லைலத்துல் கத்ர் உடைய இரவுகளில் செய்யும் குறிப்பான அமல்கள்

பத்தொன்பாவது இரவில் செய்ய வேண்டிய அமல்கள்

1)  இதை நூறு தடவை ஓதுதல்.

   أَسْتَغْفِرُ اللَّهَ رَبِّى وَ أَتُوبُ إِلَيْهِ.

2) இதை நூறு தடவை ஓதுதல்.

  اللَّهُمَّ الْعَنْ قَتَلَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ.

3) ரமழான் மாதத்துடைய நாட்களில் செய்யும் அமல்கள் எனும் தலைப்பின் கீழ் ஆறாவது இலக்கத்தில் கூறப்பட்ட

………يَا ذَا الَّذِى كَان

இந்த துஆவை ஓதுதல்.

4) இதை ஓதுதல்

اللَّهُمَّ اجْعَلْ فِيمَا تَقْضِى وَ تُقَدِّرُ مِنَ الْأَمْرِ الْمَحْتُومِ وَ فِيمَا تَفْرُقُ مِنَ الْأَمْرِ الْحَكِيمِ فِى لَيْلَةِ الْقَدْرِ وَ فِى الْقَضَاءِ الَّذِى لا يُرَدُّ وَ لا يُبَدَّلُ أَنْ تَكْتُبَنِى مِنْ حُجَّاجِ بَيْتِكَ الْحَرَامِ الْمَبْرُورِ حَجُّهُمْ الْمَشْكُورِ سَعْيُهُمْ الْمَغْفُورِ ذُنُوبُهُمْ الْمُكَفَّرِ عَنْهُمْ سَيِّئَاتُهُمْ وَ اجْعَلْ فِيمَا تَقْضِى وَ تُقَدِّرُ أَنْ تُطِيلَ عُمْرِى وَ تُوَسِّعَ عَلَىَّ فِى رِزْقِى وَ تَفْعَلَ بِى

பின் உன்னுடைய தேவைகளை கேட்பாய்

இருபத்தியோராவது இரவு

இதனுடைய சிறப்பு பத்தொன்பதாவது இரவுடைய சிறப்பை விட மிகவும் உயர்ந்ததாகும். எனவே லைலதுல் கத்ருடைய இரவுகளில் பொதுவாக செய்யப்படும் அமல்கள் அதாவது குளித்தல், விளித்திருத்தல், சியாரத், ஏழு முறை இக்லாஸை ஓதித் தொழுதல், குர்ஆனைத் தலை மேல் வைத்தல், ஜுஷன் கபீர் துஆவை ஓதுதல் போன்றவைகளைச் செய்வது அவசியமாகும். ஹதீதுகளிலே இந்த இரவிலும் இருபத்தி மூன்றாவது இரவிலும் குளிப்பது, விளித்திருத்தல், முறைப்படி வணக்கம் செய்ய முயற்சித்தல் போன்றவைகளை செய்வது சுன்னத்து முஅக்கதாவென வந்துள்ளது. லைலதுல் கத்ருடைய இரவு இந்த இரண்டு இரவில் ஒன்றில் தான். பரிசுத்தவான்களான இமாம்களிடத்தில் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களிலே குறிப்பிடப்படாத மக்களுக்கு எப்போது என்று தெரியாத லைலதுல் கத்ரைப் பற்றிக் கேட்ட போது அவர்கள் சொன்னார்கள் இந்த இரண்டு இரவுகளில் உமக்கு முடியுமானவைகளைச் செய்து தேவையாவைகளைக் கேட்டுக் கொள்.

இதே அடிப்படையில் குலைனி (ரஹ்) அவர்கள் காபி எனும் நூலில் இமாம் ஸாதிக் (அலை) அhகளைத் தொட்டும் இந்த துஆவை ஆறிவித்துள்ளார்கள். ஹஸரத் அவர்கள் ரமழான் மாத்தின் கடைசிப் பத்தில் ஒவ்வொரு இரவிலும் இதனை ஓதுமாறு சொன்னார்கள்.

