பதின் மூன்றாவது இரவு
இது பீளுடைய இரவுகளில் முதலாவது இரவாகும் அதிலே மூன்று வகையான அமல்கள் செய்யப்படும்.
முதலாவது குளித்தல்
இரண்டாவது நான்கு ரகஅத்து தொழுதல் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூரா ஒருதடவையும், சூரதுல் இஃலாஸ் 25 தடவையும் ஓதுதல்.
மூன்றாவது இரண்டு ரகஅத்து தொழுதல் அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்தஹா சூராவிற்குப் பிறகு சூரத்து யாஸீன், முல்க், இஃலாஸ் இவைகளை ஓதுதல்.
பதினான்காவது இரவு
இரண்டு ஸலாமைக்(இருப்பைக்) கொண்டு நான்கு ரகஅத்து தொழுதல். ரமழான் மாதத்தில் அய்யாமுல் பீழுடைய நாட்களில் எவர் ஒருவர் இதை செய்கின்றாரோ அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். அது மழைத்துளியின் எண்ணிக்கை, மரத்தின் இலைகள், தரையிலிருக்கின்ற(வளிp மண்டலம்); மண்ணின் அளவைக் கொண்டிருந்தாலும் சரி.
பதினைந்தாவது இரவு
இது பரக்அத்து செய்யப்பட்ட இரவாகும். அதிலே பலவகையான அமல்கள் செய்யப்படும்.
1) குளித்தல்
2) இமாம் ஹுஐஸன் (அலை) அவர்களை சியாரத் செய்தல்.
3) பாத்திஹா சூரா, யாசீன், முல்க், இஃலாஸ் போன்ற கூராக்களை ஓதி ஆறு ரகஅத் தொழுதல்.
4) நூறு ரகஅத் தொழுதல். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவிற்குப் பிறகு சூரது இஃலாஸை பத்துத் தடவை ஓதுதல். செய்க் முபீத் அவர்கள் அல் முக்னிஆ எனும் நூலில் அமீருல் முஃமினீன் அலி (அலை) அவர்களைத் தொட்டும் அறிவித்திருக்கின்றார்: நிச்சயமாக எவர் ஒருவர் இதைச் செய்கின்றாரோ அல்லாஹுத் தஆலா பத்து மலக்குகளை மனிதர்கள்,; ஜின்களில் உள்ள அவரது எதிரிகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்காக அனுப்புகின்றான். மேலும் மரணத்தின் போது அவரை நரகிலிருந்து பாதுகாக்க அவரிடத்தில் முப்பது மலக்குகளை அனுப்புகின்றான்.
5) இமாம் ஸாதிக் (அலை) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரமழானுடைய பதினைந்தாவது இரவில் இமாம் ஹுஸைன்(அலை) அவர்களுடைய கபுரடிக்கு சமூகம் கொடுத்தவருக்கு என்ன இருக்கின்றது என கேட்கப்பட்;ட போது ஹஸரத் சொன்னார்கள். ரமழான் மாதத்தின் பதினைந்தாவது இரவு இமாம் ஹுஸைனுடைய கபுரடியில் இஷா தொழுகைக்குப் பிறகு, தஹஜ்ஜத் தவிர பத்து ரகஅத்து தொழுகின்றாரோ அவருக்கு சோபணம் உண்டாகட்டும். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் சூரதுல் பாத்திஹாவையும் ஓதிய பின் பத்து விடுத்தம் சூரதுல் இஃலாஸை ஓதி நரகிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டால் அல்லாஹு தஆலா அவiர் நரகிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர் என எழுதுகிறான். மேலும் தூக்கததில் அவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நன்மாராயனம் கூறக் கூடிய மலக்குகளையும், நரகைவிட்டும் அவனைப் பாதுகாக்கின்ற மலக்குகளையும் கானுகின்ற வரைக்கும் மரணிக்க மாட்டான்.