இது லைலதுல் கதுருடைய இரவில் முதலாவது இரவாகும் லைலதுல் கத்ர் இரவு என்பது இரவுகளில் மிகச் சிறந்த இரவாகும். அதற்கு நிகரான இரவே கிடையாது அதில் செய்கின்ற ஒவ்வொரு அமலும் ஆயிரம் மாதங்கள் செய்யும் அமலைவிடச் சிறந்தது அதிலே அந்த வருடத்து விடயங்களனைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது. அதிலே மலக்குமார்களும் ரூகுல் அமீனும் அல்லாஹ்வுடைய அனுமதியைக் கொண்டு இறங்குகின்றனர்.லைலதுல் கத்ருடைய இரவில் செய்யும் அமல்கள் இரண்டு வகைப்படும். முதலாவது மூன்று இரவுகளின் ஒவ்வொரு இரவிலும் நிறை வேற்றப்படும் பொதுவான அமல்களாகும். இரண்டாவது இந்த இரவில் மாத்திரம் செய்ய வேண்டிய குறிப்பான அமலாகும்.
முதலாவது இதில் பலவகையான பல அமல்கள் செய்யப்படும்.
1) குளித்தல் மஜ்லிஸி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். சூரியன் மறையும் போது இஷாத் தொழுகைக்காக குளித்ததாக ஆகும் வண்ணம் குளிப்பது மிகவும் சிறந்ததாகும்.
2) இரண்டு ரகஅத் தொழுதல் அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவுக்குப் பிறகு சூரதுல் இஹ்லாஸை ஏழு தடவை ஓதுதல். தொழுது முடிந்ததும் எழுபது தடவை இதை ஓதுதல்.
أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَتُوبُ إِلَيْهِ
3) குர்ஆனை எடுத்து விரித்து உனக்கு முன் வைத்து இதை ஓதவாய்
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ بِكِتَابِكَ الْمُنْزَلِ وَ مَا فِيهِ وَ فِيهِ اسْمُكَ الْأَكْبَرُ وَ أَسْمَاؤُكَ الْحُسْنَى وَ مَا يُخَافُ وَ يُرْجَى أَنْ تَجْعَلَنِى مِنْ عُتَقَائِكَ مِنَ النَّارِ
மேலும் உனது தேவைகளைக் கேட்பாய்.
4) குர்ஆனைத் தலையின் மேல் வைத்து இதை ஓதுவாய்.
اللَّهُمَّ بِحَقِّ هَذَا الْقُرْآنِ وَ بِحَقِّ مَنْ أَرْسَلْتَهُ بِهِ وَ بِحَقِّ كُلِّ مُؤْمِنٍ مَدَحْتَهُ فِيهِ وَ بِحَقِّكَ عَلَيْهِمْ فَلا أَحَدَ أَعْرَفُ بِحَقِّكَ مِنْكَ
பத்துத் தடவை بِكَ يَا اللَّهُ என்றும்¸
பத்துத் தடவை بِمُحَمَّدٍ என்றும் ,
பத்துத் தடவை بِعَلِىٍّ என்றும் ,
பத்துத் தடவை بِفَاطِمَةَ என்றும்,
பத்துத் தடவை بِالْحَسَنِ என்றும்,
பத்துத் தடவை بِالْحُسَيْنِ என்றும் ,
பத்துத் தடவை بِعَلِىِّ بْنِ الْحُسَيْنِ என்றும்,
பத்துத் தடவை بِمُحَمَّدِ بْنِ عَلِىٍّ என்றும்,
பத்துத் தடவை بِجَعْفَرِ بْنِ مُحَمَّدٍ என்றும்,
பத்துத் தடவை بِمُوسَى بْنِ جَعْفَرٍ என்றும்,
பத்துத் தடவை بِعَلِىِّ بْنِ مُوسَى என்றும்,
பத்துத் தடவை بِمُحَمَّدِ بْنِ عَلِىٍّ என்றும்,
பத்துத் தடவை بِعَلِىِّ بْنِ مُحَمَّدٍ என்றும்,
பத்துத் தடவை بِالْحَسَنِ بْنِ عَلِىٍّ என்றும்,
பத்துத் தடவை بِالْحُجَّةِ என்றும் ஓதுதல்.