أَعُوذُ بِجَلالِ وَجْهِكَ الْكَرِيمِ أَنْ يَنْقَضِىَ عَنِّى شَهْرُ رَمَضَانَ أَوْ يَطْلُعَ الْفَجْرُ مِنْ لَيْلَتِى هَذِهِ وَ لَكَ قِبَلِى ذَنْبٌ أَوْ تَبِعَةٌ تُعَذِّبُنِى عَلَيْهِ

கப்அமி அவர்கள் பலதுல் அமீன் எனும் நூலின் ஓரத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒவ்வொரு இரவிலும் பர்லான, சுன்னத்’தான தொழுகைகளுக்குப் பிறகு இதை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

اللَّهُمَّ أَدِّ عَنَّا حَقَّ مَا مَضَى مِنْ شَهْرِ رَمَضَانَ وَ اغْفِرْ لَنَا تَقْصِيرَنَا فِيهِ وَ تَسَلَّمْهُ مِنَّا مَقْبُولا وَ لا ُؤَاخِذْنَا بِإِسْرَافِنَا عَلَى أَنْفُسِنَا وَ اجْعَلْنَا مِنَ الْمَرْحُومِينَ وَ لا تَجْعَلْنَا مِنَ الْمَحْرُومِينَ

மேலும் அவர்கள் எவர் ஒருவர் இதை ஓதுகின்றாரோ அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்கின்றான். அத்தோடு பாவங்களை விட்டும் காப்பாற்றுகின்றான்.

செய்யித் இப்னு தாவூத் அல் இக்பால் எனும் நூலில் இப்னு அபீ உமைர் மராஷிம் என்பவரைத் தொட்டும் அறிவித்துள்ளார்: ஹஸரத் இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் பிந்திய பத்தின் ஒவ்வொரு இரவிலும் இதை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ قُلْتَ فِى كِتَابِكَ الْمُنْزَلِ شَهْرُ رَمَضَانَ الَّذِى أُنْزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى لِلنَّاسِ وَ بَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَ الْفُرْقَانِ فَعَظَّمْتَ حُرْمَةَ شَهْرِ رَمَضَانَ بِمَا أَنْزَلْتَ فِيهِ مِنَ الْقُرْآنِ وَ خَصَصْتَهُ بِلَيْلَةِ الْقَدْرِ وَ جَعَلْتَهَا خَيْرا مِنْ أَلْفِ شَهْرٍ اللَّهُمَّ وَ هَذِهِ أَيَّامُ شَهْرِ رَمَضَانَ قَدِ انْقَضَتْ وَ لَيَالِيهِ قَدْ تَصَرَّمَتْ وَ قَدْ صِرْتُ يَا إِلَهِى مِنْهُ إِلَى مَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّى وَ أَحْصَى لِعَدَدِهِ مِنَ الْخَلْقِ أَجْمَعِينَ فَأَسْأَلُكَ بِمَا سَأَلَكَ بِهِ مَلائِكَتُكَ الْمُقَرَّبُونَ وَ أَنْبِيَاؤُكَ الْمُرْسَلُونَ وَ عِبَادُكَ الصَّالِحُونَ أَنْ تُصَلِّىَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَفُكَّ رَقَبَتِى مِنَ النَّارِ وَ تُدْخِلَنِى الْجَنَّةَ بِرَحْمَتِكَ وَ أَنْ تَتَفَضَّلَ عَلَىَّ بِعَفْوِكَ وَ كَرَمِكَ وَ تَتَقَبَّلَ تَقَرُّبِى وَ تَسْتَجِيبَ دُعَائِى وَ تَمُنَّ عَلَىَّ إِلَىَ‏ بِالْأَمْنِ يَوْمَ الْخَوْفِ مِنْ كُلِّ هَوْلٍ أَعْدَدْتَهُ لِيَوْمِ الْقِيَامَةِ إِلَهِى وَ أَعُوذُ بِوَجْهِكَ الْكَرِيمِ وَ بِجَلالِكَ الْعَظِيمِ أَنْ يَنْقَضِىَ أَيَّامُ شَهْرِ رَمَضَانَ وَ لَيَالِيهِ وَ لَكَ قِبَلِى تَبِعَةٌ أَوْ ذَنْبٌ تُؤَاخِذُنِى بِهِ أَوْ خَطِيئَةٌ تُرِيدُ أَنْ تَقْتَصَّهَا مِنِّى لَمْ تَغْفِرْهَا لِى سَيِّدِى سَيِّدِى سَيِّدِى أَسْأَلُكَ يَا لا إِلَهَ إِلا أَنْتَ إِذْ لا إِلَهَ إِلا أَنْتَ إِنْ كُنْتَ رَضِيتَ عَنِّى فِى هَذَا الشَّهْرِ فَازْدَدْ عَنِّى رِضًا وَ إِنْ لَمْ تَكُنْ رَضِيتَ عَنِّى فَمِنَ الْآنَ فَارْضَ عَنِّى يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا اللَّهُ يَا أَحَدُ يَا صَمَدُ يَا مَنْ لَمْ يَلِدْ وَ لَمْ يُولَدْ وَ لَمْ يَكُنْ لَهُ كُفُوا أَحَدٌ

