு, தௌபாவை வேண்டிநிற்கும் துஆ
13. இறைவனின் பாலான தேவைகளை வேண்டி ஓதும் துஆ
14. அநீதி இழைக்கப்பட்டாலோ, அநியாயக்காரரிடம் விரும்பத்தகாததை கண்டாலோ ஓதும் துஆ
15. நோய், துன்பம் வரும் போது ஓதும் துஆ
16. பாவங்களிலிருந்து விடுபட்டும், தவறுகளிலிருந்து மன்னிப்புக் கோரியும் மன்றாடும் துஆ
17. ஷைத்தானிடமிருந்தும், அவனது பகைமை, சூழ்ச்சியிலிருந்தும் பாதுகாப்பு வேண்டி ஓதும் துஆ
18. துன்பம் நீங்கினால் அல்லது நாடியது கிடைத்தால் ஓதும் துஆ
19. வரட்சிக்குப் பின், மழைவேண்டி ஓதும் துஆ
20. நற்பண்புகளைக் கோரும் துஆ
21. ஒரு காரியம் கவலையூட்டினாலோ, கவனத்தை சிதறடித்தாலோ ஓதும் துஆ
22. கஸ்டத்தின் போதும், காரியங்கள் கடினமாகும் போதும் ஓதும் துஆ
23. சரீர சுகத்தை வேண்டியும், அதற்காக நன்றி கூறியும் ஓதும் துஆ
24. பெற்றோருக்காக கேட்கும் துஆ
25. பிள்ளைகளுக்காக கேட்கும் துஆ
26. அயலவர்களுக்காக கேட்கும் துஆ
27. எல்லைக் காவலர்களுக்காக கேட்கும் துஆ
28. இறைவனிடம் இரைஞ்சி ஓதும் துஆ
29. உணவில் நெருக்கடி ஏற்படும் போது ஓதும் துஆ
30. கடனை அடைப்பதற்கு உதவி கோரும் துஆ
31. தௌபா செய்து, பாவமன்னிப்புக் கோரும் துஆ
32. இரவுத் தொழுகையின் முடிவில், பாவ ஒப்புதலளித்து தனக்காக பிரார்த்திக்கும் துஆ
33. நன்மையை வேண்டி ஓதும் துஆ
34. சோதனைக்கு உள்ளானால் அல்லது குற்றம் அம்பலமானால் ஓதும் துஆ
35. உலகோரைக் கருத்திற்கொண்டு, இறைவனின் ஏற்பாட்டைப் பொருந்தி ஓதும் துஆ
36. கார்மேகம், மின்னல் ஆகியவற்றைக் காணும்போதும், இடிமுழக்கத்தை செவியுறும் போதும் ஓதும் துஆ
37. இறைவனுக்கு நன்றி சொல்வதில் ஏற்பட்ட குறையை ஒப்புக்கொண்டு ஓதும் துஆ
38. அடியாருடைய உரிமைகளில் ஏற்பட்ட தனது குறைகளுக்கும், அவற்றில் உண்டாகும் பின்விளைவுகளுக்கும் மன்னிப்புக்கோரியும், அவற்றின் மூலமான நரகப் பிணைப்பிலிருந்து விடுபடவும் ஓதும் துஆ
39. பாவமன்னிப்பையும், கருணையையும் கோரும் துஆ
40. ஒருவருடைய மரண செய்தி கேட்டாலோ, மரணம் பற்றி ஞாபகமூட்டினாலோ ஓதும் துஆ
41. குறைகளை மறைத்துப் பாதுகாக்கக் கோரும் துஆ
42. குர்ஆனை ஓதிப்பூர்த்திசெய்யும் போது கேட்கும் துஆ
43. பிறைகாணும் போது ஓதும் துஆ
44. றமழான் தொடங்கும்போது ஓதும் துஆ
45. றமழானை வழியனுப்பி ஓதும் துஆ
46. பெருநாட்கள் மற்றும் ஜும்ஆ தினங்களில் ஓதும் துஆ
47. அரபா தினத்தில் ஓதும் துஆ
48. ஈதுல் அழ்ஹா மற்றும் ஜும்ஆ நாட்களில் ஓதும் துஆ
49. எதிரிகளின் சதிகளை முறியடித்து, அவர்களின் பகையையும், மிகைப்பையும் தடுக்கக் கோரும் துஆ
50. இறைவனின் சோதனை பற்றிய அச்சத்தின் போது ஓதும் துஆ
51. இறைவனிடத்தில் கெஞ்சியும், அடிபணிந்தும் கேட்கும் துஆ
52. இறைவனிடம் மன்றாடி வலியுறுத்திக் கோரும் துஆ
53. அல்லாஹ்விடம் பணிவையும், பக்தியையும் வெளிப்படுத்தி ஓதும் துஆ
54. கவலைகள் நீங்கக் கோரும் துஆ
55. ஞாயிற்றுக் கிழமையில் ஓதும் துஆ
56. திங்கட் கிழமையில் ஓதும் துஆ
57. செவ்வாய்க் கிழமையில் ஓதும் துஆ
58. புதன் கிழமையில் ஓதும் துஆ
59. வியாழக் கிழமையில் ஓதும் துஆ
60. வெள்ளிக் கிழமையில் ஓதும் துஆ
61. சனிக் கிழமையில் ஓதும் துஆ

முனாஜாத்துகள்
01. பாவமீட்சி கோருவோரின் முனாஜாத்
02. முறையிடுவோரின் முனாஜாத்
03. இறையச்சம் கொண்டோரின் முனாஜாத்
04. இறைவனிடம் ஆவல்கொண்டோரின் முனாஜாத்
05. தெய்வீகத் தேட்டமுள்ளோரின் முனாஜாத்
06. இறைநன்றியறிந்தோரின் முனாஜாத்
07. இறைவனுக்கு வழிப்படுவோரின் முனாஜாத்
08. இறைவனை நாடியிருப்போரின் முனாஜாத்
09. தெய்வீகக் காதலரின் முனாஜாத்
10. தெய்வீகத்துணையை நாடுவோரின் முனாஜாத்
11. இறைவனின்பால் தேவையுடையோரின் முனாஜாத்
12. மெய்ஞ்ஞானியரின் முனாஜாத்
13. இறைநாமத்தை ஜெபிப்போரின் முனாஜாத்
14. பாதுகாப்பைத் தேடுவோரின் முனாஜாத்
15. பற்றற்றோரின் முனாஜாத்

Scroll to Top
Scroll to Top