5) இமாம் ஹுஸைனை ஸியாரத் செய்தல்
6) இந்த இரவைப் உயிர்ப்பித்தல். அதாவது விழித்திருந்து அமல் செய்தல். ஹதீதிலே வந்துள்ளது எவர் ஒருவர் லைலதுல் கத்ருடைய இறவை உயிர்ப்பிக்கின்றாரோ அவருடைய பாவங்கள் அனைத்தும் மண்ணிக்கப்படும். அது வானத்திலுள்ள நட்சத்திரத்தின் எண்ணிக்கையை, மலைகளுடைய பாரத்தை கடல்களுடைய நிறையைக் கொண்டிருந்தாலும் சரி.
7) நூறு ரகஅத் தொழுதல் இது அதிக பலன்களைக் கொண்டதாகும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பிறகு பத்துத்தடவை சூரதுல் இஹ்லாஸை ஓதுவது மிகவும் சிறந்தது.
8) இந்த துஆவை ஓதுதல்.
اللَّهُمَّ إِنِّى أَمْسَيْتُ لَكَ عَبْدا دَاخِرا لا أَمْلِكُ لِنَفْسِى نَفْعا وَ لا ضَرّا وَ لا أَصْرِفُ عَنْهَا سُوءا أَشْهَدُ بِذَلِكَ عَلَى نَفْسِى وَ أَعْتَرِفُ لَكَ بِضَعْفِ قُوَّتِى وَ قِلَّةِ حِيلَتِى فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْجِزْ لِى مَا وَعَدْتَنِى وَ جَمِيعَ الْمُؤْمِنِينَ وَ الْمُؤْمِنَاتِ مِنَ الْمَغْفِرَةِ فِى هَذِهِ اللَّيْلَةِ وَ أَتْمِمْ عَلَىَّ مَا آتَيْتَنِى فَإِنِّى عَبْدُكَ الْمِسْكِينُ الْمُسْتَكِينُ الضَّعِيفُ الْفَقِيرُ الْمَهِينُ اللَّهُمَّ لا تَجْعَلْنِى نَاسِيا لِذِكْرِكَ فِيمَا أَوْلَيْتَنِى وَ لا غَافِلا لِإِحْسَانِكَ فِيمَا أَعْطَيْتَنِى وَ لا آيِسا مِنْ إِجَابَتِكَ وَ إِنْ أَبْطَأَتْ عَنِّى فِى سَرَّاءَ كُنْتُ أَوْ ضَرَّاءَ أَوْ شِدَّةٍ أَوْ رَخَاءٍ أَوْ عَافِيَةٍ أَوْ بَلاءٍ أَوْ بُؤْسٍ أَوْ نَعْمَاءَ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
கப்அமி அவர்கள் இந்த துஆவை இமாம் செய்னுல் ஆபிதீன் (அலை) அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார். ஹஸரத் அவர்கள் இதை இந்த இரவுகளில் நின்ற நிலையிலும், இருந்தும் ருகூஃ செய்த நிலையிலும் சுஜுது செய்த நிலையிலும் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள். அல்லாமா மஜ்லிஸி (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். இந்த இரவுகளில் செய்யப்படும் அமல்களில் தனக்காகவும் தனது பெற்றோர்கள் குடும்பத்தினர் உயிரேடு இருக்கின்ற, மரணித்த முஃமினான சகோதரர்களின் இன்மை மறுமை வெற்றிக்காகவும் பிரார்த்திப்பதோடு அவர்களின் பாவங்களுக்காக தௌபா எனும் பாவமன்னிப்புத் தேடுதல், திக்ர் செய்தல் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் ஸலவாத்து சொல்லுதல் அமல்களில் மிகவும் சிறந்த அமலாகும். மேலும் இந்த இரவுகளில் ஜுஷன் கபீரை ஓதுவது முஸ்தகப் என சில ஹதீதுகளிலே வந்துள்ளது.