 மேலும் இதையும் சேர்த்துச் சொல்லுவாய்.

يَا مُلَيِّنَ الْحَدِيدِ لِدَاوُدَ عَلَيْهِ السَّلامُ يَا كَاشِفَ الضُّرِّ وَ الْكُرَبِ الْعِظَامِ عَنْ أَيُّوبَ عَلَيْهِ السَّلامُ أَىْ مُفَرِّجَ هَمِّ يَعْقُوبَ عَلَيْهِ السَّلامُ أَىْ مُنَفِّسَ غَمِّ يُوسُفَ عَلَيْهِ السَّلامُ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ كَمَا أَنْتَ أَهْلُهُ أَنْ تُصَلِّىَ عَلَيْهِمْ أَجْمَعِينَ وَ افْعَلْ بِى مَا أَنْتَ أَهْلُهُ وَ لا تَفْعَلْ بِى مَا أَنَا أَهْلُهُ.

 மேலும் அல்காபி எனும் நூலில் முஸ்னத் ஆகவும் முக்னிஆ, மிஸ்பாஹ் போன்ற நூலில் முர்சலாகவும் அறிவித்துள்ள ரமழானின் இருபத்தி ஓராவது இரவில் ஓதக் கூடிய இதை ஓதுதல்.   

يَا مُولِجَ اللَّيْلِ فِى النَّهَارِ وَ مُولِجَ النَّهَارِ فِى اللَّيْلِ وَ مُخْرِجَ الْحَىِّ مِنَ الْمَيِّتِ وَ مُخْرِجَ الْمَيِّتِ مِنَ الْحَىِّ يَا رَازِقَ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ يَا اللَّهُ يَا رَحْمَانُ يَا اللَّهُ يَا رَحِيمُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ لَكَ الْأَسْمَاءُ الْحُسْنَى وَ الْأَمْثَالُ الْعُلْيَا وَ الْكِبْرِيَاءُ وَ الْآلاءُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّىَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَجْعَلَ اسْمِى فِى هَذِهِ اللَّيْلَةِ فِى السُّعَدَاءِ وَ رُوحِى مَعَ الشُّهَدَاءِ وَ إِحْسَانِى فِى عِلِّيِّينَ وَ إِسَاءَتِى مَغْفُورَةً وَ أَنْ تَهَبَ لِى يَقِينا تُبَاشِرُ بِهِ قَلْبِى وَ إِيمَانا يُذْهِبُ الشَّكَّ عَنِّى وَ تُرْضِيَنِى بِمَا قَسَمْتَ لِى وَ آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَ فِى الْآخِرَةِ حَسَنَةً وَ قِنَا عَذَابَ النَّارِ الْحَرِيقِ وَ ارْزُقْنِى فِيهَا ذِكْرَكَ وَ شُكْرَكَ وَ الرَّغْبَةَ إِلَيْكَ وَ الْإِنَابَةَ وَ التَّوْفِيقَ لِمَا وَفَّقْتَ لَهُ مُحَمَّدا وَ آلَ مُحَمَّدٍ عَلَيْهِ وَ عَلَيْهِمُ السَّلامُ.

