இது அதிகமான பரக்கத்துடைய இரவாகும். இதிலே பலவகையான அமல்கள் செய்யப்படும். அவை
1) குளித்தல்
2) இமாம் ஹுஸைன் (அலை) அவர்களைச் சியாரத் செய்தல்.
3) சூரதுல் அன்ஆம், சூரத்துல் கஹ்ப், சூரத்துல் யாஸீன் ஆகிய சூராக்களை ஓதுதல். மேலும் இதை நூறு தடவை சொல்லுதல்.
أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَتُوبُ إِلَيْهِ.
4) குலைனி (ரஹ்) அவர்கள் இமாம் ஸாதிக் (அலை) அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ள இந்த துஆவை ஓதுதல்.
اللَّهُمَّ هَذَا شَهْرُ رَمَضَانَ الَّذِى أَنْزَلْتَ فِيهِ الْقُرْآنَ وَ قَدْ تَصَرَّمَ وَ أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ يَا رَبِّ أَنْ يَطْلُعَ الْفَجْرُ مِنْ لَيْلَتِى هَذِهِ أَوْ يَتَصَرَّمَ شَهْرُ رَمَضَانَ وَ لَكَ قِبَلِى تَبِعَةٌ أَوْ ذَنْبٌ تُرِيدُ أَنْ تُعَذِّبَنِى بِهِ يَوْمَ أَلْقَاكَ.
5) இருபத்தி மூன்றாவது இரவில் ஓதக் கூடிய இந்த துஆவையும் ஓதுதல்.
6) செய்க் குலைனி, சதூக், முபீத், தூஸி, செய்யித் இப்னு தாவூஸ்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள பல வகையான பிரியாவிடைக்கான துஆக்களை ஓதி ரமழான் மாதத்திற்கு பிரியாவிடை கொடுத்தல். அந்த துஆக்களில் சிறந்தது சஹீபதுல் ஸஜ்ஜாதிய்யாவிலுள்ள நாற்பத்து ஐந்தாவது துஆவாகும்.
செய்யித் இப்னு தாவூஸ் இமாம் ஸாதிக் (அலை) அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார். எவர் ஒருவர் ரமழான் மாதத்திற்கு அதன் கடைசி இரவில் இந்த துஆவை ஓதி பிரியாவிடை கொடுக்கின்றாரோ விடிவதற்கு முதல் அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான் என அவர்கள் சொன்னார்கள்.
اللَّهُمَّ لا تَجْعَلْهُ آخِرَ الْعَهْدِ مِنْ صِيَامِى لِشَهْرِ رَمَضَانَ وَ أَعُوذُ بِكَ أَنْ يَطْلُعَ فَجْرُ هَذِهِ اللَّيْلَةِ إِلا وَ قَدْ غَفَرْتَ لِى
செய்யித், செய்க் சதூக்(ரஹ்) அவர்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள். அவர் சொன்னார் நான் ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நோக்கி ஜாபிரே! இது ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையாகும். எனவே அதற்கு பிரியாவிடை கொடு அப்போது இதை ஓது.
اللَّهُمَّ لا تَجْعَلْهُ آخِرَ الْعَهْدِ مِنْ صِيَامِنَا إِيَّاهُ فَإِنْ جَعَلْتَهُ فَاجْعَلْنِى مَرْحُوما وَ لا تَجْعَلْنِى مَحْرُوما
செய்யித் இப்னு தாவூஸ், கப்அமி (ரஹ்) நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள்: எவர் ஒருவர் ரமழான் மாதத்தின் கடைசி இரவில் பத்து ரக்அத் அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் ஒரு தடவை சூரதுல் பாத்திஹாவும் பத்துத் தடவை சூரதுல் இஹ்லாஸும் ஓதி, அதன் ருகூஃ சுஜுதுகளில் சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்றும் ஓதி, ஒவ்வொரு இரண்டு ரகஅத்திலும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுத்து தொழுகின்றாரோ அவர் பத்து ரகஅத் தொழுது முடிந்ததன் பிறகு ஆயிரம் தடவை
أَسْتَغْفِرُ اللَّهَ وَ أَتُوبُ إِلَيْهِ
என ஓதி அல்லாஹுதஆலாவிடம் பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அது முடிந்ததன் பிறகு சுஜுது செய்து அதில்
يَا حَىُّ يَا قَيُّومُ يَا ذَا الْجَلالِ وَ الْإِكْرَامِ يَا رَحْمَانَ الدُّنْيَا وَ الْآخِرَةِ وَ رَحِيمَهُمَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا إِلَهَ الْأَوَّلِينَ وَ الْآخِرِينَ اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَ تَقَبَّلْ مِنَّا صَلاتَنَا وَ صِيَامَنَا وَ قِيَامَنَا
என ஓதுகிறாரோ, என்னை உம்மையின் பால் நபியாக அனுப்பிய இறைவன் மீது சத்தியமாக ஜிப்ரில் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலா கூறுவதாக இஸ்ராபீல் (அலை) அவர்களைத் தொட்டும் எனக்கு அறிவிக்கின்றார். அவர் சுஜுதிலிருந்து தலையை உயர்த்துவதற்கு முன் அல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான். மேலும் அவர்களுடைய நேன்பை ஏற்றுக் கொள்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.