அல்லாமா மஜ்லிஸி (றஹ்) அவர்கள் ஸாதுல் மஆத் எனும் நூலின் ரமழான் மாத்தின் செய்ய வேண்டிய அமல்களின் கடைசிப் பகுதியில் அவைகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். விரிவஞ்சி அவைகளை சுருக்கமாக தருகிறோம்.
இராத் தொழுகைகள் சம்பந்தமானவைகள்.
முதலாவது இரவு தொழுகை : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹா வுக்குப் பிறகு பதினைந்து தடவை சூரா இஹ்லாஸை ஓதுதல்.
இரண்டாவது இரவு : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு பத்து தடவை சூரதுல் கத்ரை ஓதுதல்.
மூன்றாவது இரவு : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹா, சூரா இஹ்லாஸ் ஐம்பது தடவை ஓதுதல்.
நான்காவது இரவு : இதில் எட்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹா, சூரதுல் கத்ர் இருபது தடவை ஓதுதல்.
ஐந்தாவது இரவு : இதில் இரண்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹா, சூரதுல் இஹ்லாஸ் ஐம்பது தடவை ஓதுதல். அதன் பின் நூறு தடவை اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ. என ஓதுதல்
ஆறாவது இரவு : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவும் சூரதுல் முல்கும் ஓதப்படும்.
ஏழாவது இரவு : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு பதின்மூன்று தடவை சூரதுல் கத்ர் ஓதுதல்.
எட்டாவது இரவு : இதில் இரண்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவும் சூரதுல் இஹ்லாஸும் பத்து தடவை ஓதுதல். ஸலாம் கொடுத்ததன் பிறகு ஆயிரம் தடவை சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்.
ஒன்பதாவது இரவு : மஃரிப், இஷாவுக்கு இடையில் ஆறு ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவும், ஆயதுல் குர்ஸஜயை ஏழு தடவை ஓதுதல். தொழுது முடிந்ததன் பிறகு ஐநூறு தடவை ஸலவாத்துச் சொல்லுதல்.
பத்தாவது இரவு : இருபது ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவும் சூரதுல் இஹ்லாஸும் முப்பது தடவை ஓதப்படும்.
பதினோராவது இரவு : இரண்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு முப்பது தடவை சூரதுல் கவ்தரை ஓதுதல்.
பனிரெண்டாவது இரவு : எட்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு முப்பது தடவை சூரதுல் கத்ரை ஓதுதல்.
பதிமூன்றாவது இரவு : நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு இருபத்தைந்;து தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல்.
பதின்நான்காவது இரவு : ஆறு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு முப்பது தடவை சூரதுல் ஸில்ஸாலை ஓதுதல்.
பதினைந்தாவது இரவு : இதில் நாலு ரகஅத் தொழப்படும். அதன் முந்திய இரண்டு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு நூறு தடவை சூரதுல் இஹ்லாஸையும் , மற்ற இரண்டு ரகஅத்தில் ஐநூறு தடவை ஓதுதல்.
பதினாறாவது இரவு : இதில் பனிரெண்டு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரா பாத்திஹாவுக்குப் பிறகு பனிரெண்டு தடவை சூரதுல் தகாதுரை ஓதுதல்.
பதினேழாவது இரவு : இரண்டு ரகஅத் தொழப்படும். அதன் முதலாவது ரகஅத்தில்; சூரா பாத்திஹாவுக்குப் பிறகு விரும்பிய ஒரு சூராவையும், இரண்டாவது ரகஅத்தில் நூறு தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல். ஸலாம் கொடுத்ததன் பிறகு நூறு தடவை لا إِلَهَ إِلا اللَّهُ. லாயிலாக இல்லல்லாஹு என சொல்லுதல்.
புதினெட்டாவது இரவு : நாலு ரகஅத் தொழப்படும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பிறகு இருபத்தைந்து தடவை சூரதுல் கவ்தரை ஓதுதல்.
பத்தொன்பதாவது இரவு : ஐம்பது ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவுக்குப் பிறகு சூரதுல் ஷில்ஸாலை ஓதுதல்.
இருபது, இருத்தொன்று, இருபத்திரெண்டு, இருபத்தி மூன்று, இருபத்தி நான்காவது இரவு : இந்த ஒவ்வொரு இரவிலும் விரும்பிய சூராக்களை ஓதி எட்டு ரகஅத் தொழப்படும்.
இருபத்தி ஐந்தாவது இரவு : எட்டு ரகஅத் தொழப்படும் அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவுக்குப் பிறகு பத்துத் தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல்.
இருபத்தி ஆறாவது இரவு : எட்டு ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவுக்குப் பிறகு நூறு தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல்.
இருபத்தி ஏழாவது இரவு : நாலு ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவுக்குப் பிறகு சூரதுல் முல்க்கை ஓதுதல். ஓது முடியாது என்றால் இருபத்தி ஐந்து தடவை சூரதுல் இஹ்லதஸை ஓதுதல்.
இருபத்தி எட்டாவது இரவு : ஆறு ரகஅத்து தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பிறகு ஆயதுல் குர்ஸியை நூறு தடவையும், சூரதுல் இஹ்லாஸை நூறுதடவையும் சூரதுல் கவ்தரை நூறு தடவையும் ஓதுதல். தொழுது முடிந்ததன் பிறகு நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத்துச் சொல்லுதல்.
இருபத்தி ஒன்பதாவது இரவு : இரண்டு ரகஅத் தொழுதல். அதில் பாத்திஹா சூராவிற்குப் பிறகு சூரதுல் இஹ்லாஸை இருபது தடவை ஓதுதல்.
முப்பதாவது இரவு : இதில் பதினைந்து ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பிறகு இருபது தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுதல். தொழுது முடிந்ததும் நூறு தடவை நபி (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத்துச் சொல்லுதல். இந்த தொழுகைகள் அனைத்தும் இரண்டு இரண்டு ரகஅத்துக்களாகவே நிறைவேற்றப்படும்.