இருபத்திரண்டாவது இரவில் ஓதும் துஆ

يَا سَالِخَ النَّهَارِ مِنَ اللَّيْلِ فَإِذَا نَحْنُ مُظْلِمُونَ وَ مُجْرِىَ الشَّمْسِ لِمُسْتَقَرِّهَا بِتَقْدِيرِكَ يَا عَزِيزُ يَا عَلِيمُ وَ مُقَدِّرَ الْقَمَرِ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ يَا نُورَ كُلِّ نُورٍ وَ مُنْتَهَى كُلِّ رَغْبَةٍ وَ وَلِىَّ كُلِّ نِعْمَةٍ يَا اللَّهُ يَا رَحْمَانُ يَا اللَّهُ يَا قُدُّوسُ يَا أَحَدُ يَا وَاحِدُ يَا فَرْدُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ لَكَ الْأَسْمَاءُ الْحُسْنَى وَ الْأَمْثَالُ الْعُلْيَا وَ الْكِبْرِيَاءُ وَ الْآلاءُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّىَ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى‏ أَهْلِ بَيْتِهِ وَ أَنْ تَجْعَلَ اسْمِى فِى هَذِهِ اللَّيْلَةِ فِى السُّعَدَاءِ وَ رُوحِى مَعَ الشُّهَدَاءِ وَ إِحْسَانِى فِى عِلِّيِّينَ وَ إِسَاءَتِى مَغْفُورَةً وَ أَنْ تَهَبَ لِى يَقِينا تُبَاشِرُ بِهِ قَلْبِى وَ إِيمَانا يُذْهِبُ الشَّكَّ عَنِّى وَ تُرْضِيَنِى بِمَا قَسَمْتَ لِى وَ آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَ فِى الْآخِرَةِ حَسَنَةً وَ قِنَا عَذَابَ النَّارِ الْحَرِيقِ وَ ارْزُقْنِى فِيهَا ذِكْرَكَ وَ شُكْرَكَ وَ الرَّغْبَةَ إِلَيْكَ وَ الْإِنَابَةَ وَ التَّوْفِيقَ لِمَا وَفَّقْتَ لَهُ مُحَمَّدا وَ آلَ مُحَمَّدٍ عَلَيْهِمُ السَّلامُ.

இருபத்தி மூன்றாவது இரவு

இந்த  இரவு முந்திய இரண்டு இரவுகளை விடவும் சிறந்த இரவாகும். அதிகமான ஹதீதுகளிலே வந்திருப்பதன் படி அது லைலதுல் கத்ருடைய இரவாகும். அது மிகவும் முக்கியமான இரவாகும். அதிலே ஒவ்வொரு செயலும், விடயமும் நிர்ணயம் செய்யப்படுகின்றது. அந்த இரவுகளிலே பல வகையான அமல்கள் செய்யப்படும். முந்திய இரண்டு இரவுகளில் அமல்களுடன் கீழ் வருபவைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டும்.

1)   அன்கவூத், ரூம் எனும் இரண்டு சூராக்களையும் ஓதுதல். எவர் ஒருவர் இந்த இரவில் இந்த இரண்டு சூராவையும் ஓதுகின்றாரோ அவர் சுவன வாசியாகும் என இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் சொன்னார்கள்.

2)   சூரத்துல் துகானை ஓதுதல்.

3)   சூரத்துல் கத்ரை ஆயிரம் தடவை ஓதுதல்.

4)    இந்த இரவில், எல்லா நேரங்களிலும் திரும்பத் திரும்ப ஓதுதல்.

اللَّهُمَّ كُنْ لِوَلِيِّكَ الْحُجَّةِ بْنِ الْحَسَنِ صَلَوَاتُكَ عَلَيْهِ وَ عَلَى آبَائِهِ فِى هَذِهِ السَّاعَةِ وَ فِى كُلِّ سَاعَةٍ وَلِيّا وَ حَافِظا وَ قَائِدا وَ نَاصِرا وَ دَلِيلا وَ عَيْنا حَتَّى تُسْكِنَهُ أَرْضَكَ طَوْعا وَ تُمَتِّعَهُ فِيهَا طَوِيلا 

5)   இந்த இரவினுடைய கடைசியில் குளித்தல். இந்த இரவில் குளிப்பதற்கும் அதில் முளித்திருந்து அமல் செய்வதற்கும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களை சியாரத் செய்வதற்கும். நூறு ரகஅத் தொழுவதற்கும் அதிகமா நன்மைகள் இருக்கின்றன. இவைகளை பல ஹதீதுகளிலேயும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. செய்க் அவர்கள் அத்தஹ்தீப் எனும் நூலில் அபீ பஸீர் என்பவரைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள். அவர் சொன்னார் இமாம் ஸாதிக் அவர்கள் எனக்கு இந்த இரவில் நூறு ரகஅத்து தொழும்படியும் அது பெரும்பாலும் லைலதுல் கத்ருடைய இரவாக இருக்கலாம் எனக் கூறினார்கள். அதன் ஒவ்வொரு ரகஅத்திலும் பாத்திஹா சூராவுக்குப் பிறகு பத்து தடவை சூரதுல் இஃலாஸை ஓதுமாறும் சொன்னார்கள். அப்போது நாம் இமாம் அவர்களே நின்று கொண்டு செய்ய எனக்கு சக்தி இல்லாது போனால் எவ்வாறு நிறைவேற்றுவேன் எனக் கேட்டதற்கு இருந்து கொண்டு தொழுமாறு சொன்னார்கள். அதற்கும் முடியாது போனால் என்ற எனது கேள்விக்கு, விரிப்பிலே சாய்ந்த நிலiயில்  அதை நிறைவேற்றுவாய் என்றார்கள்.

இருத்தி மூன்றாவது இரவில் ஓதும் துஆ

يَا رَبَّ لَيْلَةِ الْقَدْرِ وَ جَاعِلَهَا خَيْرا مِنْ أَلْفِ شَهْرٍ وَ رَبَّ اللَّيْلِ وَ النَّهَارِ وَ الْجِبَالِ وَ الْبِحَارِ وَ الظُّلَمِ وَ الْأَنْوَارِ وَ الْأَرْضِ وَ السَّمَاءِ يَا بَارِئُ يَا مُصَوِّرُ يَا حَنَّانُ يَا مَنَّانُ يَا اللَّهُ يَا رَحْمَانُ يَا اللَّهُ يَا قَيُّومُ يَا اللَّهُ يَا بَدِيعُ يَا اللَّهُ يَا اللَّهُ يَا اللَّهُ لَكَ الْأَسْمَاءُ الْحُسْنَى وَ الْأَمْثَالُ الْعُلْيَا وَ الْكِبْرِيَاءُ وَ الْآلاءُ أَسْأَلُكَ أَنْ تُصَلِّىَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَجْعَلَ اسْمِى فِى هَذِهِ اللَّيْلَةِ فِى السُّعَدَاءِ وَ رُوحِى مَعَ الشُّهَدَاءِ وَ إِحْسَانِى فِى عِلِّيِّينَ وَ إِسَاءَتِى مَغْفُورَةً وَ أَنْ تَهَبَ لِى يَقِينا تُبَاشِرُ بِهِ قَلْبِى وَ إِيمَانا يُذْهِبُ الشَّكَّ عَنِّى وَ تُرْضِيَنِى بِمَا قَسَمْتَ لِى وَ آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَ فِى الْآخِرَةِ حَسَنَةً وَ قِنَا عَذَابَ النَّارِ الْحَرِيقِ وَ ارْزُقْنِى فِيهَا ذِكْرَكَ وَ شُكْرَكَ وَ الرَّغْبَةَ إِلَيْكَ وَ الْإِنَابَةَ وَ التَّوْبَةَ وَ التَّوْفِيقَ لِمَا وَفَّقْتَ لَهُ مُحَمَّدا وَ آلَ مُحَمَّدٍ عَلَيْهِمُ السَّلام

பின் உனது தேவைகளைக் கேட்பாய்.

Scroll to Top
Scroll to Top